21 Feb 2009

இப்படியும் ரசிக்கலாம்

இருவேறு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை.

இரண்டு சம்பவங்கள் என்ன என்று சொல்லி விடுகிறேன்.முதல் சம்பவம் சென்னை சட்டகல்லூரி மாணவர் மோதல்.இரண்டாவது சம்பவம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நடந்த தாக்குதல்.

பத்து திருமணமாகாத ஆண்களை(கல்லூரி தோழர்களை) கொண்ட இரு தனி வீட்டில் நான் தங்கி உள்ளேன்.தனிப்பட்ட முறையில் அத்துணை பேரையும் எனக்கு நன்றாகவே தெரியும்.மிகவும் நல்ல குண நலன்களை கொண்டவர்கள் தான் அனைவரும்.

ஆனால் மேற்கண்ட இரண்டு சம்பவங்களை இவர்கள் தொலைகாட்சியில் பார்த்த பார்வை என்னை பெரிதும் அதிர்ச்சி கொள்ள வைத்தது.
இவர்கள் இந்த இரண்டு தாக்குதலையும் மிகுந்த புன்னைகைக்கு இடையில் ரசித்தே பார்த்தனர்.ஒவ்வொரு முறை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ...அவர்கள் மனதில் அது ஆழமாக பதிவதை உணர முடிந்தது.

இரண்டாம் முறை பார்க்கும் போது..

"இப்ப பாரு கால்லே போடுவான்"

"பேசிட்டு இருக்கான்ல ...இவனக்கு இப்ப மண்டைய பொளந்து ஓட உடுவானுங்க பாரு"

"இவன் என்ன தக்காளி சட்டினிய மூஞ்சில அப்பி இருக்கான்"

"காலை உடச்சு தொங்க விட்டு அடிகிரானுங்க"

இன்னும் பல ..

மூன்றாம் முறை ,நான்காம் முறை என செல்ல செல்ல ..இவர்கள் இன்னும் ஆழமாக அதில் ஊடுருவி விட்டார்கள்

இப்படி பெரும்பாலும் ரசிக்கும் வசனமாகவே இருந்து விட்டன.என்னால் உகிக்கவே முடியவில்லை ..ஏன் இப்படி ?எதனால்?

பெரும்பாலும் இவர்கள் சம்பவத்தின் பின்னணி ஏதும் தெரியாமலே இப்படி ரசிக்கிறார்கள்.இவர்களுக்கு ஊடகத்தில் தெரிய படுத்தும் போது ...அங்கே அடிவாங்குபவன் நல்லவனாகவும்,அடிப்பவன் கெட்டவனாகவும் தெரிகிறான்.மறைக்கப்படும் அநீதி குறித்து இவர்கள் அறியவிரும்பவில்லை ..நாம் எடுத்து கூறும் போதும்...

இவர்கள் மட்டும் அல்ல ..இந்த ஒவ்வொரு நொடிக்கும்,பேருந்திலும்,போது இடங்களிலும்,அலுவலகங்களிலும் இதை ரசித்து ரசித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

இப்படி குரூரமாக ரசிக்கும் மனநிலை எங்கு இருந்து வந்தது?

யாருக்கேனும் பதில் தெரியுமா?

20 Feb 2009

கரைகிறேன் நினைவுகளாய்

போதை தரும் உன்,
நினைவு அலைகள் - என்,
காலடி தொட.......,
கனவுகளில் கரைகிறேன்,
உன் நினைவுகளாய்.

போதை நட்பு

மதுக்கோப்பையின் போதையை போலவே,
உன் வார்த்தையின் கனிவு,
அப்பட்டமாய் உளறுகிறேன்,
அடுக்கடுக்காய் உண்மைகளை,
உள்ளத்தில் ஏதோ முத்திரை இட்டாய்,
உன்னத நட்பின் அடையாளமோ?

19 Feb 2009

பெங்களூர் போராட்டம் முதல் முயற்சி!

பெங்களூரில் கடந்த ஞாயிறு(15/02/2008) ல் அண்ணன் அறிவழகன் தலைமையில் ஒரு போராட்டத்தை நடத்தி காட்டி இருக்கிறோம். கொஞ்சம் நிதானமாக திரும்பி பார்க்கும் பொழுது போராட்டத்தின் அடித்தளம் என்ன என்று சிந்திக்க தோன்றுகிறது. ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளை தமிழனாக நமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களை போலத்தான் எங்களுக்கும் இருந்தது. எங்களிடம் உணர்வு இருந்ததே தவிர அது நடைமுறை சாத்தியமா என்ற ஐயமே எப்போதும் எங்களிடம் மிச்சம் இருந்தது. பெங்களூரில் தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணமுடைய அண்ணன் அறிவழகன் அவர்கள் ஒரு சந்திப்பின் போது ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து இனப்படுகொலைக்கு எதிரான நமது உணர்வுகளை உலகிற்கு காட்ட வேண்டும் என்று அவரது எண்ணத்தை கூறினார். பெங்களூரில் தமிழ் உணர்வாளர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான பணி அல்ல. மேலும் தமிழினம் சார்ந்த போராட்டத்திற்கு அனுமதி பெறுவது அவ்வளவு எளிதானது இல்லை. படம் பார்க்க கிரிக்கெட்டு பார்க்க கூட்டம் கூடும் தமிழன் இன உணர்வு சார்ந்த போராட்டம் என்றால் 'நமக்கு எதுக்குடா வேண்டாத வேலை' என்பான். அப்படியே 'நம் இனத்துக்கு நாமில்லாமல் வேறு யார் போராடுவா?' என்று கேள்வி எழுப்பினால் நமக்கு 'தமிழ் திவிரவாதி' பட்டம் கண்டிப்பாக கிடைக்கும். அதனாலே நாங்கள் கையறு நிலையில் சில நாட்களை கழித்தோம். முத்துகுமரனின் தியாகம் முகத்தில் அறைந்தது போன்ற ஒரு பாதிப்பை எங்களிடம் ஏற்படுத்தியது. ஒரு உணர்வாளன் தன் உயிரையே கொடுத்து இருக்கிறான் நம்மால் ஒருநாள் போராட்டத்தை நடத்த முடியாதா
என்ற கேள்வியை எங்களுள் விதைத்து சென்றான் மாவீரன் முத்துகுமார்


