16 Mar 2009

வாஞ்சிநாதன் வரலாற்று பிழையா?

கார்த்திகை பாண்டியன்(பொன்னியின் செல்வன்) அவர்களின் "எனக்கு பிடித்தவர்கள்" பதிவை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது.தனக்கு பிடித்தவராக அவர் "வாஞ்சிநாதனை" குறிப்பிட்டு இருந்தார்.

அவருக்காக "அருந்ததியர் வாழும் வரலாறு" புத்தகத்தில் மாற்கு அவர்கள் பதிவு செய்து இருந்ததை "புரட்சியாளர் பெரியார்" என்ற வலைப்பூவில் இருந்து இங்கே மீள்பதிவு செய்கிறேன் ...சம்பந்தம் உடையோர் கோபித்து கொள்ள வேண்டாம்.
எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும் , பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பதுதான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம். ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது , ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.

இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்.அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர். ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர். அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது. வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு, R. வாஞ்சி ஜயர்.


ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு . ஆசிரியர் : மாற்கு.

14 Mar 2009

செக்கடிகுப்பம் காணொளி காட்சிகள்(வீடியோ)

செக்கடிகுப்பம் காணொளி காட்சிகள் உங்கள் பார்வைக்காக

இவைகள் அனைத்தும் உலக தமிழ் மக்கள் அரங்கத்தின் சார்பாக செக்கடி குப்பத்தில் உள்ள பள்ளிக்கு மேற்கூரை கட்ட நன்கொடை அளிக்க சென்ற போது எடுத்த காணொளி காட்சிகள்.


காட்சி 1 -கோலாட்டம்


காட்சி 2 -சிலம்பம்


காட்சி 3-சிலம்பம்

காட்சி 4-சிலம்பம்(அரங்க தோழர்கள்)

காட்சி 5-சிலம்பம்

13 Mar 2009

பயமுறுத்தும் நாய்களிடம் கேட்க விரும்பும் 11 கேள்விகள்......

1)இரவெல்லாம் கூட்டமா தெரியும் நீங்க பகல்ல எங்க இருக்கீங்க?

2)பதினோரு மணிக்கு மேல பைக்குல போறவன தொரத்துறது பொழுதுபோக்கா?தொழிலா?

3)தெருவுக்கு தெரு கூட்டம் கூட்டமா இருகீங்களே ..உங்களுக்கு உள்ள சாதி பிரிவினையா?

4)உங்களுக்குனு சங்கங்கள் எல்லாம் இருக்காமே?

5)அதெப்படி திருடன்களை மட்டும் விட்டுருவீங்களா,திருடர்கள் துரத்தப்படுவது எங்களுக்குத்தான் தெரியலியா?

6)சைக்கோ கொலையாளி உங்க கூடத்தான் படுத்து தூங்குவானமே?

7)நீங்க பல்லை காட்டும் போது எச்சில் வருவது ஏன்?

8)வருசா வருஷம் உங்கள மாநகாராட்சி ஊழியர் புடிக்க வரப்ப உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

9)உங்களுக்கு போஸ்ட் கம்பத்தை பார்த்தா "சிறுநீர்" கழிக்க யார் சொல்லி கொடுத்தா?

10)பதிவர் எல்லாம் 18+ ஆக இருந்தாலும்,எங்க அப்பாவும் படிப்பதால் ..எனக்கு மார்கழி குளுரு தெரியுறது இல்லை .

11) இப்படி மொக்கையே இல்லாமல் மொக்கைதனமா பதிவுபோட நீங்கள் உதவுவதை என்ன நினைகிறீர்கள்?

11 Mar 2009

"வெந்தயம்"..ஒரு ஈ அடிச்சான் காப்பி

குறிப்பு : அட சில நல்ல விசயத்தை வெட்டி ஒட்டுனா தப்பு இல்லைன்னு தோனுச்சு ..அதான் வெட்டி ஒட்டிடேன் .

