24 Oct 2009



உடைபட்ட இந்தியா எண் 7 -திரை விமர்சனம்



திகதி : 23 -ஏப்ரல்-2050

2025 வருடம் இந்தியா மேலும் உடை பட்டு அதனிடம் இருந்து தமிழகம் தன்னை ஏழாவது தனி நாடாக பிரித்த போது அப்பொழுது அங்கே ஊடக வியலாளராக இருந்த "மார்கன் மாளிபார்"(Margan Maliphar) என்ற ஸ்பெயின் எழுத்தாளரின் "Broken India" என்ற நூலை தழுவி எடுக்க பட்ட படம்.

கொஞ்சம் நழுவினாலும் கையை சுட்டுக்கொள்ள கூடிய வாய்ப்பு இருக்கும் படம்.

ஸ்ரீனிவாசன் எனும் தெலுங்கு நாட்டு இயக்குனரால் இயக்கப்பட்டு 2047 இல் வெளி வந்து இருக்கும் இப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க இயலாத படம்.

இயக்குனர் 1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா என்னும் போலி ஜனநாயக நாடு அணிந்து இருந்த முகமுடியை கிழித்து தொங்க விட்டு இருக்கிறார்.

கதையின் அடித்தளம் மூன்றாம் உலகப்போருக்கான சூழல் உருவாகும் வண்ணம் சீனா தனது கப்பல் படைகளையும்,இதர படைகளும் இந்து மகா சமுத்திரத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.

இந்திய ராணுவம் போர் விதிமுறைகளை மீறி தமிழக மக்களை தனது கேடயமாக பயன்படுத்த முனைகிறது.இதனை அடுத்து தமிழக மக்களுக்கும் , இந்திய ராணுவத்திற்கும் இடையே நடை பெரும் கிளர்ச்சி தான் படம்.

கதையை மட்டுமே மையமாக வைத்து நகரும் இப்படத்தில் பாத்திரங்களும் தங்களது பங்கை உணர்ந்து செய்து உள்ளனர்.

கிளர்ச்சியாளர் தாமிராவிற்கும்,கார்கிக்கும் நடைபெரும் உரையாடல்கள் புரிதலுக்குரியவை.

கிளர்ச்சியின் போது வெட்டப்படும் தலை,வெடிக்கும் வெடி குண்டு என பெரும்பாலும் காட்டாமல் வழிந்தோடும் இரத்தம் மூலம் காட்டுவது அருமை.


இறுதி கட்டத்தில் நிகார் எனும் கிளர்ச்சியால் ஊனம் உற்ற அன்பர், தனது மகனுக்கு பெட்ரோல் வெடிகுண்டு செய்து வீசும் முறையை கற்றுகொடுத்து,அது தவறுதலாக வீசப்பட்டு மகன் உயிரை இழக்கும் போது "இதை நான் வேண்டியா செய்தேன்" என்று சொல்லும் பொழுது இந்தியா திணித்த அடக்குமுறையை உணர முடிகிறது.


இந்திய படைபிரிவு 23 ஐ  15 பெண் கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தும் ஒரே காட்சியில் தமிழகம் போற்றும் பெண்ணின் வீரத்தை காட்டி விடுகிறார் இயக்குனர்.

கண்டிப்பாய் ஒவ்வொரு தமிழ் குடிமகனும் பார்க்க வேண்டிய படம்.

"எந்த ஒரு திணிப்பும் இன்றி இன்று நாம் தமிழ்நாட்டில் சுதந்திரமாய் வாழ்கிறோம்,இதற்காக நம் முன்னோர் கொடுத்துள்ள விலை பெரிது"

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நூறு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் வந்து இந்தியா ஒரு மாற்று காலனி நாடே என்று சொன்ன இந்த தெலுங்கு மொழி படம் "பெரியார் விருது" ,"அம்பேத்கர் விருது" உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.


பின் குறிப்பு:

இது முற்றிலும் எனது கற்பனையே.உலக சினிமா "செழியன்" அவர்களின் தாக்கம் இருக்க கூடும் எனது எழுத்து நடையில்.தயை கூர்ந்து லாஜிக் பார்க்க வேண்டாம்.

எண்திசை பதிவுக்கான குறிப்பு:

எதிர்காலத்தில் வரப்போகும் படத்திற்கான திரை விமர்சனம் எழுவது.

டிஸ்கி:
பின்னோட்டம் முக்கியம்.

8 comments:

Prathap Kumar S. said...

ஏன் 2025க்கு போறீங்க அதுக்கு முன்னாடி நடந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. நடக்குகூடாது என்றே நினைத்துக்கொள்வோம்... நல்லாருக்கு கற்பனை.

Prathap Kumar S. said...

ஏன் 2025க்கு போறீங்க அதுக்கு முன்னாடி நடந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. நடக்குகூடாது என்றே நினைத்துக்கொள்வோம்... நல்லாருக்கு கற்பனை.

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி நாஞ்சில் பிரதாப் அவர்களே.இந்த பதிவை தமிழ்மணம் காட்ட மாட்டேன் என்கிறது ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .அப்படி ஒன்று மிக விரைவில் நடந்தால் மிக்க சந்தோசம் அடைவேன்.

ஆண்ட்ரு சுபாசு said...

பின்னோட்டம் முக்கியம்.//

எழுத்து பிழையால் பின்னூட்டம் வரவில்லையோ?

பின்னோட்டம் என்றதும் பின்புறமாக ஓடுவது என்று நினைத்து விட்டனரோ?

சங்கர் said...

நல்ல பதிவு நண்பரே, ஆனால் காகித புலிகளாய் நாம் மக்கள் இருக்கும் வரை இது நிகழப்போவதில்லை (நிகழவும் வேண்டாம்)

சங்கர் said...

பதிவுடன் சம்பந்தமில்லா ஒரு கேள்வி, சுய அறிமுகத்தில் குறிப்பிட்ட புத்தகத்தை (வாலகாவிலிருந்து கங்கை வரை) படித்தாகி விட்டதா? பரிந்துரைத்தவர் யாரோ?

ஆண்ட்ரு சுபாசு said...

இன்னும் படிக்கவில்லை ..பரிந்துரைத்து ஓர்குட் நண்பர் ஒருவர் ..யாரென்று நினைவில் இல்லை .

ஆண்ட்ரு சுபாசு said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர் அவர்களே.