21 Feb 2009



இப்படியும் ரசிக்கலாம்

இருவேறு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை.

இரண்டு சம்பவங்கள் என்ன என்று சொல்லி விடுகிறேன்.முதல் சம்பவம் சென்னை சட்டகல்லூரி மாணவர் மோதல்.இரண்டாவது சம்பவம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நடந்த தாக்குதல்.

பத்து திருமணமாகாத ஆண்களை(கல்லூரி தோழர்களை) கொண்ட இரு தனி வீட்டில் நான் தங்கி உள்ளேன்.தனிப்பட்ட முறையில் அத்துணை பேரையும் எனக்கு நன்றாகவே தெரியும்.மிகவும் நல்ல குண நலன்களை கொண்டவர்கள் தான் அனைவரும்.

ஆனால் மேற்கண்ட இரண்டு சம்பவங்களை இவர்கள் தொலைகாட்சியில் பார்த்த பார்வை என்னை பெரிதும் அதிர்ச்சி கொள்ள வைத்தது.
இவர்கள் இந்த இரண்டு தாக்குதலையும் மிகுந்த புன்னைகைக்கு இடையில் ரசித்தே பார்த்தனர்.ஒவ்வொரு முறை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ...அவர்கள் மனதில் அது ஆழமாக பதிவதை உணர முடிந்தது.

இரண்டாம் முறை பார்க்கும் போது..

"இப்ப பாரு கால்லே போடுவான்"

"பேசிட்டு இருக்கான்ல ...இவனக்கு இப்ப மண்டைய பொளந்து ஓட உடுவானுங்க பாரு"

"இவன் என்ன தக்காளி சட்டினிய மூஞ்சில அப்பி இருக்கான்"

"காலை உடச்சு தொங்க விட்டு அடிகிரானுங்க"

இன்னும் பல ..

மூன்றாம் முறை ,நான்காம் முறை என செல்ல செல்ல ..இவர்கள் இன்னும் ஆழமாக அதில் ஊடுருவி விட்டார்கள்

இப்படி பெரும்பாலும் ரசிக்கும் வசனமாகவே இருந்து விட்டன.என்னால் உகிக்கவே முடியவில்லை ..ஏன் இப்படி ?எதனால்?

பெரும்பாலும் இவர்கள் சம்பவத்தின் பின்னணி ஏதும் தெரியாமலே இப்படி ரசிக்கிறார்கள்.இவர்களுக்கு ஊடகத்தில் தெரிய படுத்தும் போது ...அங்கே அடிவாங்குபவன் நல்லவனாகவும்,அடிப்பவன் கெட்டவனாகவும் தெரிகிறான்.மறைக்கப்படும் அநீதி குறித்து இவர்கள் அறியவிரும்பவில்லை ..நாம் எடுத்து கூறும் போதும்...

இவர்கள் மட்டும் அல்ல ..இந்த ஒவ்வொரு நொடிக்கும்,பேருந்திலும்,போது இடங்களிலும்,அலுவலகங்களிலும் இதை ரசித்து ரசித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

இப்படி குரூரமாக ரசிக்கும் மனநிலை எங்கு இருந்து வந்தது?

யாருக்கேனும் பதில் தெரியுமா?

5 comments:

கார்க்கிபவா said...

/இந்த ஒவ்வொரு நொடிக்கும்,பேருந்திலும்,போது இடங்களிலும்,அலுவலகங்களிலும் இதை ரசித்து ரசித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.இப்படி குரூரமாக ரசிக்கும் மனநிலை எங்கு இருந்து வந்தது?யாருக்கேனும் பதில் தெரியுமா?/

காட்சி ஊடகங்கள்தான் காரணம் என நினைக்கிறேன். சினிமாவும், தொலைக்காட்சிகளும்

ஆண்ட்ரு சுபாசு said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்க்கி அவர்களே..

Anonymous said...

ஒவ்வொருத்தரோட அடி மனசுலயும் ஒரு ஜாக்கி ஜான் குடியிருக்கார். அதுதான் காரணம்.
http://mahawebsite.blogspot.com/

Anonymous said...

http://mahawebsite.blogspot.com/
ஒவ்வொருத்தரோட அடி மனசுலயும் ஒரு ஜாக்கி ஜான் குடியிருக்கார். அதுதான் காரணம்.

ஆண்ட்ரு சுபாசு said...

மகா உங்கள் கருத்துக்கு நன்றி ..இதோ உங்கள் வலைபக்கத்தை சென்று பார்த்துவிடுகிறேன்.