03-Feb-2010

hi

hi

03-Nov-2009

சொற்றொடரால் நினைவுபெரும் தருணம்

சொல்லின் வலிமை மிக பெரியது.

பாராட்டு சொல்லை பெறும்போதும்,இகழ்ச்சி சொல்லை பெரும் போதும் உள்ள மனநிலைகளை நாம் அறிவோம்.

நாம் யாரும் கடந்துவராத தருணங்கள் அல்ல அவை.

அப்படிப்பட்ட சொல்லை கொண்டு அமையப்பெற்ற சொற்றடரால் நினைவுகூரப்படும் மூன்று தருணங்களின் தொகுப்பே இது.

நீங்கள் உங்கள் நண்பர்களை கலாய்த்து(மொக்கை இடுதல்) உள்ளீர்களா?

நான் கல்லூரி படித்து கொடு இருந்த சமயம் அது...ஒரு முறை மதிய சாப்பாட்டிற்காக நாங்கள் பத்துபேர் நடந்து கொண்டு இருந்தோம் ..

அருண் வெங்கடேஷ் தான் அன்று யாரையோ கலாய்த்து கொண்டு  இருந்தான்

அப்பொழுது அவன் உதிர்த்த ஒரு பழமொழி தான் இன்றுவரை அந்த தருணத்தை நினைவில் வைத்து இருக்க செய்கிறது ..

அது ..

இது என்ன "தெருவை இழுத்து தேர்ல விட்ட கதையாய் இருக்கு"

இன்னொரு தருணம் எனக்கும் வினோஜ் க்கும் இடையில் நடந்தது...காதலனோ காதலியை காண VVV  பெண்கள் கல்லூரி வாசலில் காத்து இருக்கிறார் ..காதலன் நான் இல்லை ..

அப்போது ஏதோ ஒரு விளையாட்டு வாக்குவாதம் பெரிதாகிவிட நான் கோபத்தில் சொன்னா சொற்றொடர் நிலைமையை மாற்றியது ..

அது ..

"நீயெல்லாம் உப்புல சோத்த போட்டு தானே திங்குற"

மூன்றாவது சம்பவம் நேற்று நடந்தது ..இந்த பதிவை எழுத தோன்றியதே அந்த சம்பவத்தின் பின்னர்தான்...

அன்பேவா நாடகத்திற்கு பின்னரான அரட்டையின் போது முனீஸ் சொன்ன வார்த்தை நேற்று இரவு பதினோரு மணிவரை சிரிப்பில் ஆழ்த்திய வாக்கியம்..

"தங்கசிடோட Wife"

இதன் போன்று நீங்களும் பல சொற்றொடர்களை கடந்து இருப்பீர்கள் ..பகிர்ந்து கொள்ளுங்கள் .தருணங்கள் எப்போதும் நினைவில் இருக்கட்டும்.

26-Oct-2009

ஆண்களுக்கு எதிரான ஆண்களின் "பெண்கள் சார்பான ஆணாதிக்கம்"

வாங்க வாங்க உங்கள் வருகைக்கு நன்றி ..இப்பவே சொல்லிடுறேன் பின்னூட்டம் முக்கியம்.
இப்ப நான் உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல போறேன்.சரியா ?(வந்தது வந்துடீங்க வாசிச்சிடுங்க)

A,B,C,D ஆகிய நாலு பேரும் நண்பர்கள்.தெருவுலயே இருக்குற டாணா திருப்ப பாலத்துல அவுங்களை எப்போதும் பாக்கலாம்.

அந்த தெருவுல Y அப்படின்னு ஒரு அழகான,வனப்பான,வாளிப்பான ஒரு பொண்ணு.(All males please avoid jollu)


Z ட்டு Z ட்டு அப்படினு அந்த ஊருக்கு நம்ம வால்பையன் மாதிரி ஒரு அழகான,கட்டுமஸ்தான,கட்டிளம் காளை வர்றாரு.

Z இடம் இருப்பது ஒரு Pulsar பைக்கு...

நம்ம Y இடம் இருப்பதோ ஒரு ஸ்கூட்டி பைக்கு.

ஒ A,B,C,D ஆ அவங்க ரெண்டு யமகா RX1250 cc பைக்கு வச்சு இருகாங்க.ரொம்ப யோசிக்க வேணாம் A,C அவங்க அப்பா காலத்து சைக்கிள் வச்சு இருக்காங்க .B,D ரெண்டு பேரும் பயணிகள் அந்த சைக்கிளுக்கு.