உண்ணாநிலை போராட்டம் அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்காது என்று சொன்ன அறிவழகன் அண்ணன் அறவழி போராட்டத்திற்கு அனுமதி பெறுவது சாத்தியம் என்ற உண்மையை சொன்னார். நாங்கள் சந்தித்த பொழுது நான் வெங்கடேசன் மாற்றும் அண்ணன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தோம். அறப்போராட்டத்தில் கண்டிப்பாக உணர்வாளர்களை ஒருங்கிணைத்து மாபெரும் வெற்றியாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. வெறும் மூன்றில் துவங்கிய எங்கள் பயணம் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி நகர துவங்கியது. அறிவழகன் அண்ணன் போராட்டம் குறித்த இழையை போட்ட பின்னர் சிறிது சிறிதாக ஆதரவு பெருகியது. உடனுக்குடன் எங்களுக்கு அழைப்பு விட்டு போராட்டத்தை எப்படி நடத்துவது என்று பலவாறு முடிக்கிவிடும் பணியை அண்ணன் பார்த்துக்கொண்டார். நிகழ்சி எப்படி நடத்துவது என்ற கூட்டம் அடிக்கடி நடந்து கொண்டே இருந்தது. சந்திப்பின் போது வரும் தோழர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே இருந்தது.வேல்முருகன் மோகன் மணிமாறன் தமிழ்வேந்தன் எழில் என்று உணர்வாளர்களின் கூட்டம் போராட்டத்தை புது உத்வேகத்துடன் நகர்த்தியது. அலைபேசிகளின் வாயிலாக போராட்டத்திற்கான ஆதரவுகளை நண்பர்கள் தெரிவித்தார்கள். பதாகைகள் தட்டிகள் துண்டு பிரச்சாரம் வழங்குவது போன்ற பணிகளை பகிர்ந்ததோடு நிகழ்சிநிரலும் தயாரானது. இதுவரை எந்த ஒரு போராட்டத்தையும் முன்னின்று நடத்திறாத இளம்கன்றுகளான நாங்கள் களம் காண தயாராகினோம்.அவரவரர் அவர்களது பணிகளில் மும்முரமாக இயங்கினோம். போராட்ட நாளும் வந்தது.

ஞாயிறு காலை திட்டமிட்டபடி மகாத்மா காந்தி சாலையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மிக நேர்த்தியாக இருநூறுபேர் உட்காரும்படி பந்தல் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒன்பது மணியளவில் ஒன்றுகூடிய நாங்கள் பேனர்களை கட்டும் பணிகளில் மும்முரமானோம். வாழை அமைப்பை சேர்ந்த நண்பர்கள் சென்னை தகவல் தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த நண்பர்கள் மற்றும் நமது 'உலகத்தமிழ்மக்கள்' அரங்கின் தலைமை நிர்வாகி 'சசி', நண்பன் 'கோபி', ரமணன். நிதி போன்ற நண்பர்கள் உடனிருந்த வேளையில் நமது அறப்போராட்டம் துவங்கியது. பந்தல் முழுக்க உடல்சிதறிய எம்தமிழ் உறவுகளின் புகை படங்கள் அடங்கிய பெரிய புகைப்படபலகைகள் இருந்தன. புகைப்பட பலகைகளை வடிவமைப்பதில் தோழர் மோகன், வெங்கடேஷ், கருப்பு, மணிமாறன் எடுத்து கொண்ட பங்களிப்பை நாம் பந்தலில் பார்க்க முடிந்தது. இளகிய மனம் படைத்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைக்கும்விதமாக வடிவமைத்து இருந்தார்கள். நிகழ்வு துவங்குவதற்கு முன்னர் அந்த சாலையின் வழியே சென்ற ஊனமுற்ற பெரியவர் இதனை பார்த்துவிட்டு தானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கூறியதோடு நமது பந்தலில் முதல் நபராக அமர்ந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அந்த முதியவரின் இன உணர்வு இளையோர் சமூகத்திடம் இல்லையே என்ற வருத்தத்தோடு நிகழ்வின் முதல் நிகழ்ச்சியான மாவீரன் முத்துகுமாருக்கு மலர்மாலை அந்த பெரியவரின் கைகளால் இடப்பட்டது. அதனை தொடர்ந்து தோழர் வெங்கடேஷ் வரவேற்புரை கொடுத்தார். வரவேற்பு உரையோடு இலங்கை அரசின் மனித உரிமைகளை மீறும் செயலை சுட்டிகாட்டி நடப்பது போர் அல்ல இனப்படுகொலை என்று ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்து வரவேற்புரையை நிறைவுசெய்தார்.

