வாங்க வாங்க உங்கள் வருகைக்கு நன்றி ..இப்பவே சொல்லிடுறேன் பின்னூட்டம் முக்கியம்.
இப்ப நான் உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல போறேன்.சரியா ?(வந்தது வந்துடீங்க வாசிச்சிடுங்க)
A,B,C,D ஆகிய நாலு பேரும் நண்பர்கள்.தெருவுலயே இருக்குற டாணா திருப்ப பாலத்துல அவுங்களை எப்போதும் பாக்கலாம்.
அந்த தெருவுல Y அப்படின்னு ஒரு அழகான,வனப்பான,வாளிப்பான ஒரு பொண்ணு.(All males please avoid jollu)
Z ட்டு Z ட்டு அப்படினு அந்த ஊருக்கு நம்ம வால்பையன் மாதிரி ஒரு அழகான,கட்டுமஸ்தான,கட்டிளம் காளை வர்றாரு.
Z இடம் இருப்பது ஒரு Pulsar பைக்கு...
நம்ம Y இடம் இருப்பதோ ஒரு ஸ்கூட்டி பைக்கு.
ஒ A,B,C,D ஆ அவங்க ரெண்டு யமகா RX1250 cc பைக்கு வச்சு இருகாங்க.ரொம்ப யோசிக்க வேணாம் A,C அவங்க அப்பா காலத்து சைக்கிள் வச்சு இருக்காங்க .B,D ரெண்டு பேரும் பயணிகள் அந்த சைக்கிளுக்கு.
நம்ம Y,Z போறதும் வர்றதும் ஒரே பாதை..
நாம கதையோட இறுதி கட்டத்துக்கு வந்துட்டோம் அதனால இருக்கை முனையில் வந்து வாசிக்கவும்..
அன்னைக்கு சாயந்திரம் சாயந்தரம் மாதிரி தான் இருந்துச்ச்சு..
Z தன்னோட பைக்குல சும்மா கதாநாயகன் மாதிரி வர்றாரு
கேமரா எப்படி போது தெரியுமா?
Z வண்டி டயர் ,பின்ன அவரு,அப்பாலிக்கு அவரு முதுகு..அப்படியே Y யோட முதுகு ,காதுப்பக்கம் அலைபாயுற முடி,அவங்களோட புன்னகை அப்பறம் அவங்க வண்டி டயர்..
டபக்குனு ஒரு எருமை மாடு frame க்கு உள்ள வந்துட்டு உடனே ஓடுது..
கீசுன்னு ஒரு சத்தம் ,பின்னாடியே டமால் நு ஒரு சத்தம் ..
நடந்து விபத்து நடந்த இடம் "டாணா" பாலம்...
இப்ப frame la மாடு தெரியாது,இல்லேன்னா out of focus ல தெரியும் .
கீச்சு Z ஓட பைக்கு பிரேக்..
Y வந்து Z பைக்குல முட்டுச்சே அது தான் "டமால்"...
இப்ப Y,Z ஐ காட்டுறோம் அப்படியே A,B,C,D ஐ கட்டுறோம் .
அப்படியா கேமராவை எங்கயாச்சும் focus பண்ணி குலுக்குறோம்..(விவேக் காமடில அடிவாங்குரப்ப காட்டுவாங்களே அப்படி..)
இது தாங்க 'ஆண்களுக்கு எதிரான ஆண்களின் "பெண்கள் சார்பான ஆணாதிக்கம்"...'
புரிஞ்சுதா??!!
டிஸ்கி:
கொஞ்சம் ஊக்கம் குடுக்கவும்.அப்பா தான் இப்படி தொல்லை எல்லாம் கொடுக்க மாட்டேன்.
26 Oct 2009
24 Oct 2009
உடைபட்ட இந்தியா எண் 7 -திரை விமர்சனம்
திகதி : 23 -ஏப்ரல்-2050
2025 வருடம் இந்தியா மேலும் உடை பட்டு அதனிடம் இருந்து தமிழகம் தன்னை ஏழாவது தனி நாடாக பிரித்த போது அப்பொழுது அங்கே ஊடக வியலாளராக இருந்த "மார்கன் மாளிபார்"(Margan Maliphar) என்ற ஸ்பெயின் எழுத்தாளரின் "Broken India" என்ற நூலை தழுவி எடுக்க பட்ட படம்.
