இந்துமதம் ,அது இல்லாத இடமே இல்லை.ராமகோபாலன் ஐயாவுடைய கோமணதிற்கு கீழேயும் அதுதான் இருக்கிறது.சங்கராசாரியரிக்கு சொறி பிடிக்கிற இடுப்பிலேயும் அதுதான் இருக்கிறது.உங்க வாழ்கையில என்ன கஷ்டம்னாலும் என்கிட்டே சொல்லு.லெட்டர் போடு.ஜோசியபடி கணிச்சு உன் வாசப்படியில வந்து சொருவுரேங்குறான்.
வாஸ்த்து சாஸ்திரம் என்கிறான்.எந்த நாட்டில் வாஸ்த்து சாஸ்திரம்?தமிழ்நாட்டில்,மராத்தியில்,குஜராத்தில்,வாழ்வதற்கே வசதியிலாமல் பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் ஜனங்ககிட்ட வாஸ்த்து மயிறு எனாத்துக்கு?
ஆயுர்வேதம் இவன் சாஸ்திரம்,வாஸ்த்து இவன் சாஸ்திரம்,ஜோசியம்,காலகணிதம்,நியுமராலாஜி அவனோட ஆயாலாஜி ..எலாத்தையும் சேத்து உழைக்குற நம்மள ஒரு அங்குலம் கூட விழிப்பு அடைந்து விடாமல் தடுக்கிற இந்த சக்திகளுக்கு பெயர் இந்துமதம்.
1932 இல் காந்திக்கே இந்த மேட்டரு புரியாம போய் வட்ட மேசை மாநாடுல நீயும் நானும் இந்துன்னு பாபாசாகேப் அம்பேத்கரை பார்த்து சொன்னாராம்.யாரு?மகாத்மா காந்தி.நாமெலாம் வெறும் ஆத்மா.அவங்க மட்டும் தான் மகாத்மா.
ஆத்மாவே இல்லைன்னு சொன்னார் புத்தர்.இதுல மகாத்மா இந்த தேசத்திற்கு பிதா!அந்த மகாத்மாவை பார்த்து "ஹெலோ மிஸ்டர் வாயை மூடுங்க" என்று சொல்லிவிட்டு "நீ எப்படி என்னை இந்துன்னு சொல்லுற?நீ சொல்லிக்கோ நீ இந்துன்னு..என்ன எப்படி சொல்லுற?" என்று கேட்டாராம்.அதற்க்கு "நீயும் இந்து நானும் இந்து" என்று காந்தி மீண்டும் சொன்னாராம்.
"நான் இந்து இல்லை,நீ மலத்தை தொட்டு இருக்கியா" என்று அம்பேத்கர் கேட்டாராம்.
கழுவிதான ஆகணும்.அவரு மகாத்மாங்கரதால 'எவாபரெட்' ஆகிடுமா என்ன?
மனிதனாய் பிறந்த என்னை தீண்டபடாதவன் என்று சொல்லி தொட்ட குளிக்கனும்னு சொல்லுற நீயும் இந்து,நானும் இந்துவா?யாருடா இந்துனா ..இந்திய மரபில் வந்த எல்லோரும் இந்துன்குறான்?
நாங்க சுடலைமாடனுக்கு காவு குடுத்து கட்டாந்தரையில் கடா வெட்டி அங்க உடுக்க சிலம்புல பாட்டுபாடி ,"சுடலை மாடன் வந்து ....நின்றான் நின்றான் அங்கே" நின்றான்,நின்றான்னு அறை மணிநேரமா நிக்குறோமே,நானும் இந்து.சேரிக்குள்ளே சாமி வரக்கூடாதுன்னு அடம்புடிக்கிற நீயும் இந்துவா?என்னுடயமரபும் உன்னுடைய மரபும் ஒண்ணா?
இந்த கேள்வியை தான் இங்கே எழுப்புகிறோம்.இந்திய தத்துவமரபுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?
இந்திய தத்துவ மரபு மிக பெரியது.அகலமானது.ஆழமானது.அது சாங்கியர் என்று சொல்லபடுகிற கபிலரிலே ஆரம்பித்து புத்தரிலே தொடர்ந்து வள்ளலார்வரை வந்து இன்றைக்கும் பாமர மக்கள் என்று சொல்லப்படுகின்ற உழைக்கும் வர்கதினரிடயே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மரபு இந்திய தத்துவ மரபு.