4 Apr 2009

பிரபல பதிவராக ..சில பதிவு தலைப்புகள்.

பிரபலமிலாத பதிவராக x வழிகள்;X=real integer
சும்மா இஸ்டத்துக்கு ஒரு பத்து யோசனையை சொல்லுங்கள் ...

பிரபல பதிவரிடம் வாங்கிய அடி

பிரபல பதிவரும்,பிரபல நடிகையும்

இவரெல்லாம் பிரபல பதிவர்?

பிரபல பதிவரின் பித்தலாட்டம்

பிரபல பதிவர் யார் பின்னால் சுற்றுகிறார்?

பிரபல பதிவர் சுட்ட கவிதை.

பிரபல பதிவர் தேர்தலில் .....
உள்ளே அவர் வாக்களித்ததை குறித்து பதிவு இடலாம் ..

இப்படி உங்களுக்கு பிரபலம் என்று உங்களுக்கு என்னவெலாம் தோன்றுகிறதோ அதை கொண்டு பதிவிடலாம் ...
அப்பறம் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் "பிரபல" பதிவர் தான்.

இந்திய மரபும்,மகாத்மாவின் மலமும் -பெரியார்தாசன் உரையில் இருந்து.

இந்துமதம் ,அது இல்லாத இடமே இல்லை.ராமகோபாலன் ஐயாவுடைய கோமணதிற்கு கீழேயும் அதுதான் இருக்கிறது.சங்கராசாரியரிக்கு சொறி பிடிக்கிற இடுப்பிலேயும் அதுதான் இருக்கிறது.உங்க வாழ்கையில என்ன கஷ்டம்னாலும் என்கிட்டே சொல்லு.லெட்டர் போடு.ஜோசியபடி கணிச்சு உன் வாசப்படியில வந்து சொருவுரேங்குறான்.

வாஸ்த்து சாஸ்திரம் என்கிறான்.எந்த நாட்டில் வாஸ்த்து சாஸ்திரம்?தமிழ்நாட்டில்,மராத்தியில்,குஜராத்தில்,வாழ்வதற்கே வசதியிலாமல் பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் ஜனங்ககிட்ட வாஸ்த்து மயிறு எனாத்துக்கு?

ஆயுர்வேதம் இவன் சாஸ்திரம்,வாஸ்த்து இவன் சாஸ்திரம்,ஜோசியம்,காலகணிதம்,நியுமராலாஜி அவனோட ஆயாலாஜி ..எலாத்தையும் சேத்து உழைக்குற நம்மள ஒரு அங்குலம் கூட விழிப்பு அடைந்து விடாமல் தடுக்கிற இந்த சக்திகளுக்கு பெயர் இந்துமதம்.

1932 இல் காந்திக்கே இந்த மேட்டரு புரியாம போய் வட்ட மேசை மாநாடுல நீயும் நானும் இந்துன்னு பாபாசாகேப் அம்பேத்கரை பார்த்து சொன்னாராம்.யாரு?மகாத்மா காந்தி.நாமெலாம் வெறும் ஆத்மா.அவங்க மட்டும் தான் மகாத்மா.

ஆத்மாவே இல்லைன்னு சொன்னார் புத்தர்.இதுல மகாத்மா இந்த தேசத்திற்கு பிதா!அந்த மகாத்மாவை பார்த்து "ஹெலோ மிஸ்டர் வாயை மூடுங்க" என்று சொல்லிவிட்டு "நீ எப்படி என்னை இந்துன்னு சொல்லுற?நீ சொல்லிக்கோ நீ இந்துன்னு..என்ன எப்படி சொல்லுற?" என்று கேட்டாராம்.அதற்க்கு "நீயும் இந்து நானும் இந்து" என்று காந்தி மீண்டும் சொன்னாராம்.

"நான் இந்து இல்லை,நீ மலத்தை தொட்டு இருக்கியா" என்று அம்பேத்கர் கேட்டாராம்.

கழுவிதான ஆகணும்.அவரு மகாத்மாங்கரதால 'எவாபரெட்' ஆகிடுமா என்ன?

மனிதனாய் பிறந்த என்னை தீண்டபடாதவன் என்று சொல்லி தொட்ட குளிக்கனும்னு சொல்லுற நீயும் இந்து,நானும் இந்துவா?யாருடா இந்துனா ..இந்திய மரபில் வந்த எல்லோரும் இந்துன்குறான்?