நிகழ்வின் விளக்க உரையை துவங்கிய அறிவழகன் இனப்படுகொலையை தடுத்து நிறுத்து என்ற வேண்டுகோளோடு. சென்னையில் இருந்து கொண்டு நக்கீரன் ஆசிரியருக்கு மிரட்டல்விடுக்கும் இலக்கைதூதுவனுக்கு எச்சரிக்கைமணி அடித்ததோடு ஈழவரலாறு தெரியாமல் தமிழன் எதற்கு இலங்கை போனான் என்று பிதற்றிய ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு பத்தி ஆதங்கப்பட்டார். ஜெயலிதா வரலாறு நமக்கு தெரியாதா அண்ணா? என்று எண்ணத்தோன்றியது. தமிழினவிரோதிகளை தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் என்ற முழக்கத்தோடு தனது முன்னரை முடித்து கொண்டார்.கருப்பு என்ற வேல்முருகன் அவர்கள் தொடர்முழக்கங்களை துவங்கி வைத்தார். 'காந்தி தேசம் கொடுக்குதே புத்ததேசம் கொல்லுதே', தமிழ் ஈழத்தை அங்கீகரி, ராணுவ உதவிகளை திரும்பிவாங்கு,மழலைகளை கொள்ளாதே! போன்ற முழக்கங்களும் பதாகைகளில் உள்ள இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் தோழர்களின் துண்டு பிரசுரங்கள் எங்களை கடந்து சென்ற மக்களின் மனசாட்சிகளை தட்டியிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஊடகவியலாளர்கள் அறிவழகன் அண்ணனையும் தோழர் வேல்முருகனையும் கேள்விகளால் துளைத்து எடுத்த பொழுதும் நம் தோழர்கள் தெளிவாக விளக்கினர் அங்கே நடைபெறும் போரை முன்னின்று நடத்துவது இந்தியா என்று. போரை நிறுத்துவது இந்தியாவின் கைகளிலேயே இருக்கிறது மிகத்தெளிவாக விளக்கினர்.

மகாத்மா காந்தி சாலையில் நாங்கள் பந்தலிட்டிருந்த இடம் மையமான இடம் போக்குவரத்தில் அதிகமான மக்கள் கடந்து செல்லும் இடம். கடந்து செல்லும் மக்களில் பலர் அங்கு நாங்கள் வைத்திருந்த பதாகைகளை ஆர்வமுடன் கண்டனர் புகைப்படங்கள் பார்த்த உள்ளம் பதறினர் பெண்கள். துண்டு பிரச்சாரங்களை தோழர்கள் மணிமாறன், வெங்கடேஷ் ராஜூ(நம் அரங்க உறுப்பினர்தான்) எழில் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இடையிடையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் முழக்கங்கள் இடப்பட்டன. தமிழ்சங்கம் நடத்தும் பேரணி இருப்பதாலும் கன்னட அமைப்பு ஒன்று எங்கள் போராட்ட இடத்தை கேட்டதாலும் 12:00 மணியளவில் எனது நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நன்றி உரை வழங்கும்பொழுது தமிழின தலைவனா? தமிழின துரோகியா? என்று பேசி உணர்ச்சி கொந்தளிப்போடு உரையை நிறைவு செய்ய வேண்டியதாகியது. ஈழத்தை நேரில் கண்ட தோழரின் உரைநாங்கள் நிகழ்வை முடிக்கும் தருவாயில் அங்கே எங்களோடு நின்றிருந்த தோழர் ஒருவர் வெகு நேரமாக பேசவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கொண்டிருந்தார். நாங்களும் அவரை பேசும்படி அனுமதி கொடுத்தோம். ஈழத்திற்கு அடிக்கடி தொழில் விடயமாக சென்றுவரும் தோழர் ஈழத்தின் தற்போதைய நிலவரம் பற்றி கூறினார். இங்கே படங்களில் இருப்பது போன்று கைகால் சிதறி ரோட்டில் சிதறி கிடக்கும் குழந்தைகளை தினம்தினம் பார்ப்பவன் நான். அங்கே எப்போதும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட வண்ணம் இருக்கிறது. தமிழனின் உடைமைகள் சாலையில் போட்டு விற்கப்படுகிறது. பச்சை குழந்தைகூட தமிழன் என்றால் திவிரவாதிதான். உடல்சிதறிய பிஞ்சுக்களை என் கரங்களாலே தூக்கி இருக்கிறேன், சார்க் மாநாட்டுக்கு போன இந்திய படைகள் இன்னும் அந்த மண்ணிலே தங்கி போருக்கு துணை போவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். அங்கே செத்துவிழும் தமிழனின் பிணத்தை எடுத்து புதைக்கவும் ஆளில்லை என்று ஈழத்தின் நிலவரம் அவர் சொன்ன பொழுது சொல்ல முடியாத துயரத்தில் எங்கள் மனது ஆழ்ந்தது. எம்தமிழ் இனத்தின் துயரம் நாமன்றி யார் துடைப்பார் என்ற எண்ணமும் எழுந்தது. இந்திய அரசு நேரடியாக ஈழத்தில் இந்தியப்படைகளை இறக்கி தமிழனுக்கு செய்யும் துரோகம் தோழரின் உரையால் தோலுரிக்கப்பட்டது.