நம்ம Y,Z போறதும் வர்றதும் ஒரே பாதை..

நாம கதையோட இறுதி கட்டத்துக்கு வந்துட்டோம் அதனால இருக்கை முனையில் வந்து வாசிக்கவும்..

அன்னைக்கு சாயந்திரம் சாயந்தரம் மாதிரி தான் இருந்துச்ச்சு..

Z தன்னோட பைக்குல சும்மா கதாநாயகன் மாதிரி வர்றாரு

கேமரா எப்படி போது தெரியுமா?

Z வண்டி டயர் ,பின்ன அவரு,அப்பாலிக்கு அவரு முதுகு..அப்படியே Y யோட முதுகு ,காதுப்பக்கம் அலைபாயுற முடி,அவங்களோட புன்னகை அப்பறம் அவங்க வண்டி டயர்..

டபக்குனு ஒரு எருமை மாடு  frame க்கு உள்ள வந்துட்டு உடனே ஓடுது..

கீசுன்னு ஒரு சத்தம் ,பின்னாடியே டமால் நு ஒரு சத்தம் ..

நடந்து விபத்து நடந்த இடம் "டாணா" பாலம்...

இப்ப frame la மாடு தெரியாது,இல்லேன்னா out of focus ல தெரியும் .

கீச்சு Z ஓட பைக்கு பிரேக்..

Y வந்து Z பைக்குல முட்டுச்சே அது தான் "டமால்"...

இப்ப Y,Z ஐ காட்டுறோம் அப்படியே A,B,C,D ஐ கட்டுறோம் .

அப்படியா கேமராவை எங்கயாச்சும் focus பண்ணி குலுக்குறோம்..(விவேக் காமடில அடிவாங்குரப்ப காட்டுவாங்களே அப்படி..)

இது தாங்க 'ஆண்களுக்கு எதிரான ஆண்களின் "பெண்கள் சார்பான ஆணாதிக்கம்"...'

புரிஞ்சுதா??!!

டிஸ்கி:

கொஞ்சம் ஊக்கம் குடுக்கவும்.அப்பா தான் இப்படி தொல்லை எல்லாம் கொடுக்க மாட்டேன்.

24-Oct-2009

உடைபட்ட இந்தியா எண் 7 -திரை விமர்சனம்திகதி : 23 -ஏப்ரல்-2050

2025 வருடம் இந்தியா மேலும் உடை பட்டு அதனிடம் இருந்து தமிழகம் தன்னை ஏழாவது தனி நாடாக பிரித்த போது அப்பொழுது அங்கே ஊடக வியலாளராக இருந்த "மார்கன் மாளிபார்"(Margan Maliphar) என்ற ஸ்பெயின் எழுத்தாளரின் "Broken India" என்ற நூலை தழுவி எடுக்க பட்ட படம்.

கொஞ்சம் நழுவினாலும் கையை சுட்டுக்கொள்ள கூடிய வாய்ப்பு இருக்கும் படம்.

ஸ்ரீனிவாசன் எனும் தெலுங்கு நாட்டு இயக்குனரால் இயக்கப்பட்டு 2047 இல் வெளி வந்து இருக்கும் இப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க இயலாத படம்.

இயக்குனர் 1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா என்னும் போலி ஜனநாயக நாடு அணிந்து இருந்த முகமுடியை கிழித்து தொங்க விட்டு இருக்கிறார்.

கதையின் அடித்தளம் மூன்றாம் உலகப்போருக்கான சூழல் உருவாகும் வண்ணம் சீனா தனது கப்பல் படைகளையும்,இதர படைகளும் இந்து மகா சமுத்திரத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.

இந்திய ராணுவம் போர் விதிமுறைகளை மீறி தமிழக மக்களை தனது கேடயமாக பயன்படுத்த முனைகிறது.இதனை அடுத்து தமிழக மக்களுக்கும் , இந்திய ராணுவத்திற்கும் இடையே நடை பெரும் கிளர்ச்சி தான் படம்.

கதையை மட்டுமே மையமாக வைத்து நகரும் இப்படத்தில் பாத்திரங்களும் தங்களது பங்கை உணர்ந்து செய்து உள்ளனர்.