நாங்க சுடலைமாடனுக்கு காவு குடுத்து கட்டாந்தரையில் கடா வெட்டி அங்க உடுக்க சிலம்புல பாட்டுபாடி ,"சுடலை மாடன் வந்து ....நின்றான் நின்றான் அங்கே" நின்றான்,நின்றான்னு அறை மணிநேரமா நிக்குறோமே,நானும் இந்து.சேரிக்குள்ளே சாமி வரக்கூடாதுன்னு அடம்புடிக்கிற நீயும் இந்துவா?என்னுடயமரபும் உன்னுடைய மரபும் ஒண்ணா?
இந்த கேள்வியை தான் இங்கே எழுப்புகிறோம்.இந்திய தத்துவமரபுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?

இந்திய தத்துவ மரபு மிக பெரியது.அகலமானது.ஆழமானது.அது சாங்கியர் என்று சொல்லபடுகிற கபிலரிலே ஆரம்பித்து புத்தரிலே தொடர்ந்து வள்ளலார்வரை வந்து இன்றைக்கும் பாமர மக்கள் என்று சொல்லப்படுகின்ற உழைக்கும் வர்கதினரிடயே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மரபு இந்திய தத்துவ மரபு.

2 Apr 2009

ஒரு முயற்சியும் தோல்வியும்

ரெண்டு நாளைக்கு முன்னால் சாதம் பொங்கி விட்டு ..சரி மோர் குழம்பு வைத்து சாப்பிடலாம் என யோசித்து ..அம்மாவை தொலைபேசியில் அழைத்து மோர் குழம்பு வைக்கும் முறையை கேட்டு(?!) தெரிந்து கொண்டேன் ...நான் மோர் குழம்பு வைத்த முறையை கீழே சொல்கிறேன் ..அப்பறம் எப்படி வந்து இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

இரண்டு தயிர் பாக்கெட் ஐ மோராக மாற்றி கொண்டேன்.பிறகு அதனுடன் கொஞ்சம் சீரகம்,தேங்காய் ஆகியன சேர்த்து மிக்சியில் அரைத்தேன்(?!)
அதை தனியாக எடுத்து வைத்து விட்டு அடுப்பில் பாத்திரத்தை வைத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பில்லை போட்டு தாளித்தேன் .
பின்னர் மோர் கரைசலை இதனுடன் சேர்த்தேன்.கொஞ்சம் கொதிக்கும் நிலைக்கு முன்னர் மஞ்சள் தூள்,உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து இறக்கினேன்.

உங்களுக்கே தெரிஞ்சு இருக்குமே எப்படி மோர் குழம்பு இருந்து இருக்கும் நு.
எங்க அம்மா சொன்னது ஒன்னு ..நான் செஞ்சது ஒன்னு ..என்ன அதை ஒளிப்படம் எடுக்காமல் விட்டு விட்டேன் ..இன்னைக்கு கூட சாம்பார் வைக்கலாம் நு யோசிச்சு இருந்தேன் ..ஆனால் மத்தியானத்துக்கு தேவையானது ஏற்கனவே இருக்கு ...

இன்றோடு இருபத்து நான்கு...நன்றி சொல்கிறேன்.(பதிவர்களுக்கும்)

(என்ன பண்ண வேற படம் இல்லையே)
பிறந்து வளர்ந்து இன்றோடு இருபத்தி நான்கு வருடங்கள் (0௨-0௪-௨00௯)முடிகிறது.உடற்கூறு பார்க்கும் போது அதிசயமாய் இருக்கிறது..அட வளந்துட்டேன்.


இத்தனை வருடங்களில் எத்தனை நாட்கள்,எத்தனை மனிதர்கள்?சந்தித்த ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியே உள்ளனர்.என் தந்தைக்கும்,தாய்க்கும்,தங்கைக்கும் மிகவும் கடமை பட்டவனாய் இருக்கிறேன்.எந்த சந்தர்ப்பத்திலும் என் மீதான பாசம் மட்டும் அவர்களுக்கு குறைந்ததே இல்லை.