போராட்டம் எங்களுள் விளைத்த நம்பிக்கைகள்!
பெங்களூர் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்றாலே இன உணர்வு செத்துப்போய் தாங்கள்தான் மாபெரும் அறிவாளி கூட்டம் தங்களை அமெரிக்கர்கள் போலே காட்டிக்கொள்ள மெனக்கெடும் கூட்டம் என்று நினைத்து கொண்டிருந்த பொதுமக்களுக்கு இல்லை இல்லை இந்த கூட்டத்தில் இனத்திற்காக குரல்கொடுக்கும் இளைஞர்களும் உண்டு என்று அடையாளம் காணச்செய்திருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வாளர்கள் ஒவ்வொருவருமே தங்களால் குறைந்தது நான்கு நண்பர்களை அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைத்துவர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இதுவரை பெங்களூரில் ஐடி இளைஞர்களுக்கு தமிழ் உணர்வை பறைசாற்றும் அமைப்புக்கள் இல்லை இனிமேல் நமது உலகத்தமிழ் மக்கள் அரங்கு அப்படி இருக்கும். தூங்கி கொண்டிருக்கும் தமிழனின் இன உணர்வுகளை தட்டி எழுப்பும். தொடர்ந்து தமிழனுக்காக குரல் கொடுக்கும். இந்த போராட்டம் வெறும் ஒத்திகையே பெங்களூரில் அடுத்தடுத்து தமிழனின் குரல் ஓங்கி ஒலிக்கும் அது ஈழத்தில் இன்னலுறும் தமிழனுக்கு ஆதரவை கொடுக்கும் இந்திய தேசியத்தின் பகையை உலகிற்கு விளக்கும். இளம் கன்றுகளை முறைப்படுத்தி வழிநடத்திய அண்ணன் அறிவழகனுக்கு இது பெங்களூரில் முதல்வெற்றியை பெற்றுதந்திருக்கிறது ஈழத்தில் அமைதி திரும்பும்வரை எங்களுக்கு ஓய்வு இல்லை தொடர்ந்து போராடுவோம். ஓர்குட் வாய்பேச்சு வீரர்களின் தளம் என்பதை பொய்யாக்குவோம்

தமிழன்பனின் நன்றியுரை!
உணர்வாளர்களை அடையாளம் காணவைத்த உலகத்தமிழ் மக்கள் அரங்கத்திற்கு முதல் நன்றி. எங்கள் அழைப்புகேட்டு உடல்நிலை சரியில்லாத பொழுதும் ஓடோடி வந்த 'செயல்வீரர்' அண்ணன் சசி, நண்பன் கோபி, ரமணன், நிதி போன்ற சென்னை தோழர்களுக்கும் நன்றி. அரங்கில் செய்தியை பார்த்துவிட்டு தன்னோடு பத்து நண்பர்களை அழைத்து வந்த ராஜூவிற்கு நன்றி.தன் வலைப்பூவில் நமது போராட்ட செய்திகளை வெளியிட்டதோடு அதிகாலையிலேயே நம்முடன் வந்து கலந்து கொண்ட அரவிந்த் அவர்களுக்கு நன்றி. வாழை அமைப்பின் தோழர்களுக்கும் சென்னை தகவல்தொழில்நுட்ப தோழர்களுக்கும் நன்றி. கலந்து கொள்ளமுடியாவிட்டாலும் உணர்வால் ஆதரவு தந்த தோழர்கள்:நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாவிட்டாலும் நமது போராட்டத்தை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. அஸ்திரேலியாவில் இருந்துகொண்டு போராட்ட தகவலை தனது தம்பிக்கு சொல்லி அனுப்பி வைத்த தோழர் ஜெயக்குமாருக்கும், போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு தனது வலைப்பூவில் நமது செய்தியை வெளியிட்ட இந்தோனிசியாவில் வாழும் தோழர் மதிபாலாவிற்க்கும், எங்களை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த நார்வே தமிழர் விஜயசங்கருக்கும் சென்னையில் இருந்து கொண்டு போராட்டத்திற்கு ஆலோசனைகளை வழங்கிய சகோதரி குட்டிக்கும் குறுந்தகவல் மூலம் வாழ்த்து அனுப்பிய தம்பி பார்த்திபனுக்கும் தமிழன்பனின் நன்றிகள் உரித்தாகுக. ஒன்றாக பணியாற்றி மேலும் பல போராட்டத்தை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்த சக தோழர்களுக்கு நன்றி நன்றி நன்றி!

தகவல் -தமிழன்பன்

உலக தமிழ் மக்கள் அரங்கம் காண ..
http://www.orkut.co.in/Main#Communities.aspx

17 Feb 2009

கலாச்சாரம் ஏன் வேண்டும்?


எனது சென்ற பதிவாய் கலாச்சாரம் யாருக்கு மட்டும் என்பதை பதிந்து...அதன் மூலம் கலாச்சாரம் ஆணுக்கும்,பெண்ணுக்கும் பொதுவானது என்பதை மேற்கோள் காட்டும் விதமாய் முயற்சி செய்து இருந்தேன்.

இந்த பதிவில் எனது எண்ணப்படி ஏன் கலாச்சாரம் வேண்டும் என்பதை பற்றி ஆராய்ச்சிக்கு விழைகிறேன்.

ஒழுக்க நெறிமுறையே கலாச்சாரத்திற்கு ஆணிவேராக இருக்க இயலும்.கலாச்சாரம் என்பது ஒரு சமூகம் தனக்கான,தன் மக்களுக்கான .ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒழுக்க கோட்பாட்டை கொண்டு இருப்பதே ஆகும்.

சரி எத்தகைய ஒழுக்க கோட்பாடு?
மன ஒழுக்கம்,செயல் ஒழுக்கம்,பேச்சு ஒழுக்கம்.

மன ஒழுக்கம்
தனிப்பட்ட மனிதர்கள் சம்பந்த பட்டதாகி விடுகிறது.மனதளவில் ஒருவன் ஒழுக்கமா இருக்கிறானா? இல்லையா? என்பது ஒரு போதும் தெரிய போவது இல்லை.ஆக இத பத்தி அதிகம் பேச வேண்டியது இல்லை.

பேச்சு ஒழுக்கம்
ரொம்ப முக்கியமானது ...ஆனால் ஒரு போதும் இதை நாம் கலாச்சார அங்கமாக பார்ப்பதே இல்லை.நம்ம தான் தினம் தினம் பார்த்து இருப்போமே...ஒரு நாளைக்கு சாலையில் போகும் போது ஒரே ஒரு கெட்ட வார்த்தையாவது கேட்டு விடுவோம்.

