வாஸ்த்து சாஸ்திரம் என்கிறான்.எந்த நாட்டில் வாஸ்த்து சாஸ்திரம்?தமிழ்நாட்டில்,மராத்தியில்,குஜராத்தில்,வாழ்வதற்கே வசதியிலாமல் பிளாட்பாரத்தில் படுத்திருக்கும் ஜனங்ககிட்ட வாஸ்த்து மயிறு எனாத்துக்கு?
ஆயுர்வேதம் இவன் சாஸ்திரம்,வாஸ்த்து இவன் சாஸ்திரம்,ஜோசியம்,காலகணிதம்,நியுமராலாஜி அவனோட ஆயாலாஜி ..எலாத்தையும் சேத்து உழைக்குற நம்மள ஒரு அங்குலம் கூட விழிப்பு அடைந்து விடாமல் தடுக்கிற இந்த சக்திகளுக்கு பெயர் இந்துமதம்.
1932 இல் காந்திக்கே இந்த மேட்டரு புரியாம போய் வட்ட மேசை மாநாடுல நீயும் நானும் இந்துன்னு பாபாசாகேப் அம்பேத்கரை பார்த்து சொன்னாராம்.யாரு?மகாத்மா காந்தி.நாமெலாம் வெறும் ஆத்மா.அவங்க மட்டும் தான் மகாத்மா.
ஆத்மாவே இல்லைன்னு சொன்னார் புத்தர்.இதுல மகாத்மா இந்த தேசத்திற்கு பிதா!அந்த மகாத்மாவை பார்த்து "ஹெலோ மிஸ்டர் வாயை மூடுங்க" என்று சொல்லிவிட்டு "நீ எப்படி என்னை இந்துன்னு சொல்லுற?நீ சொல்லிக்கோ நீ இந்துன்னு..என்ன எப்படி சொல்லுற?" என்று கேட்டாராம்.அதற்க்கு "நீயும் இந்து நானும் இந்து" என்று காந்தி மீண்டும் சொன்னாராம்.
"நான் இந்து இல்லை,நீ மலத்தை தொட்டு இருக்கியா" என்று அம்பேத்கர் கேட்டாராம்.
கழுவிதான ஆகணும்.அவரு மகாத்மாங்கரதால 'எவாபரெட்' ஆகிடுமா என்ன?
மனிதனாய் பிறந்த என்னை தீண்டபடாதவன் என்று சொல்லி தொட்ட குளிக்கனும்னு சொல்லுற நீயும் இந்து,நானும் இந்துவா?யாருடா இந்துனா ..இந்திய மரபில் வந்த எல்லோரும் இந்துன்குறான்?
நாங்க சுடலைமாடனுக்கு காவு குடுத்து கட்டாந்தரையில் கடா வெட்டி அங்க உடுக்க சிலம்புல பாட்டுபாடி ,"சுடலை மாடன் வந்து ....நின்றான் நின்றான் அங்கே" நின்றான்,நின்றான்னு அறை மணிநேரமா நிக்குறோமே,நானும் இந்து.சேரிக்குள்ளே சாமி வரக்கூடாதுன்னு அடம்புடிக்கிற நீயும் இந்துவா?என்னுடயமரபும் உன்னுடைய மரபும் ஒண்ணா?
இந்த கேள்வியை தான் இங்கே எழுப்புகிறோம்.இந்திய தத்துவமரபுக்கும் இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்?
இந்திய தத்துவ மரபு மிக பெரியது.அகலமானது.ஆழமானது.அது சாங்கியர் என்று சொல்லபடுகிற கபிலரிலே ஆரம்பித்து புத்தரிலே தொடர்ந்து வள்ளலார்வரை வந்து இன்றைக்கும் பாமர மக்கள் என்று சொல்லப்படுகின்ற உழைக்கும் வர்கதினரிடயே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மரபு இந்திய தத்துவ மரபு.
14 comments:
அருமையான பதிவு..!
சுபாஷ் உங்களுக்கு ஒரு சபாஷ்...
@டக்ளஸ்.......
நன்றி டக்ளஸ்....... அண்ணா...
ஆண்ட்ரு சுபாசு.... சமூகத்தின் கழுத்தில் ஏறிக்கொண்டு கேட்ட்கப்படவேண்டிய கேள்வி இது. இப்படித்தான் நாட்டின் (தவறான) புனித பிம்பங்களை உடைத்தெறிய வேண்டும். நல்ல முயற்சி .
நன்றி அறிவுடை நம்பி ...கண்டிப்பாய் உடைத்தெறிவோம்...
Andrew Subaash...
Nalla muyarchi...
mooda nambikaigalin muzhu kudiyidam Indhu madhamae....!
pariyar thasan can be act for numrical advertisment is in it .first asked to him change about himself thing about others.
pariyar thasan can be act for numrical advertisment is in it .first asked to him change about himself thing about others.
ஐயா பிள்ளை அவர்களே ..அவரது கருத்தை மட்டுமே நான் இங்கு கூறி இருக்கிறேன்.அவர் கூறி இருக்கும் கருத்து இங்கு சரியே ...நீங்கள் அவர் மீது வைக்கும் மூடநம்பிக்கை குற்றச்சாட்டு மெய்யே(உண்மையில் எனக்கு அது குறித்து முழுதும் தெரியாது.உங்கள் திருப்திக்காக மெய்) ..அதற்காக அவர் கூறி இருக்கும் கருத்து தவறாகி விடாது.விமர்சனங்கள் வைக்கப்படாத மனிதர்கள் ஒரு சிலரே ...நீங்கள் ,நான் உட்பட விமர்சனத்திற்கு உரியவரே..
நன்றி இராவணன் அவர்களே...
கிறிஸ்துவராக இருக்கும் நீங்கள் கிறிஸ்துவத்தை சாடுங்கள். இந்துமதத்தை சாடினீர்கள் என்றால், இந்துக்கள் கிறிஸ்துவத்தை சாட தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்.
இதே போல கிறிஸ்துவை கேள்வி கேட்டு ஒரு இந்து பதிவு போட நேரமாகாது.
எனக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை ..நீங்கள் கிருத்துவம் குறித்து உண்மையை கூறுவீர்கள் எனில் ...விரைவில் செய்யுங்கள் ...பைபிளிலை ஒரு முழு வாசிப்பிற்கு பின்னர் நானே கிறித்துவம் குறித்து எழுதுகிறேன்..வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சீரா.
மேலும் சீரா அவர்களே ..வாசித்து கருத்துகளை தெளிவாய் உள்வாங்குதல் மிக்க நலம்.
யார் மீதொ உங்களுக்கு வெறுப்பு - அதனை ஏன் கொண்டுவந்து இங்கு சொருகியிருக்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை!ஏதாவது தவறாக எழுதியிருப்பதாக நீங்கள் கருதினால் தயவுசெய்து மன்னிக்கவும்.
நீங்கள் கூறி இருப்பதில் தவறேதும் இல்லை ..உங்கள் கருத்தை நீங்கள் கூறி இருக்கிறீர்கள் ..கட்டுரையில் எண் கருத்தை நான் கூறி இருக்கிறேன் ..மற்றபடிக்கு ..யார் மீதும் வெறுப்பு கொண்டு எழுதவில்லை ..அப்படி எழுதும் அளவுக்கு கீழ் தரமானவனும் நான் இல்லை ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்க முகுந்தன் அவர்களே.
Post a Comment