கிளர்ச்சியாளர் தாமிராவிற்கும்,கார்கிக்கும் நடைபெரும் உரையாடல்கள் புரிதலுக்குரியவை.

கிளர்ச்சியின் போது வெட்டப்படும் தலை,வெடிக்கும் வெடி குண்டு என பெரும்பாலும் காட்டாமல் வழிந்தோடும் இரத்தம் மூலம் காட்டுவது அருமை.


இறுதி கட்டத்தில் நிகார் எனும் கிளர்ச்சியால் ஊனம் உற்ற அன்பர், தனது மகனுக்கு பெட்ரோல் வெடிகுண்டு செய்து வீசும் முறையை கற்றுகொடுத்து,அது தவறுதலாக வீசப்பட்டு மகன் உயிரை இழக்கும் போது "இதை நான் வேண்டியா செய்தேன்" என்று சொல்லும் பொழுது இந்தியா திணித்த அடக்குமுறையை உணர முடிகிறது.


இந்திய படைபிரிவு 23 ஐ  15 பெண் கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தும் ஒரே காட்சியில் தமிழகம் போற்றும் பெண்ணின் வீரத்தை காட்டி விடுகிறார் இயக்குனர்.

கண்டிப்பாய் ஒவ்வொரு தமிழ் குடிமகனும் பார்க்க வேண்டிய படம்.

"எந்த ஒரு திணிப்பும் இன்றி இன்று நாம் தமிழ்நாட்டில் சுதந்திரமாய் வாழ்கிறோம்,இதற்காக நம் முன்னோர் கொடுத்துள்ள விலை பெரிது"

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நூறு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் வந்து இந்தியா ஒரு மாற்று காலனி நாடே என்று சொன்ன இந்த தெலுங்கு மொழி படம் "பெரியார் விருது" ,"அம்பேத்கர் விருது" உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.


பின் குறிப்பு:

இது முற்றிலும் எனது கற்பனையே.உலக சினிமா "செழியன்" அவர்களின் தாக்கம் இருக்க கூடும் எனது எழுத்து நடையில்.தயை கூர்ந்து லாஜிக் பார்க்க வேண்டாம்.

எண்திசை பதிவுக்கான குறிப்பு:

எதிர்காலத்தில் வரப்போகும் படத்திற்கான திரை விமர்சனம் எழுவது.

டிஸ்கி:
பின்னோட்டம் முக்கியம்.

மீண்டும் மீண்டும் நான்...ரொம்ப விரைவாக மட மட வென்று 41 பதிவு எழுதி ஆகிற்று எல்லாத்தயும் திரும்பி பார்க்கும் பொழுது பெரிதாய் ஒன்றும் சாதித்தாய் தோன்றவில்லை.

எதோ என்னை ஈர்க்கும் ஒன்று இரண்டு பதிவுகள் வாசிப்பாளர் யாரையும் ஈர்த்ததற்கான அறிகுறி தெரியவில்லை.

கலாச்சாரம் என்றால் என்ன?,கலாச்சாரம் ஏன் வேண்டும் ஆகிய பதிவுகளை மீண்டும் ஒருமுறை வாசிக்கும் பொழுது கொஞ்சம் இப்பொழுது அதன் மீதான கருத்து மாறி இருப்பது தோன்றுகிறது.

மாதவாஜ் அண்ணனின் "நடிகர்கள்" குறித்த பதிவை வாசித்து விட்டு அந்த தாக்கதிலயே எழுதிய "நடிகர்கள் அறிவற்றவர்களே" என்ற பதிவு என்மீதான சலிப்பை தருகிறது.

எனது கிறுக்கல் கோழிகள் ஒருபோதும் வாசிக்கபடுவதே இல்லை (அல்லது) வாசிப்பவருக்கு புரிவதே இல்லை.

ஒருமுறை என் கல்லூரி நண்பன் என்னை பார்த்து கூறியது "You are a peculiar person" என்று.அந்த Peculiarity க்கான அடையாளம் எனது பதிவுகளில் நானே காணவில்லை.

ஆக எழுதுவது ஒரு பதிவோ இரண்டு பதிவோ அது எனது எழுத்து படி எனது தனித்தன்மையின் படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் அத்தகைய பதிவை வெளி இடும் முன்னர் எண்திசை பதிவு என எனது பதிவுக்கான ஒரு ஒட்டு பதிவை வெளியிட்டேன்.