கடைசியா இப்ப அது ஒரு கலாச்சார வடிவம் பெற்று விட்டது.மதுரை பக்கம் பார்த்தீர்களானால் ...நட்புரீதியாக பேசிக்கொள்ளும் நண்பர்கள் கூட .."ஒத்தா" என்ற வார்த்தையை அழகாக(!?) பயன்படுத்துவார்கள்.

செயல் ஒழுக்கம்
இதுதான் இன்றைக்கு கலாச்சாரத்தின் வடிவமாய் பார்க்கப்படுகிறது.அதிலும் பெரும்பாலும் பெண்களுக்கு.இன்னைக்கு இது என்ன சொல்லுதுனா...

ஆண்கள் குடிப்பது தப்பு.பெண்கள் குடித்தால் கலாச்சார மீறல்.

ஆண்கள் எப்படியும் உடை அணியலாம்.போது இடத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.பெண்கள் கெண்டை கால் தெரிந்தாலும் கலாச்சார மீறல்.

தேடிச்சென்று பெண்ணை புணர்தல் ஆணின் உரிமை.மனம் கவர்ந்தவனை காதலித்தாலே அது கலாச்சார மீறல்.

இப்ப தெரியுதோ செயல் ஒழுக்கம் யாருக்கு சொல்ல பட்டு இருக்குன்னு.

ஒழுகத்துகான நடுநிலை எண் 5 என கொள்வோமே ஆனால் இங்கு ஆண்களுக்கான ஒழுக்கம் 1 இருந்தால் போதும் எனவும் ..பெண்களுக்கு 9 இருக்க வேண்டும் எனவும் நம்ம கலாச்சார கட்டமைப்பு சொல்கிறது.

சரி எல்லாம் சரித்தான் ...எதுக்கு இந்த கலாச்சாரம்?

1)இந்த ஒழுக்க கலாச்சார கட்டமைப்பு இல்லை என்றால்,நமக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

2)வீட்டுக்கு எப்படி அஸ்திவாரம் போட்டு ,செங்கல்,சிமிண்டுன்னு தரமா பாத்து வீட்ட கட்டுகிறோமோ அதை மாதிரி இந்த ஒழுக்க கட்டமைப்பு.
ஒழுங்கா இல்லை என்றால் எல்லாம் கோவிந்தா.

ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் அப்படின்னு சொல்லை என்றால் அடிபிடி சண்டை வந்து ....உயிரிழப்பு தான் ஏற்படும்(இங்க கொஞ்சம் அதிகமா ஒருவனுக்கு பலவும்,கொஞ்சூண்டு ஒருத்திக்கு பலவும் இருக்கு)

சரி போன பதிவுல ராம் சேனாவுக்கு எதிரா பெண்ணுக்கு ஆதரவாய் எழுதினேன்..அப்ப இந்த பொண்ணுங்க பண்ணுனது சரியா?

இரண்டு வாக்கியங்களை நான் இங்கு மேற்க்கோள் காட்ட விரும்புகிறேன்.
Freedom is self resposible(தமிழ்ல தெரியலை)

உன்னுடைய உரிமை என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை மட்டுமே.

முதலில் உள்ளது உங்களுக்கு எளிதாய் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
இரண்டாவது வாக்கியத்தை கொஞ்சம் நிகழ் கால நடப்புடன் சம்பந்த படுத்த விரும்புகிறேன்.

பெண்ணின் ஆடை,ஆணின் ஆடை என்பது அவர்கள் தனிப்பட்ட விஷயம் ஆகி விடுகிறது.ஆனாலும் பெண்ணின் ஆடை ஆண் தன்னை தூண்டுவதாயோ,ஆணின் ஆடை பெண்ணை தூண்டுவதாயோ அமையும் எனில் அது கேள்விக்கு உள்ளாக்க படவேண்டும்.

என்ன இது ஆணாதிக்க சமூகமாய் உள்ளது.ஆகையால் பெண்கள் மட்டுமே கேள்விக்கு உட்படுகிறார்கள்.

சினிமாவில் பெண்கள் அறைகுறையாய் ஆடினால் தான் தப்பு.அர்ஜுன்,ஆர்யா,சித்தார்த் ஆகியோர் உள்ளாடையுடன் காட்சி தருவது சரியே.(படத்திற்கு தேவை என்று சொல்வீர்களே எனில்,நான் பெண்ணின் ஆடை குறைப்பை ..ஆணாதிக்க சமூகத்தில் பட ஓட்டத்திற்கு தேவை என்று சொல்வேன்)

ஆக கலாச்சாரம் வேண்டும்..எப்படி?ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய்...

இல்லை எனில் கலாச்சாரம் குறித்து பேசாது இருப்பீர்களாக.

12 Feb 2009

கலாச்சாரம் யாருக்கு மட்டும்?


எந்த ஒரு நேர்த்திப்படுத்துதல் எண்ணமும் இல்லாமல் மனம் திறந்த ஓடையாகவே இந்த பதிவை எழுதுகிறேன்.எதிர்ப்புகளை எதிர் நோக்கியே.எதிர்ப்புகளை கொணரும் அளவுக்கு வீரியம் இருக்குமா என்பதை நான் அறியேன்.

இங்கு மனித மூளைகளை மட்டப்படுத்தி இருக்கும் பார்ப்பனிய கட்டமைப்பின் நீளமும்,அது வரையறுக்கும் கலாச்சாரத்தின் தன்மையும்,ஆணாதிக்க கையின் நீளமும் சொல்லி புரிய வைப்பது எளிதல்ல.

