31 May 2009



எங்கே தவறினேன்?மீண்டும் உயிர் பெறுவது சாத்தியமா?

காலமும்,கால தாமதமும் எனது இனத்தை ஒரு முட்டுத்தெருவின் சந்தில் வைத்து எருமை மாடுகளை கொண்டு ஏய்துவுடும் அளவுக்கு கொண்டு வந்து விட்டேன்.என் இனம் நொறுக்கப்படும் போது எல்லாம் எந்த ஒரு முனங்கலும் அன்றி எந்த ஒரு போதையில் தவறி இருந்தேன் நான்??உணர்வற்று இருந்தவன் நான் அல்ல.அப்படி இருந்திருந்தால் இப்படி எழுதி இருக்கவே மாட்டேன்.

ஆயினும் நான் போதையில் தவறி விட்டேன் என்பது உண்மையே..

பிழைப்பு வாத கூட்டத்தில் எனக்கான பாதையை தேடி எந்த ஒரு பிடிமானமும் இல்லாது பயணிக்க வேண்டிய கட்டத்தில் நான் இருந்தேன்...இருப்பினும் என்னால் இயன்ற அளவு முனங்கல் செய்யவே செய்தேன்..ஒருவேளை பிடிமானம் இருந்து இருப்பின் கத்தி இருப்பேன்.

பிடிமானம் இல்லாத போதும் நான் கத்தி இருக்க கூடும்..நான் நாமாக இருந்து இருந்தால்..நாமாக இருந்த கூட்டம் சற்று பெரிதாய் இருந்து இருந்தால்...இயலாமையின் போது அடுத்தவர் மீது பழிபோடுவது தவறே..ஆனால் அதுவே உண்மை என இருக்கும் போது?

நான் என்னை நியாய படுத்தி கொள்ள விரும்பவே இல்லை ..நான் குற்றவாளியே...ஆனால் நீங்கள் அனைவரும் நிறுபராதி என்று எண்ணிவிடல் வேண்டாம் ...மாபெரும் தவறுகள் செய்தோமோ என்று எண்ண தோன்றுகிறது ..

பிரபகாரன் மாபெரும் வீரனே ...அண்ணனை இன்றும் நம்புபவன் நான்...ஆனால் எல்லாம் பிரபாகரன் பார்த்துக்கொள்வான் என்று நாம் இருந்து விட்டோமோ?அண்ணன் என்ன சினிமா கதாநாயகனா? நிகழ்வில் நாம் அண்ணனுக்கு என்ன பங்கு செய்தோம்?வெற்றி பெற்றால் ஆர்பரிக்கவும்..தோற்றால் அழுது புரளவும் மட்டுமே செய்தோம்..

நாம் ஒன்றும் சர்வதேச சமூகத்திடம் நிலைமையை பெரிதாய் ஒன்றும் எடுத்து செல்லவில்லையே...கூட்டமாய் கூடத்தயங்கினோமே...கட்சி,தலைவர்கள் நடத்திய கூட்டம் தவிர்த்து மாபெரும் எழுச்சி கூட்டம் நாம் எத்துனை நடத்தினோம்?என்னை போல மற்றவர் கூடினால் நாமும் சேரலாம் என்று தானே பலரும் நின்றோம்?தலைவர்களை நம்பி தலை இன்றி முண்டமாய் போனோமே...

முத்துகுமார் கொடுத்த பாதையை தொடர தலைவர்கள் தடைகள் இட்டபோது ..அடித்து நொறுக்கவும் குதித்து தாண்டவும் தவறினோமே..ஒற்றை விரல் மை எல்லாம் செய்து விடுமோ?அநியாயம் இன்று ஐநா வரை நிறைவேறி விட்டது..

இறந்து பிணமாகி போகிறவர்களை பார்த்து உச்சுக்கொட்டும் உயிருள்ள பிணமாய் இன்று இருக்கிறோமே...தவறிய நாம் ..நான்..பிழைப்பது சாத்தியமா?

1 comment:

ராஜ நடராஜன் said...

தமிழகத்தைப் பொறுத்த வரையில் அனைத்துக் கட்சிகளின் குறுகிய அரசியல் மற்றும் மு.கருணாநிதியின் முழு மனதில்லாத ஆனால் திசை திருப்பும் சூழ்ச்சிகள்.

அதே நேரத்தில் போராட்டம் என்றால் கலவரம்,கல்லெறி என்ற மக்கள் மனோபாவம்.

ஈழத்தமிழர்களின் இரண்டாய் நிற்கும் குணம்.கருணாவின் துரோகம்.

காங்கிரஸின் பலிவாங்கும் உணர்ச்சியும் அரச பீடத்தில் இருந்ததும்.