2 Apr 2009



ஒரு முயற்சியும் தோல்வியும்

ரெண்டு நாளைக்கு முன்னால் சாதம் பொங்கி விட்டு ..சரி மோர் குழம்பு வைத்து சாப்பிடலாம் என யோசித்து ..அம்மாவை தொலைபேசியில் அழைத்து மோர் குழம்பு வைக்கும் முறையை கேட்டு(?!) தெரிந்து கொண்டேன் ...நான் மோர் குழம்பு வைத்த முறையை கீழே சொல்கிறேன் ..அப்பறம் எப்படி வந்து இருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

இரண்டு தயிர் பாக்கெட் ஐ மோராக மாற்றி கொண்டேன்.பிறகு அதனுடன் கொஞ்சம் சீரகம்,தேங்காய் ஆகியன சேர்த்து மிக்சியில் அரைத்தேன்(?!)
அதை தனியாக எடுத்து வைத்து விட்டு அடுப்பில் பாத்திரத்தை வைத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பில்லை போட்டு தாளித்தேன் .
பின்னர் மோர் கரைசலை இதனுடன் சேர்த்தேன்.கொஞ்சம் கொதிக்கும் நிலைக்கு முன்னர் மஞ்சள் தூள்,உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து இறக்கினேன்.

உங்களுக்கே தெரிஞ்சு இருக்குமே எப்படி மோர் குழம்பு இருந்து இருக்கும் நு.
எங்க அம்மா சொன்னது ஒன்னு ..நான் செஞ்சது ஒன்னு ..என்ன அதை ஒளிப்படம் எடுக்காமல் விட்டு விட்டேன் ..இன்னைக்கு கூட சாம்பார் வைக்கலாம் நு யோசிச்சு இருந்தேன் ..ஆனால் மத்தியானத்துக்கு தேவையானது ஏற்கனவே இருக்கு ...

2 comments:

Suresh said...

வோட்டும் போட்டாச்சு நம்ம கடை பக்கம் வந்து படித்து போடுங்க வோட்ட

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி சுரேஷ் ..இதோ வந்துடுறேன்..