கலாசாரம் யாருக்கு மட்டும் என்பதன் பொருட்டு எத்தனை கேள்விகளை எழுப்பினாலும்.

"அதெப்படி" என ஒற்றை வார்த்தையில் அனாசியமாக தட்டி கழித்து விட்டு போகும் படிக்கு வளர்த்திருக்கிறது மக்களை.

பெண்ணியம் பேசும் போது பெரும்பாலும் தோற்றுப்போகும் இடம் அவர்களின் ஆடை நேர்த்தியாகவே இருக்கிறது.அவர்களின் ஆடைகளை அவர்களே தெரிவு செய்து கொள்ளும் உரிமைகள் அவர்களுக்கு உண்டென பேசிப்பார்ப்போமே ஆனால் ...இந்த பார்ப்பனிய கட்டமைப்பில் மூளை மங்கி போனவர்கள் "கற்பழிப்பை நியாயப்படுத்தும்" உரிமை போராட்டத்திற்கு இட்டுச்சென்று இடுவர்.

எனவே இதை ஒப்பிடுதல் முறையிலேயே பேசுவதுதான் உசித்தமாகும்.

"ஆணென்ன பெண்ணென்ன,நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்" இந்த தத்துவ சித்தாந்தங்களை எல்லாம் ராம் சேனா அமைபிற்கு கொடிபிடிப்பவர்களுக்கு ரசிக்க மட்டுமே தெரியும்.

ஒப்பிடுதல் கேள்விகளுக்கு வரும்முன்னர் ஒரு சிறு தகவலை பகிர்ந்து கொள்கிறேன்பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வருகைக்கு முன்னர் இருந்தே இங்கு 30 விழுக்காடு பெண்களுக்கு குடிப்பழக்கம் என்பது உண்டு.எனது தாத்தா பாட்டி காலத்தில் மார்பு கச்சை அணியும் பழக்கம் கிடையாது.

மங்களூரு சம்பவத்தில் ராம் சேனா அமைப்பின் செயலானது கலாச்சார காவல் செயல் என்பதை காட்டிலும்,ஆணாதிக்க நிலை நாட்டல் எனக்கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

பாதிக்க பட்ட பெண்களின் உடைகளை பற்றி பேசுபவர்களே,பாதிப்பை உள்ளாக்கியவர்கள் அணிந்து இருந்தது பாரம்பரிய உடையா?பெண்கள் பப்பிற்கு செல்லக்கூடாது என சொல்பவர்கள்.ஆண்கள் செல்வதை ஏன் பழிக்கவில்லை?

ஒழுக்கம் தான் கலாச்சாரத்தின் தூண் என்றால்..ஆண் என்றால் குடிப்பழக்கம் கொள்ளலாம் என்பது எத்தகைய நியாயம்??

ஒழுக்கம் மனதோடு சம்பந்த பட்டது என்றால்?பெண்களை பலவந்த படுத்தி புணரும் ஆண்வர்கதினரின் ஒழுக்கம் எத்தகைய கேள்விக்கு உரியது?

பேருந்து நிலையங்களில் பலர் பார்க்கும் பொருட்டு ..ஆண் குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பவர்களை தாங்கள் பார்த்தது இல்லையா?அவர்களின் மேலே ஏன் கலாச்சார காவல் பாயவில்லை?

குடித்து விட்டு நிர்வாணமாயும்,அலங்கோலமாயும் கிடக்கும் கலாச்சார ஆண்களுக்கு எதிரான கலாச்சார காவலின் நடவடிக்கை என்ன?

ராம் சேனா அமைப்பினால் கலாசார அமைப்பை வரையறுக்க இயலுமா?

மங்களூரு சம்பவத்தினை நியாயபடுத்த முனைபவர்களும்,அவர்கள் கூறும் கலாச்சார கோட்பாட்டை மட்டும் ஏற்றுகொள்பவர்களும் ஆண்களின் கலாசார கோட்பாடு என எதை கூறுவீர்கள்?

சரி இத்தகைய பப்புகளில் ஆண்களுக்கூடான சண்டையே அதிக அளவு இருக்கும் பொழுது,பெண்கள் மீதான இந்த வன்மையை மட்டும் இவ்வாறு படம் பிடித்ததன் நோக்கம் என்ன?

கேமரா கண்களும் "பெண்ணென்றால் போக பொருள் எனவும்,வியாபர பொருள் எனவும் எண்ணம் கொண்டுள்ளதோ?"

Men are from Mars,Women are from Venus என்று நேற்று ஒரு நண்பர் சொல்லி இருந்தார்.ஆக ஆண் அவன் பாரம்பரிய உடையை மாற்றி ஜீன்ஸ் உம் டி-ஷர்ட் உம் அணிய உரிமை உள்ள பொழுது பெண்ணுக்கு இல்லையா?

வேலைக்கும் செல்லும் ஆண் குடிக்கலாம் எனும் போது...வேலைக்கு செல்லும் பெண் குடிக்க கூடாதா?

ஒரு சீரழிவு கட்டமைப்பை(பார்ப்பனிய) வேரருப்பதை விட்டு விட்டு ,இத்தகைய செயல்களை புரிவது கேவலமான விலங்கினை புணர்வதற்கு ஒப்பாகும்.

9 Feb 2009

எனக்கென்ன?யார் எப்படி போனால் எனக்கென்ன?

"நாட்டுக்கொரு சேதி சொல்ல நாகரிக கோமாளி வந்தேனுங்க".......இந்த பாடல் இடையில் வரும் ஒரு வசனம் ....

முதலாளி
: "தேயிலை இறக்குமதி பண்ணபோகிறோம்"

மற்றவர்:அப்ப உள்ளூர் விவசாயிங்க கதி?