கொஞ்சம் நழுவினாலும் கையை சுட்டுக்கொள்ள கூடிய வாய்ப்பு இருக்கும் படம்.
ஸ்ரீனிவாசன் எனும் தெலுங்கு நாட்டு இயக்குனரால் இயக்கப்பட்டு 2047 இல் வெளி வந்து இருக்கும் இப்படம் உலக சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க இயலாத படம்.
இயக்குனர் 1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா என்னும் போலி ஜனநாயக நாடு அணிந்து இருந்த முகமுடியை கிழித்து தொங்க விட்டு இருக்கிறார்.
கதையின் அடித்தளம் மூன்றாம் உலகப்போருக்கான சூழல் உருவாகும் வண்ணம் சீனா தனது கப்பல் படைகளையும்,இதர படைகளும் இந்து மகா சமுத்திரத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
இந்திய ராணுவம் போர் விதிமுறைகளை மீறி தமிழக மக்களை தனது கேடயமாக பயன்படுத்த முனைகிறது.இதனை அடுத்து தமிழக மக்களுக்கும் , இந்திய ராணுவத்திற்கும் இடையே நடை பெரும் கிளர்ச்சி தான் படம்.
கதையை மட்டுமே மையமாக வைத்து நகரும் இப்படத்தில் பாத்திரங்களும் தங்களது பங்கை உணர்ந்து செய்து உள்ளனர்.
கிளர்ச்சியாளர் தாமிராவிற்கும்,கார்கிக்கும் நடைபெரும் உரையாடல்கள் புரிதலுக்குரியவை.
கிளர்ச்சியின் போது வெட்டப்படும் தலை,வெடிக்கும் வெடி குண்டு என பெரும்பாலும் காட்டாமல் வழிந்தோடும் இரத்தம் மூலம் காட்டுவது அருமை.
இறுதி கட்டத்தில் நிகார் எனும் கிளர்ச்சியால் ஊனம் உற்ற அன்பர், தனது மகனுக்கு பெட்ரோல் வெடிகுண்டு செய்து வீசும் முறையை கற்றுகொடுத்து,அது தவறுதலாக வீசப்பட்டு மகன் உயிரை இழக்கும் போது "இதை நான் வேண்டியா செய்தேன்" என்று சொல்லும் பொழுது இந்தியா திணித்த அடக்குமுறையை உணர முடிகிறது.
இந்திய படைபிரிவு 23 ஐ 15 பெண் கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தும் ஒரே காட்சியில் தமிழகம் போற்றும் பெண்ணின் வீரத்தை காட்டி விடுகிறார் இயக்குனர்.
கண்டிப்பாய் ஒவ்வொரு தமிழ் குடிமகனும் பார்க்க வேண்டிய படம்.
"எந்த ஒரு திணிப்பும் இன்றி இன்று நாம் தமிழ்நாட்டில் சுதந்திரமாய் வாழ்கிறோம்,இதற்காக நம் முன்னோர் கொடுத்துள்ள விலை பெரிது"
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நூறு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் வந்து இந்தியா ஒரு மாற்று காலனி நாடே என்று சொன்ன இந்த தெலுங்கு மொழி படம் "பெரியார் விருது" ,"அம்பேத்கர் விருது" உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.
பின் குறிப்பு:
இது முற்றிலும் எனது கற்பனையே.உலக சினிமா "செழியன்" அவர்களின் தாக்கம் இருக்க கூடும் எனது எழுத்து நடையில்.தயை கூர்ந்து லாஜிக் பார்க்க வேண்டாம்.
எண்திசை பதிவுக்கான குறிப்பு:
எதிர்காலத்தில் வரப்போகும் படத்திற்கான திரை விமர்சனம் எழுவது.
டிஸ்கி:
பின்னோட்டம் முக்கியம்.
மீண்டும் மீண்டும் நான்...
ரொம்ப விரைவாக மட மட வென்று 41 பதிவு எழுதி ஆகிற்று எல்லாத்தயும் திரும்பி பார்க்கும் பொழுது பெரிதாய் ஒன்றும் சாதித்தாய் தோன்றவில்லை.