இவர்கள் தவிர நன்றி சொல்ல அநேகர் உள்ளனர் ..கொஞ்சம் பேரை இங்கே பட்டியல் இட்டு விடுகிறேன்.

பள்ளி மற்றும் கல்லூரி காலம்

  1. மகாராஜன்
  2. சுரேஷ் சுந்தர் ராஜ்
  3. சக்தி மைந்தன்
  4. செந்தில் ஆறுமுகம்
  5. மது(எ) தெய்வ நாயகம்
  6. வசந்தி
  7. லவ்லின் லிடிசியா
  8. புஷ்பவள்ளி
  9. இந்து ப்ரியா
  10. பூர்ணிமா
  11. சரோஜ் குமார்
  12. பாலா
  13. கணேஷ் குமார்
  14. கேசவன்
  15. வினோத்
  16. நடராஜ்
  17. அருண் வெங்கடேஷ்
  18. சக்தி விக்னேஷ் குமார்
  19. சக்தி வேல் ராஜன்

மற்றும் பலர்



நன்றிக்குரிய உலக தமிழ் மக்கள் அரங்க நண்பர்கள்



  1. சசி
  2. ஸ்ரீதர்(தமிழ்)
  3. ரமணன்
  4. நிதி
  5. அருண்ஷோரி
  6. பிரேமா(குட்டி)
  7. ஆறுமுகம் அவர்கள்
  8. தோழர் செந்தில்
  9. பிரின்ஸ் பெரியார் எனாராஸ்
  10. வெங்கடேஷ்
  11. தமிழன்பன்
  12. கை.அறிவழகன்
  13. பெடரிக்
  14. இரணியன்
  15. சதீஷ்
  16. சுரேஷ்
  17. ஜாய்
  18. ஜானு
  19. ஷ்யாம்


இந்த நண்பர்கள் மூலம் அறிமுகமான


  1. ம.க.இ.க தோழர் பாண்டியன்
  2. இளம்பருதி
  3. வே.மதிமாறன் மற்றும் பலர்.

பதிவுலக வலையில்


ரொம்பகாலம் பதிவுலகில் இருக்கவில்லை ..இருந்தாலும் சிலருடைய பதிவுகளால் அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டு உள்ளேன்

  1. தாமிரா
  2. பரிசல்காரன்
  3. வெட்டிப்பயல்
  4. அதிஷா
  5. தமிழ்நதி(இளவேனில்)
  6. மாதவராஜ்
  7. தூயா
  8. டாக்டர் ஷாலினி
  9. டாக்டர் முருகானந்தம்
  10. முரளி கண்ணன்
  11. ஆ.முத்துராமலிங்கம்
  12. லோஷன்
  13. பழமைபேசி
  14. நரசிம்
  15. கோவி.கண்ணன்(எழுத்து பிழைகளை விரைவில் திருத்துகிறேன் அண்ணா)
  16. வால்பையன்
எதுக்கு இந்த நன்றி எல்லாம்?கண்டிப்பாய் என்னை வடிவமைத்ததில் இவர்களின் பங்கு அதிகமாய் உள்ளது.



அப்பறம் இன்னொன்னு நிறையா பதிவுகளை படிக்க ஆரம்பித்த பிறகு ..கொஞ்சம் வாசிப்பு அனுபவத்தோடு எழுதுதல் நலம் அப்படின்னு தோனுச்சு ..அதான் கொஞ்சம் நாட்கள் பதிவுகள் இடவில்லை.
வாங்கி வைத்துள்ள புத்தகத்தை படிகிறதே இல்லை..



கீழ பட்டியல் இட்டு உள்ள புத்தகம் எல்லாம் படிக்க படாமல் உறங்குகிறது.(எல்லாம் ஒரு சுய விளம்பரம் தான்)
  1. வாழ்வின் அலைகள்
  2. தாய்
  3. வால்காவில் இருந்து கங்கை வரை
  4. மனித இனம்
  5. இந்த புத்தகத்தை வாங்காதீங்க ப்ளீஸ்
ம்ம்ம்ம்ம்ம் ..கவலைய விடுங்க ..அப்ப அப்ப பதிவு இடுவேன்.
புத்தகங்களை படித்து முடித்து விட்டு வாசிப்பனுபவம் கொண்டு ஒரு அலசலை போட்டு ஒரு ஹிட் கொடுத்துறலாம் ...