ரொம்ப விரைவாக மட மட வென்று 41 பதிவு எழுதி ஆகிற்று எல்லாத்தயும் திரும்பி பார்க்கும் பொழுது பெரிதாய் ஒன்றும் சாதித்தாய் தோன்றவில்லை.
எதோ என்னை ஈர்க்கும் ஒன்று இரண்டு பதிவுகள் வாசிப்பாளர் யாரையும் ஈர்த்ததற்கான அறிகுறி தெரியவில்லை.
கலாச்சாரம் என்றால் என்ன?,கலாச்சாரம் ஏன் வேண்டும் ஆகிய பதிவுகளை மீண்டும் ஒருமுறை வாசிக்கும் பொழுது கொஞ்சம் இப்பொழுது அதன் மீதான கருத்து மாறி இருப்பது தோன்றுகிறது.
மாதவாஜ் அண்ணனின் "நடிகர்கள்" குறித்த பதிவை வாசித்து விட்டு அந்த தாக்கதிலயே எழுதிய "நடிகர்கள் அறிவற்றவர்களே" என்ற பதிவு என்மீதான சலிப்பை தருகிறது.
எனது கிறுக்கல் கோழிகள் ஒருபோதும் வாசிக்கபடுவதே இல்லை (அல்லது) வாசிப்பவருக்கு புரிவதே இல்லை.
ஒருமுறை என் கல்லூரி நண்பன் என்னை பார்த்து கூறியது "You are a peculiar person" என்று.அந்த Peculiarity க்கான அடையாளம் எனது பதிவுகளில் நானே காணவில்லை.
ஆக எழுதுவது ஒரு பதிவோ இரண்டு பதிவோ அது எனது எழுத்து படி எனது தனித்தன்மையின் படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் அத்தகைய பதிவை வெளி இடும் முன்னர் எண்திசை பதிவு என எனது பதிவுக்கான ஒரு ஒட்டு பதிவை வெளியிட்டேன்.
ஆனாலும் நேரம் என்னை எனது பதிவை எழுத அனுமதி தரவில்லை.சரி இப்பொழுது உள்ள நேரத்தில் விரைவில் எனது பதிவு தயாராகிறது.
நீங்கள் அனைவரும் என்னை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவை இடுகிறேன்.
மற்றும் ஒரு வேண்டுகோள் ..வாசிக்கும் நீங்கள் பினூட்டம் இடுவது என்னை மேலும் நல்ல முறையில் எழுத தூண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
2 comments:
எழுதுங்க தல... பின்னூட்டம் பின்னி எடுத்துரமாட்டோம்...
எழுதிட்டேன் ..சொன்னா படி ஒன்னுக்கு ரெண்டா நீங்க பின்னூட்டமும் இட்டு விட்டீர்கள் ..மிக்க நன்றி.
Post a Comment