எதோ என்னை ஈர்க்கும் ஒன்று இரண்டு பதிவுகள் வாசிப்பாளர் யாரையும் ஈர்த்ததற்கான அறிகுறி தெரியவில்லை.
கலாச்சாரம் என்றால் என்ன?,கலாச்சாரம் ஏன் வேண்டும் ஆகிய பதிவுகளை மீண்டும் ஒருமுறை வாசிக்கும் பொழுது கொஞ்சம் இப்பொழுது அதன் மீதான கருத்து மாறி இருப்பது தோன்றுகிறது.
மாதவாஜ் அண்ணனின் "நடிகர்கள்" குறித்த பதிவை வாசித்து விட்டு அந்த தாக்கதிலயே எழுதிய "நடிகர்கள் அறிவற்றவர்களே" என்ற பதிவு என்மீதான சலிப்பை தருகிறது.
எனது கிறுக்கல் கோழிகள் ஒருபோதும் வாசிக்கபடுவதே இல்லை (அல்லது) வாசிப்பவருக்கு புரிவதே இல்லை.
ஒருமுறை என் கல்லூரி நண்பன் என்னை பார்த்து கூறியது "You are a peculiar person" என்று.அந்த Peculiarity க்கான அடையாளம் எனது பதிவுகளில் நானே காணவில்லை.
ஆக எழுதுவது ஒரு பதிவோ இரண்டு பதிவோ அது எனது எழுத்து படி எனது தனித்தன்மையின் படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் அத்தகைய பதிவை வெளி இடும் முன்னர் எண்திசை பதிவு என எனது பதிவுக்கான ஒரு ஒட்டு பதிவை வெளியிட்டேன்.
ஆனாலும் நேரம் என்னை எனது பதிவை எழுத அனுமதி தரவில்லை.சரி இப்பொழுது உள்ள நேரத்தில் விரைவில் எனது பதிவு தயாராகிறது.
நீங்கள் அனைவரும் என்னை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவை இடுகிறேன்.
மற்றும் ஒரு வேண்டுகோள் ..வாசிக்கும் நீங்கள் பினூட்டம் இடுவது என்னை மேலும் நல்ல முறையில் எழுத தூண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
21 Oct 2009
வலைப்பதிவர்களே -எண்திசை பதிவு!!
ஒரு புதிய பதிவு வகையை எனது சிந்தனை கொண்டு அறிமுகபடுத்துவதில் பெருமிதம் அடைகிறேன்.
ஏற்கனவே தொடர்பதிவு என்று ஒன்று இருக்கிறது.இதன் படி ஒருவர் ஒரு பதிவை பதிய, அவர் அழைத்து அவரை தொடர்ந்து மற்றவர் பதிய வேண்டும். பின்பு அவர் அழைப்பில் மற்றொருவர் என தொடர்கிறது ..இது தான் நான் புரிந்து கொண்டு உள்ளது.
இதில் எனக்கு பெரும் குறையாக தோன்றியது அதை போன்ற பதிவை பதிய விரும்பும் ஒருவர் யாரேனும் அழைக்க வேண்டும் என காத்து இருக்க வேண்டி இருக்கிறது(அழைக்காமலும் பதியலாம் என்பது உண்மையே.அழைப்பின் கீழ் பதிகையில் பெரும்பான்மை வாசகர்களை கவர முடிகிறது)
மேலும் சில நேரம் நாம் தொடர்பதிவுக்கு அழைத்து யாரும் பதியாமல் போவதும் நடக்கிறது.
இதுபோக தொடர்பதிவுகள் ஓரளவு பிரபலாமாகி விட்டவர்களிடயே மட்டும் நடக்கிறது.
ஆக இந்த குறையை தீர்க்க யோசித்த போது எனக்கு இரண்டு வகை பதிவுகள் தோன்றின.
ஒன்று குறையை தீர்க்கும் வண்ணமும்,மற்றொன்று குறைகளுடனே ஆனால் புதிய தொரு வாய்ப்பை தரும் வண்ணமும் தோன்றின.
வட்டப்பதிவு: இது அப்படியே தொடர்பதிவை போலவே ..அழைப்பின் பேரிலேயே பதியப்பட வேண்டும்.ஏற்க்கனவே பதிந்தவரை மீண்டும் பதிய அழைக்கலாம்.