நன்றி : பாத்திமுத்து சித்தீக்

வெந்தயத்தில் தாவர சாஸ்திரப் பெயர் ட்ரைகோ நெல்லாஃபீனம் கிரேக்கம் (trigonella foerum graecum) என்பதாகும். ஃபீனம் கிரேக்கம் என்றால் கிரேக்க நாட்டு வைக்கோல் என்றும் ட்ரைகோனல் என்றால் முக்கோணம் என்றும் பொருள். காய்ந்த வைக்கோலைப் போன்ற வாசனையும் கால்நடைகளுக்கும் உணவாகப் போட கிரேக்க நாட்டிலிருந்து தருவித்துக் கொண்டிருந்தார்கள். ரோம் நாட்டவர்கள், இதன் வெண்ணிறப் பூக்கள் முக்கோண வடிவமுடையதாக இருக்கும். இதுவே இதன் பெயர்க்காரணமாக அமைந்திருக்கலாம்.

பிறப்பிடம்

ஆசிய நாட்டினராலும், மத்திய தரைக்கடல் நாட்டினராலும் பெரிதும் விரும்பி உணவாகவும், மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படும். இதன் பிறப்பிடம் கிழக்கு ஐரோப்பாகவோ, எத்தியோப்பியாகவோ இருக்கலாம். ஆரம்பத்தில் மேலை நாட்டவருக்கு இதன் மணம் பிடிக்காமலிருந்தாலும் காலப்போக்கில் மூலிகையாக பயிரிட்டு வந்துள்ளனர். வெந்தயத்தின் துளிர் இலைகளை கீரைபோன்றும் முதிர்ச்சியடைந்த விதைகளை மசாலாப் பொருளாகவும் உபயோகிக்கிறோம்.

வெந்தயக்கீரை

கீரை வகைகளில் மிகவும் குளுமையான வெந்தயக்கீரை, தாராளமாக சூரிய வெளிச்சமும், தண்ணீரும் கிடைக்குமிடத்தில் செழித்து வளரும். வருடா வருடம் விதைத்து வளர்க்கும் இந்த மூலிகைக் கீரை அதிக பட்சம் ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரும்.

உடலை ஆரோக்கியமாகவும் வயிற்றை சுத்தமாகவும் வைக்கும் வெந்தயக்கீரையில் உலக சுகாதாரக் கழகத்தின் (றாடி) கணிப்புப்படி இதன் புரதச் சத்தின் அளவு 65. நாம் உண்ணும் நூறு கிராம் அளவு கிரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது. இந்த அளவு வெந்தயக்கீரை 49 கலோரிச்சத்து தருகிறது.

வெந்தயக்கீரையோடு, பாசிப்பருப்பைச் சேர்த்து உண்பதால் கல்லீரல் பலப்படுகிறது. வாய் வேக்காடு வராமல் காப்பாற்றுகிறது. பருப்பு சேர்த்து சுவையாகத் தயாரிக்கப்படும் வெந்தயக்கீரையை நெய்சேர்த்து சோற்றோடு பிசைந்து சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானது. உப்பு, புளி, காரம் சேர்த்து வெந்தயக்கீரையை தொக்காக்கி பல நாட்களுக்கு பயன்படுத்தலாம். பருவத்துக்கு வரக்கூடிய பெண்களின் ரத்தவிருத்திக்கு அவசியமானது.

வெந்தயக்கீரையில் விட்டமின் ஏயும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம், நாள்பட்ட சொறி, சிரங்கு... என்று அத்தனைக்கும் அருமருந்தாகிறது. இக்கீரையை பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு புற்றுப் போட்டு வைப்பதால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.

சீஸனில் இந்தக் கீரையை நிறைய வாங்கி சுத்தப்படுத்தி, காயவைத்து, காற்றுபுகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொண்டு வருடம் முழுவதும் உபயோகிப்பதால் லைஸின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.