ஆனாலும் நேரம் என்னை எனது பதிவை எழுத அனுமதி தரவில்லை.சரி இப்பொழுது உள்ள நேரத்தில் விரைவில் எனது பதிவு தயாராகிறது.

நீங்கள் அனைவரும் என்னை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவை இடுகிறேன்.

மற்றும் ஒரு வேண்டுகோள் ..வாசிக்கும் நீங்கள் பினூட்டம் இடுவது என்னை மேலும் நல்ல முறையில் எழுத தூண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

21-Oct-2009

வலைப்பதிவர்களே -எண்திசை பதிவு!!

ஒரு புதிய பதிவு வகையை எனது சிந்தனை கொண்டு அறிமுகபடுத்துவதில் பெருமிதம் அடைகிறேன்.

ஏற்கனவே தொடர்பதிவு என்று ஒன்று இருக்கிறது.இதன் படி ஒருவர் ஒரு பதிவை பதிய, அவர் அழைத்து அவரை தொடர்ந்து மற்றவர் பதிய வேண்டும். பின்பு அவர் அழைப்பில் மற்றொருவர் என தொடர்கிறது ..இது தான் நான் புரிந்து கொண்டு உள்ளது.

இதில் எனக்கு பெரும் குறையாக தோன்றியது அதை போன்ற பதிவை பதிய விரும்பும் ஒருவர் யாரேனும் அழைக்க வேண்டும் என காத்து இருக்க வேண்டி இருக்கிறது(அழைக்காமலும் பதியலாம் என்பது உண்மையே.அழைப்பின் கீழ் பதிகையில் பெரும்பான்மை வாசகர்களை கவர முடிகிறது)

மேலும் சில நேரம் நாம் தொடர்பதிவுக்கு அழைத்து யாரும் பதியாமல் போவதும் நடக்கிறது.

இதுபோக தொடர்பதிவுகள் ஓரளவு பிரபலாமாகி விட்டவர்களிடயே மட்டும் நடக்கிறது.

ஆக இந்த குறையை தீர்க்க யோசித்த போது எனக்கு இரண்டு வகை பதிவுகள் தோன்றின.

ஒன்று குறையை தீர்க்கும் வண்ணமும்,மற்றொன்று குறைகளுடனே ஆனால் புதிய தொரு வாய்ப்பை தரும் வண்ணமும் தோன்றின.

வட்டப்பதிவு: இது அப்படியே தொடர்பதிவை போலவே ..அழைப்பின் பேரிலேயே பதியப்பட வேண்டும்.ஏற்க்கனவே பதிந்தவரை மீண்டும் பதிய அழைக்கலாம்.

எண்திசைப்பதிவு: இதன் படி யாரும் அழைக்கப்பட வேண்டாம்.முதலில் பதிபவர் தனது பதிவில் எண்திசைப்பதிவு என்று "tags" இல் குறிப்பிட்டு இருந்தால் போதும்.யாரேனும் அதை தொடர்ந்து பதியலாம்.

தொடர்ந்து பதிபவர் யாரை தொடரகின்றாரோ அவரது வலையின் சுட்டியை தனது பதிவில் இடுவதுடன்,அவரை போலவே "tags" இல் எண்திசைப்பதிவு எனவும்,மேற்கொண்டு தொடர்ந்தவரின் வலைப்பூவின் தலைப்பையும் கொடுத்து விடல் வேண்டும்.

இதில் உள்ள நன்மைகள்

புதியவர்கள் பழையவர் என்ற பேதம் குறையும் என நம்புகிறேன்.

இன்னும் புதிய புதிய வலைபூக்களை படிக்கும் வாய்ப்பு அதிகருக்கும் .

இது குறித்த உங்கள் மேலான கருத்துகளை எதிர் நோக்குகிறேன்.

இன்று இரவு எனது முதல் எண்திசைப்பதிவு ஆரம்பம் ஆகும்.

14-Oct-2009

புதிதாய் பழையதாய்


நேர் வளை பாதையில்,
நீ நெருங்கி தொலைவில்,
பார் உருண்டை சதுரமாய்,
பார்வை தெரிய குருடாய்,
என் உயிர்ப்பும் மரணமாய்,
நீ காதல்ச்சொல்லி  விலக.