"நாட்டுக்கொரு சேதி சொல்ல நாகரிக கோமாளி வந்தேனுங்க".......இந்த பாடல் இடையில் வரும் ஒரு வசனம் ....
முதலாளி: "தேயிலை இறக்குமதி பண்ணபோகிறோம்"
மற்றவர்:அப்ப உள்ளூர் விவசாயிங்க கதி?
முதலாளி:எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன?நமக்கு லாபம் முக்கியம்.
இது முதலாளிங்க மனநிலை அல்ல..இன்னைக்கு நம்மில் பலரின் மனநிலை இதுதான்.அன்னைக்கு முதலாளி மட்டும் தான் கேட்டான் இன்னைக்கு எல்லோரும் கேக்குறீங்க...
நான் சாதியை அறவே வெறுப்ப
வன்.ஆனாலும் இங்கு அது தேவைபடுவதால் குறிப்பிடுகிறேன்.
சில நாட்களுக்கு முன்னாள் BC வகுப்பை சேர்ந்த நண்பன் ஒருவனிடன் வாக்குவாதத்தின் போது கேட்க நேர்ந்த கேள்விகள்...
கேள்வி:இன்னைக்கு நீ படிக்கிறாய் என்றால் யார்காரணம்?
பதில்: பெரியார்....
கேள்வி: அப்ப அம்பேத்கர்???
பதில்:தலித்துக்கு போராடினார்..
கேள்வி:இந்து உன் மதமா?
பதில்:இல்லையா?
கேள்வி:ஒ...சாதி எங்கிருந்து வந்தது?
பதில்:தெரியாது...
கேள்வி:இதை எல்லாம் ஏன் தெரிந்து வைத்து கொள்ளவில்லை?
பதில்:தெரிந்து நான் என்ன பண்ண போறேன்?தெரிஞ்சுகவேண்டிய அவசியம் இல்லை ...
நான்:டேய் வரலாற்றை,வந்த பாதையை தெரிஞ்சிக்கணும்...
பதில்:அப்படி ஒன்னும் எனக்கு அவசியம் இல்லை..
பேச்சு அங்கே சுத்தி இங்க சுத்தி இன உணர்விற்கு வருகிறது..
இன உணர்வே வேண்டாம் என்பது அவன் வாதம்.சரி அதற்க்கு மேலே எனக்கு பேச விருப்பம் இல்லை..
மற்றொரு நண்பரிடம் ஈழ தமிழர் விடுதலை குறித்து பேசியபோது.
.(முத்துகுமரன் உயிர் தியாகத்திற்கு பின்னர்)
நான்:முத்துகுமரனின் கடிதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
நண்பர்:கொண்டு சேர்த்தால் மட்டும் விடுதலை கிடைத்துவிட போகிறதா?
பகத்சிங்கும்,பெரியாரும்,அம்பேத்கரும் இப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா?
எங்கு இருந்து வந்தது இந்த மனநிலை?
இங்க எனது பார்வையில் நான் உணர்ந்தவற்றை மட்டும் சொல்கிறேன்.
தொண்ணூறுகளுக்கு முன்னாள் போராட்ட மனோபாவம் இருக்கவே செய்தது...ஆனால் சரியாக 92 என்று நினைகிறேன்...முதல் குட்டி சாத்தான்...sun தொலைக்காட்சி கால் எடுத்து வைக்கிறது.அதுவரைக்கும் ,வயலும் வாழ்வு பாக்கவும்,என்னைக்காவது போடப்படும் திரைப்படம் பார்க்கவும் உட்கார்ந்த மொத்த கூட்டமும்...தொல்லை காட்சியால் கட்டுக்குள் இருக்கப்படுகிறது.
அதுக்கு முன்னால் குழந்தைகள் கூடி விளையாடுவது,அதன் மூலம் பரஸ்பரம் அன்புகள் வளர்ந்து வந்தது.தொல்லை காட்சியில உக்காந்த பிறகு ..எல்லாமே மாறுகிறது.மனோ நிலையின் முதல் மாற்றம் இங்க தான்..
உலகமயமாக்கல் எனும் விஷம்.....
உலகமயமாக்கல் எனும் பூதம் என்னவெல்லாம் பண்ணியது தெரியுமா????
1)சிறுதொழில் அழிப்பு
2)கலாச்சார திணிப்பு
3)முதலாளித்துவ கொள்கை மூலமா ...வறுமை அதிகரிப்பு....