எண்திசைப்பதிவு: இதன் படி யாரும் அழைக்கப்பட வேண்டாம்.முதலில் பதிபவர் தனது பதிவில் எண்திசைப்பதிவு என்று "tags" இல் குறிப்பிட்டு இருந்தால் போதும்.யாரேனும் அதை தொடர்ந்து பதியலாம்.
தொடர்ந்து பதிபவர் யாரை தொடரகின்றாரோ அவரது வலையின் சுட்டியை தனது பதிவில் இடுவதுடன்,அவரை போலவே "tags" இல் எண்திசைப்பதிவு எனவும்,மேற்கொண்டு தொடர்ந்தவரின் வலைப்பூவின் தலைப்பையும் கொடுத்து விடல் வேண்டும்.
இதில் உள்ள நன்மைகள்
புதியவர்கள் பழையவர் என்ற பேதம் குறையும் என நம்புகிறேன்.
இன்னும் புதிய புதிய வலைபூக்களை படிக்கும் வாய்ப்பு அதிகருக்கும் .
இது குறித்த உங்கள் மேலான கருத்துகளை எதிர் நோக்குகிறேன்.
இன்று இரவு எனது முதல் எண்திசைப்பதிவு ஆரம்பம் ஆகும்.
ஏற்கனவே தொடர்பதிவு என்று ஒன்று இருக்கிறது.இதன் படி ஒருவர் ஒரு பதிவை பதிய, அவர் அழைத்து அவரை தொடர்ந்து மற்றவர் பதிய வேண்டும். பின்பு அவர் அழைப்பில் மற்றொருவர் என தொடர்கிறது ..இது தான் நான் புரிந்து கொண்டு உள்ளது.
இதில் எனக்கு பெரும் குறையாக தோன்றியது அதை போன்ற பதிவை பதிய விரும்பும் ஒருவர் யாரேனும் அழைக்க வேண்டும் என காத்து இருக்க வேண்டி இருக்கிறது(அழைக்காமலும் பதியலாம் என்பது உண்மையே.அழைப்பின் கீழ் பதிகையில் பெரும்பான்மை வாசகர்களை கவர முடிகிறது)
மேலும் சில நேரம் நாம் தொடர்பதிவுக்கு அழைத்து யாரும் பதியாமல் போவதும் நடக்கிறது.
இதுபோக தொடர்பதிவுகள் ஓரளவு பிரபலாமாகி விட்டவர்களிடயே மட்டும் நடக்கிறது.
ஆக இந்த குறையை தீர்க்க யோசித்த போது எனக்கு இரண்டு வகை பதிவுகள் தோன்றின.
ஒன்று குறையை தீர்க்கும் வண்ணமும்,மற்றொன்று குறைகளுடனே ஆனால் புதிய தொரு வாய்ப்பை தரும் வண்ணமும் தோன்றின.
வட்டப்பதிவு: இது அப்படியே தொடர்பதிவை போலவே ..அழைப்பின் பேரிலேயே பதியப்பட வேண்டும்.ஏற்க்கனவே பதிந்தவரை மீண்டும் பதிய அழைக்கலாம்.
எண்திசைப்பதிவு: இதன் படி யாரும் அழைக்கப்பட வேண்டாம்.முதலில் பதிபவர் தனது பதிவில் எண்திசைப்பதிவு என்று "tags" இல் குறிப்பிட்டு இருந்தால் போதும்.யாரேனும் அதை தொடர்ந்து பதியலாம்.
தொடர்ந்து பதிபவர் யாரை தொடரகின்றாரோ அவரது வலையின் சுட்டியை தனது பதிவில் இடுவதுடன்,அவரை போலவே "tags" இல் எண்திசைப்பதிவு எனவும்,மேற்கொண்டு தொடர்ந்தவரின் வலைப்பூவின் தலைப்பையும் கொடுத்து விடல் வேண்டும்.
இதில் உள்ள நன்மைகள்
புதியவர்கள் பழையவர் என்ற பேதம் குறையும் என நம்புகிறேன்.
இன்னும் புதிய புதிய வலைபூக்களை படிக்கும் வாய்ப்பு அதிகருக்கும் .
இது குறித்த உங்கள் மேலான கருத்துகளை எதிர் நோக்குகிறேன்.