முதலாளி
:எவன் எக்கேடு கெட்டா நமக்கென்?நமக்கு லாபம் முக்கியம்.

இது முதலாளிங்க மனநிலை அல்ல..இன்னைக்கு நம்மில் பலரின் மனநிலை இதுதான்.அன்னைக்கு முதலாளி மட்டும் தான் கேட்டான் இன்னைக்கு எல்லோரும் கேக்குறீங்க...

நான் சாதியை அறவே வெறுப்பவன்.ஆனாலும் இங்கு அது தேவைபடுவதால் குறிப்பிடுகிறேன்.

சில நாட்களுக்கு முன்னாள் BC வகுப்பை சேர்ந்த நண்பன் ஒருவனிடன் வாக்குவாதத்தின் போது கேட்க நேர்ந்த கேள்விகள்...

கேள்வி:இன்னைக்கு நீ படிக்கிறாய் என்றால் யார்காரணம்?

பதில்
: பெரியார்....

கேள்வி: அப்ப அம்பேத்கர்???

பதில்:தலித்துக்கு போராடினார்..

கேள்வி:இந்து உன் மதமா?

பதில்:இல்லையா?

கேள்வி:ஒ...சாதி எங்கிருந்து வந்தது?

பதில்:தெரியாது...

கேள்வி
:இதை எல்லாம் ஏன் தெரிந்து வைத்து கொள்ளவில்லை?

பதில்:தெரிந்து நான் என்ன பண்ண போறேன்?தெரிஞ்சுகவேண்டிய அவசியம் இல்லை ...

நான்:டேய் வரலாற்றை,வந்த பாதையை தெரிஞ்சிக்கணும்...

பதில்:அப்படி ஒன்னும் எனக்கு அவசியம் இல்லை..

பேச்சு அங்கே சுத்தி இங்க சுத்தி இன உணர்விற்கு வருகிறது..
இன உணர்வே வேண்டாம் என்பது அவன் வாதம்.சரி அதற்க்கு மேலே எனக்கு பேச விருப்பம் இல்லை
..
மற்றொரு நண்பரிடம் ஈழ தமிழர் விடுதலை குறித்து பேசியபோது..(முத்துகுமரன் உயிர் தியாகத்திற்கு பின்னர்)

நான்:முத்துகுமரனின் கடிதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

நண்பர்:கொண்டு சேர்த்தால் மட்டும் விடுதலை கிடைத்துவிட போகிறதா?

பகத்சிங்கும்,பெரியாரும்,அம்பேத்கரும் இப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா?

எங்கு இருந்து வந்தது இந்த மனநிலை?

இங்க எனது பார்வையில் நான் உணர்ந்தவற்றை மட்டும் சொல்கிறேன்.
தொண்ணூறுகளுக்கு முன்னாள் போராட்ட மனோபாவம் இருக்கவே செய்தது...ஆனால் சரியாக 92 என்று நினைகிறேன்...முதல் குட்டி சாத்தான்...sun தொலைக்காட்சி கால் எடுத்து வைக்கிறது.அதுவரைக்கும் ,வயலும் வாழ்வு பாக்கவும்,என்னைக்காவது போடப்படும் திரைப்படம் பார்க்கவும் உட்கார்ந்த மொத்த கூட்டமும்...தொல்லை காட்சியால் கட்டுக்குள் இருக்கப்படுகிறது.
அதுக்கு முன்னால் குழந்தைகள் கூடி விளையாடுவது,அதன் மூலம் பரஸ்பரம் அன்புகள் வளர்ந்து வந்தது.தொல்லை காட்சியில உக்காந்த பிறகு ..எல்லாமே மாறுகிறது.மனோ நிலையின் முதல் மாற்றம் இங்க தான்..

உலகமயமாக்கல் எனும் விஷம்.....

உலகமயமாக்கல் எனும் பூதம் என்னவெல்லாம் பண்ணியது தெரியுமா????

1)சிறுதொழில் அழிப்பு

2)கலாச்சார திணிப்பு

3)முதலாளித்துவ கொள்கை மூலமா ...வறுமை அதிகரிப்பு....

வேலை வாய்ப்பு அதிக படுத்தபடுகிறது உலக மயமாக்கல் மூலமாக அப்படின்னு ஒரு பார்வை உள்ளது.இதை பற்றி எனக்கு முழுவதும் தெரியல ..ஆனா கேள்விகள் பல உள்ளன.

1)இங்கு விற்பனை ஆகும் அனைத்து அந்நிய பொருட்களும்,அதன் உதிரி,உருவாக்க தேவையான அனைத்தும் இங்கேயே தயார் செய்ய படுகின்றனவா?

2)நெசவு செய்து கொண்டு இருந்தவர்களுக்கு என்ன மாற்றுவேலையை இந்த உலகமயமாக்கல் கொடுத்தது?

3)இந்த உலகமயமாக்கல் மூலம் அந்நிய தயாரிப்பளர்களை உள்ளே விட்ட காரணத்தால் ..சிறு தொழில் செய்துகொண்டு இருந்தவர்கள் தொழிற்புரட்சி அடைந்துவிட்டு ..அந்நிய நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவிற்கு வளர்ந்துவிட்டனரா?

4)இந்த நிறுவங்களில் இலாபதொகையில் எத்துனை சதவீதம் இந்தியாவிலேயே சுழற்றபடுகிறது?

இதை கேட்க்கும் போது இன்னொன்னும் சொல்லிகிறேன் ...நீயா?நானா? கோபி சொல்கிற மாதிரி எந்த அளவுக்கு உலகமயமாக்கல் நல்லதை செய்ததோ ..அதே அளவு கெட்டதையும் செய்தது...
நான் சொல்வதாய் இருந்தால் கொஞ்சம் அதிகமாகவே கெட்டதை செய்தது.அதை தான் பிழைப்புவாத மனோபாவ மாற்றம் அப்படின்னு சொல்லலாம்.