வேலை வாய்ப்பு அதிக படுத்தபடுகிறது உலக மயமாக்கல் மூலமாக அப்படின்னு ஒரு பார்வை உள்ளது.இதை பற்றி எனக்கு முழுவதும் தெரியல ..ஆனா கேள்விகள் பல உள்ளன.
1)இங்கு விற்பனை ஆகும் அனைத்து அந்நிய பொருட்களும்,அதன் உதிரி,உருவாக்க தேவையான அனைத்தும் இங்கேயே தயார் செய்ய படுகின்றனவா?
2)நெசவு செய்து கொண்டு இருந்தவர்களுக்கு என்ன மாற்றுவேலையை இந்த உலகமயமாக்கல் கொடுத்தது?
3)இந்த உலகமயமாக்கல் மூலம் அந்நிய தயாரிப்பளர்களை உள்ளே விட்ட காரணத்தால் ..சிறு தொழில் செய்துகொண்டு இருந்தவர்கள் தொழிற்புரட்சி அடைந்துவிட்டு ..அந்நிய நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவிற்கு வளர்ந்துவிட்டனரா?
4)இந்த நிறுவங்களில் இலாபதொகையில் எத்துனை சதவீதம் இந்தியாவிலேயே சுழற்றபடுகிறது?
இதை கேட்க்கும் போது இன்னொன்னும் சொல்லிகிறேன் ...நீயா?நானா? கோபி சொல்கிற மாதிரி எந்த அளவுக்கு உலகமயமாக்கல் நல்லதை செய்ததோ ..அதே அளவு கெட்டதையும் செய்தது...
நான் சொல்வதாய் இருந்தால் கொஞ்சம் அதிகமாகவே கெட்டதை செய்தது.அதை தான் பிழைப்புவாத மனோபாவ மாற்றம் அப்படின்னு சொல்லலாம்.
கைல வச்சு எண்ணி பார்க்க முடியாத அளவு பணம்,வீடு,கார்....எல்லா சொகுசு பொருட்களையும் வாங்கும் அளவுக்கு பணபலம்.
என்ன ஆகுது?
எல்லாம் மாறுது...தான் என்னும் அகந்தை.பெற்ற தாயை வீடு வேலைகாரி என அறிமுக படுத்தக்கூடிய மனோபாவம்.
"திறமை இருக்கிறது பிழைக்கிறோம் அப்படின்னு சொல்லிக்கிறான்"..அப்படினா வயலில் உழைப்பவனுக்கு திறமை இல்லையா?
போர் என்றால் மக்கள் சாவது இயல்புதானே என்ற அறிக்கையை ஆமாம் போட்டு ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் இருக்கிறோம் இன்று.
இல்லை நாங்களும் பண்ணுறோம்...அநாதை இல்லத்திற்கு போறோம்,அது பண்ணுறோம் இது பண்ணுறோம் அப்படின்னு சொல்லுறீங்களா?உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் தான் ..ஆனால் நீங்கள் சிறுபான்மையினர் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீயா,நானா நிகழ்ச்சியில் ஒரு பெரியவாள் சொன்னாரே ...கும்பகோணம் தீவிபத்தில் இறந்து போன அத்துனை பேரும் போன ஜென்மத்தில்
பாவம் செய்தவாள் என்று ..உங்களை சுற்றி ஒரு பெரிய கூட்டம் அப்படித்தான் இருக்கிறது.
மேலும் ஒருகணம் யோசித்து பாருங்கள் ..உங்கள் தகுதிக்கு ஏற்பதான் செய்கிறீர்களா???
அனாதைகளுக்கு செய்தால் புண்ணியம் என்ற மனோநிலையில் செய்கிறீர்களா?
இல்லை, என்னைப்போல அவனும் ஒருவன்(எண் சகோதரன்,சகோதரி) என செய்கிறீர்களா?.
பணத்தால் மட்டும் செய்யாதீர்கள்...உங்கள் நேரப் பகிர்வுகளாலும் செய்யுங்கள்.
என் சகோதரன்,சகோதரி அங்கே சாகிறான்...இங்கோ நடைபிணமாய் வாழ்கிறான்..
எவன் என்ன ஆனால் எனக்கென்ன? எப்படி போனால் எனக்கென்ன?