இன்று இரவு எனது முதல் எண்திசைப்பதிவு ஆரம்பம் ஆகும்.
14 Oct 2009
புதிதாய் பழையதாய்
நேர் வளை பாதையில்,
நீ நெருங்கி தொலைவில்,
பார் உருண்டை சதுரமாய்,
பார்வை தெரிய குருடாய்,
என் உயிர்ப்பும் மரணமாய்,
நீ காதல்ச்சொல்லி விலக.
7 Oct 2009
என்னவள்,செருப்பு,காதல்-மீள் பதிவு
இது ஒரு காதல் கதை....இல்லை இல்லை காதல் நிஜம்.
கொண்டகாதலில் கொஞ்சமும் இடறாமல் வாங்கி வந்து இருந்தேன் அவளுக்கென அழகாய் ஒரு உயரமான குதிங்கால் செருப்பு .
செருப்பை நன்றாய் பார்த்துவிட்டு கேட்டாள் என்னவள் "எனக்கு ஏன் இவளவு உயரமான செருப்பு"
முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு நான் சொன்னேன் "நீ உயரம் பத்தாமல் என்னை அடிக்க கஷ்ட படுகையில்..மனது கஷ்டமாய் இருக்குறது" என்று ..
முன்னால் நகர்ந்து வந்து வந்து கட்டி அனைத்து ...
"அய்யய்யோ கடிக்கிறா ..."
என்னவளோ பட்டணத்தில் படித்தவள்.
வைகை ஆற்றின் பாசனம் பெரும் ஒருவயலின் வரப்பில் அவள் தவறி விழுந்ததால் தவறாமல் நிகழ்ந்தது எங்கள் சந்திப்பு.
"செருப்பிட்டு வரவேணாம் வயலில்" என உதிர்த்தேன் அறிவுரையை.அதுவே வினை ஆகுமா?ஆனதே ...
அதே வரப்பில் தேவதை போல பட்டுடுத்தி..இல்லாத இடுப்பில் குடத்துடனும்,வலக்கையில் செருப்புடனும் அவள் ...
பளீர் என ஒரு அரை வாங்கினேன் காதலை சொல்லி....
அதன் பிறகு ஆத்தங்கரை ஓரம்,பெரு வரப்பு, சிறு வரப்பு என மாறாத பருவகாலம் போல மாறாமல் விழுந்தது செருப்படி.கடைசியாக செருப்பும் பிய்ந்தது,காதலும் கனிந்தது....செருப்படி பட்ட இடம் எல்லாம் செவ்விதழ் பதிந்தது பின்பொரு காலம் ...
அப்படி ஒரு காலத்தில் தான் ..காதல் கனிய சொன்னேன்."கழிவுகளில் பட்ட உன் செருப்பு படும் இடம் அவ்வளவு சுவையோ,இதழ்கள் இதமாய்
மேய்கின்றனவே"
..........
"பளார்...."என் கடவாய் பல்லு....."
..........
அன்றும் அப்படித்தான்...
நானும் அவளும் காலாட நடந்து ஆத்தங்கரை செல்லலாம் என உரைத்தேன்..
சரி என்றாள் அவளும்,என்றும் நான் கொண்ட காதலோடு ...அவளின் விரல் பற்றி ஒருவர் நடக்கும் வரப்பில் இருவர் நடந்தோம்..
வந்தது அவள் முதல் முறை இடறிய இடம்..காதல் கனிய நான் உரைத்தேன் "இங்கு தான் இறக்கை இல்லா ஒருதேவதை சேற்றில் குளித்தால் என்று"
பளார் ....சொத்...இனி நான் குளிக்கவேண்டும்.
...............
பிறிதொருநாள் நடந்தது இது ..நேற்று இரவு வாங்கிய பளாரில் பிய்ந்தே போய்விட்டது செருப்பு ..
கொண்டகாதலில் கொஞ்சமும் இடறாமல் வாங்கி வந்து இருந்தேன் அவளுக்கென அழகாய் ஒரு உயரமான குதிங்கால் செருப்பு .
செருப்பை நன்றாய் பார்த்துவிட்டு கேட்டாள் என்னவள் "எனக்கு ஏன் இவளவு உயரமான செருப்பு"
முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு நான் சொன்னேன் "நீ உயரம் பத்தாமல் என்னை அடிக்க கஷ்ட படுகையில்..மனது கஷ்டமாய் இருக்குறது" என்று ..