கைல வச்சு எண்ணி பார்க்க முடியாத அளவு பணம்,வீடு,கார்....எல்லா சொகுசு பொருட்களையும் வாங்கும் அளவுக்கு பணபலம்.
என்ன ஆகுது?
எல்லாம் மாறுது...தான் என்னும் அகந்தை.பெற்ற தாயை வீடு வேலைகாரி என அறிமுக படுத்தக்கூடிய மனோபாவம்.

"திறமை இருக்கிறது பிழைக்கிறோம் அப்படின்னு சொல்லிக்கிறான்"..அப்படினா வயலில் உழைப்பவனுக்கு திறமை இல்லையா?

போர் என்றால் மக்கள் சாவது இயல்புதானே என்ற அறிக்கையை ஆமாம் போட்டு ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் இருக்கிறோம் இன்று.

இல்லை நாங்களும் பண்ணுறோம்...அநாதை இல்லத்திற்கு போறோம்,அது பண்ணுறோம் இது பண்ணுறோம் அப்படின்னு சொல்லுறீங்களா?உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் தான் ..ஆனால் நீங்கள் சிறுபான்மையினர் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீயா,நானா நிகழ்ச்சியில் ஒரு பெரியவாள் சொன்னாரே ...கும்பகோணம் தீவிபத்தில் இறந்து போன அத்துனை பேரும் போன ஜென்மத்தில்

பாவம் செய்தவாள் என்று ..உங்களை சுற்றி ஒரு பெரிய கூட்டம் அப்படித்தான் இருக்கிறது.

மேலும் ஒருகணம் யோசித்து பாருங்கள் ..உங்கள் தகுதிக்கு ஏற்பதான் செய்கிறீர்களா???
அனாதைகளுக்கு செய்தால் புண்ணியம் என்ற மனோநிலையில் செய்கிறீர்களா?இல்லை, என்னைப்போல அவனும் ஒருவன்(எண் சகோதரன்,சகோதரி) என செய்கிறீர்களா?.

பணத்தால் மட்டும் செய்யாதீர்கள்...உங்கள் நேரப் பகிர்வுகளாலும் செய்யுங்கள்.

என் சகோதரன்,சகோதரி அங்கே சாகிறான்...இங்கோ நடைபிணமாய் வாழ்கிறான்..

எவன் என்ன ஆனால் எனக்கென்ன? எப்படி போனால் எனக்கென்ன?

2 Feb 2009

புரட்சி திரிக்கு தீப்பொறி தேவை...




ஆம் தமிழர்களே,

விதைக்கும் விதை எல்லாம் மரமாவது இல்லை.தேர்ந்தெடுக்க பட்ட விதைகளும்சிலநேரம் மண்ணோடு போவதுண்டு.என் அண்ணன் முத்துகுமார் ஒருதேர்ந்தெடுக்க பட்ட விதை.பராமரிப்பு இல்லாமல் போதல் ஆகாது.
விதைக்கும் விதைக்கு தண்ணீர் ஊற்றுவோம்.என் அண்ணன் விதைத்த விதைக்குஅவர் கடிதத்தை ஊற்றுங்கள்.ஆம் உங்களால் எவ்வாறு எல்லாம் இயலுமோஅவ்வாறெல்லாம் பரப்புங்கள்.
என் அண்ண
ன் ஒரு மாபெரும் திரியை எரிக்கும் விதமாய் தன்னை எரிய வைத்துநம்மிடம் தந்து இருகிறார்.இதை பற்ற வைக்க ஒரு தீப்பொறிவேண்டும்.தீக்குச்சியாய் நம்மிடம் அவர் கடிதம் இருக்கிறது .....தமிழினதலைவர்கள் இதை நீர்த்துபோக செய்ய கல்லூரிகளை மூடுகின்றனர்.
ஏதையும் எதிர்த்து போராடுவதுதான் என் அண்ணன் உயிருக்கான விலையாய்இருக்கும்.எனவே நகலை பரப்புங்கள்...
எனக்கு நகலை பரப்பும் விதமாய் தோன்றிய சில எண்ணங்கள்.
1)வலை பூக்கள் வைத்து எழுதுபவர்கள் ..அநேகர் இதை பதிவு செய்து இருப்பார்கள் என எண்ணாமல் ...நீங்களும் பதிவு செய்யுங்கள்.
2)CSC,NIIT போன்ற நிறுவனங்களிடம் இருந்து மாணவர் முகவரிகள் வாங்க முடியும் எனின் வாங்கி ..கடிதமாக பரப்புங்கள்.
3)இணைய அஞ்சல் மூலம் பரப்புங்கள்..(முடித்த அளவு அலுவலக மின்னஞ்சல் மூலம்).
4)சர்வதேச சமூகத்திடம் எடுத்து செல்லும் விதமாக தெரிந்த மொழிகளில் எல்லாம் மொழி பெயர்த்து பரப்புங்கள் ...

உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
தீப்பொறியாய் மாறுவோம் வாருங்கள்
.


இதோ என் அண்ணனின் கடிதம்..

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களை
ப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்ப
டையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கை
யோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவே
ற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்
காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தி
ல் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடி
யும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடி
க்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து
தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்
லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடி
மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை,
எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்த
போதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இ
ந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்
டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படு
கிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயு
தங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாக
ச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச்
செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சி
ன் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்
பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்ப
ட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ் கா
ந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே
இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்
பு வழங்கப்பட வேண்டும்.
13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குர்ர்ர்ரச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,


அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.