முன்னால் நகர்ந்து வந்து வந்து கட்டி அனைத்து ...
"அய்யய்யோ கடிக்கிறா ..."
"புது செருப்பு பிஞ்சா மனசு கஷ்டமா இருக்கும்" பிற்சேர்க்கையாக சேர்த்துக்கொண்டாள்.
குறிப்பு:என்னவோ எனக்கு இந்த பதிவை மீள் பதிவு பண்ண தோன்றியது.
குறிப்பு:என்னவோ எனக்கு இந்த பதிவை மீள் பதிவு பண்ண தோன்றியது.
1 Oct 2009
ஓராயிரமாய் எழுவோம்(காணொளி பாடல் வரிகளுடன்)
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!
தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.
தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!
தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.
குருதியால் ஒரு தமிழீழம் கொண்டுவா மகளே-உன்னை
தூண்டில் இட்டவன் பிணக்கோலம் கண்டு வா மகளே.
கருவினால் நீ புலியடி கொதித்துவா மகளே-என்
கண்களில் நீர் வைத்தவனை மிதித்து வா மகளே.
செந்தமிழ் உடைதறித்து வா மகளே-?????
செருக்கு நெஞ்சர் வெறிப்படை நெரித்து வா மகளே.
"சாவே என்னை உன்கையில் தருவேன்,
தமிழர் கையில் விடுதலை தா.
சாவே நின்னை இன் உயிர் என்பேன்,
தமிழீழம் உயிர் பெற நீ வா"
கொடியவர் சிறையை கொளுத்து,
கொளுத்து கொளுத்து கொளுத்து டா.
பகைவர் மடிய தலைகள் விடுத்து,
நாளை விடியும்பார் காலம் வெளுத்து.
பண்டை தமிழனாய் மாறடா,
மடை(?) உறைதீயில் வாழ் பாய்ச்சடா பாய்ச்சு.
சண்டை களம் நோக்கி ஏறுடா,
சாதிவாள் எதிரினில் பாய்ச்சடா பாய்ச்சு.
தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.
தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!
வந்து பாயும் குண்டிடை நடந்துவா மகனே-உன்னை
வளைத்து நின்ற கொடுந்தடையை கடந்துவா மகனே.
தோளிரண்டில் வெம்புயல் நீ தூக்கிவா மகனே-உன்னை
துடிக்க வைத்த சிங்களத்தை தாக்கிவா மகனே.
????? விடுதலை பறித்து வா மகனே-உந்தன்,
நலம் கெடுப்பார் எலும்பினை முறித்துவா மகனே.
"விலங்கு பூட்டிய அடிமை மண்ணில்,
வீடும் வாழ்கையும் ஒரு கேடா?
உள்ளம் கலங்கி நடுங்கும்,
உள்ளம் உடையார் நாடென் தாய் நாடா?
ஏ! சிங்களர் என்ன கொங்கோ?(?)
கொங்கோ?கொங்கோ?
மண்ணில் எங்கள் தமிழருங்கோர்,
தமிழா பொங்கி எழுந்து களம் போ.
நீ யாது கலக்கில் நீ யாது
என் ????? பலமென்று சாதலும் சாது.
தொட்டு கிடந்தவன் மண்ணில் கிடந்த,
பாழ் வரலாறு இருக்கடா இருக்கு.
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
விழ விழ எழுவோம்,
ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!
தமிழ் ஈழ தாகம் தணியாது,
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது.
எரிமலை வெடிக்கும்!
புயல் வீசி அடிக்கும்!
எண்திசை புலிக்கொடி பறக்கும்!
வருவான் புலிப்படை தலைவன்,
வரும்நாள் பிறக்கும்,
தமிழீழம் பிறக்கும்.
குறிப்பு:
செவியால் கேட்ட போது அறிந்து கொள்ள முடியாத வார்த்தைகளை "?????" ஆலும் சந்தேகப்படும் வார்த்தைகளை "?" ஆலும் குறித்து உள்ளேன்..யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.மேற்கொண்டு பிழைகளையும் சுட்டி காட்டவும்.
Subscribe to:
Posts (Atom)