வெந்தயம்

வெந்தயத்தை அப்படியே உபயோகிப்பதால் கசப்பாகவும், விநோத வாசனையும் உடையதாக இருப்பதால் தான் இதனை வறுத்துப் பொடித்துப் பயன்படுத்துகிறோம். இதன் கசப்பு ருசியும், பாகற்காய் கசப்பைப் போல் ஒருவித ருசியாக நாவுக்குப் பழகிவிடுகிறது. இந்தக் கசப்பு ருசிக்குக் காரணமான க்ளைக்கோசைட்ஸ் (clycosides) வெந்தயத்தில் தூக்கலாக இருக்கிறது. நல்ல பசி கிளப்பியாக இந்த கசப்பு ருசி இருப்பதோடு உணவு ஜீரணத்துக்கு அத்தியாவசியமாக பித்த நீரை தாராளமாக சுரக்கத் தூண்டிவிடுகிறது. அசைவ உணவுக்காரர்களுக்கு இது நன்மை கூட்டுகிறது.

வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ, அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்தசோகை அண்டாது. நிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும், இதுவே நீரிழிவுக் காரர்களுக்கும் நல்லது.

தினமும் இரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை பொடித்தோ, முழுசாகவோ கொடுத்து வந்தால் ரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை ம்ட்டும் வடிகட்டிக் குடிக்கலாம்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கொடுக்கலாம்.

மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ரத்தப் போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது இழக்கும் தெம்பை மீட்க உதவும்.

நல்ல ருசியான உணவு தயாரிப்புகளின் வாசனை வந்தும்கூடி பசி கிளம்பாமலோ நாவில் ருசி மரத்துப் போயிருந்தாலோ கூட இதுவே மருந்து.

கணையம், கல்லீரல் வீக்கம், வயிற்றுப் போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல்... போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து. வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது, வெந்தயநீர் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். சிறுநீர்ப்போக்கை சீராக்கும்.

இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.

சமையலில்:

bullet தென்னிந்தியர்களின் சாம்பாருக்கு உபயோகிக்கும் மசாலாப் பொடியில் வெந்தயம் முக்கிய இடம் பெறுகிறது. சாம்பாரின் தூக்கலான வாசனைக்கு தூண்டுகோல் இதுவே. ஊறுகாய்களுக்கு உயிரூட்டும் வாசனையும் வெந்தயப் பொடியிலிருந்து தான். வங்காளிகளின் பாஞ்ச்ஃபோரன் எனும் ஐவகை மசாலாப் பொடியில் முக்கிய இடம் பெறுவதும் வெந்தயம்தான்.
bullet ஈரானியர்களிடையே பிரபலமாக உள்ள கோர்மே சப்ஜி காய்கறிகளை வேகவைத்து சாஸ் போன்று தயாரிக்கும் தயாரிப்பில் இடம்பெறும் மசாலாக்களில் ஒன்றாக இருக்கிறது.
bullet எத்தியோப்பியரின் மசாலாப் பொடியான பெரெபெரெயிலும் வெந்தயம் உண்டு.
bullet எகிப்து, எத்தியோப்பிய ரொட்டி தயாரிப்பிலும் வெந்தயப் பொடி இடம் பெறுகிறது.
bullet எகிப்தியரிடமும், மத்திய கிழக்கு நாட்டினரிடையே பிரபலமான பானம் ஹெல்பா என்பது. இது வெந்தயத்தை வேகவைத்த சாறில் சீனிபால் சேர்த்து பருகுவதாகும்.
bullet செயற்கை வெனிலா, செயற்கை மேப்பிள் சிரப் தயாரிப்புகளில் இடம் பெறுவதும் வெந்தயத்திலிருந்து எடுக்கப்படும் எஸ்ஸென்ஸ் தானாம்.

அழகுக் கலையில்

bullet பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.
bullet அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.
bullet பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.


10 Mar 2009

என்னவள்,செருப்பு,காதல்

இது ஒரு காதல் கதை....இல்லை இல்லை காதல் நிஜம்.

என்னவளோ பட்டணத்தில் படித்தவள்.

வைகை ஆற்றின் பாசனம் பெரும் ஒருவயலின் வரப்பில் அவள் தவறி விழுந்ததால் தவறாமல் நிகழ்ந்தது எங்கள் சந்திப்பு.

"செருப்பிட்டு வரவேணாம் வயலில்" என உதிர்த்தேன் அறிவுரையை.அதுவே வினை ஆகுமா?ஆனதே ...

அதே வரப்பில் தேவதை போல பட்டுடுத்தி..இல்லாத இடுப்பில் குடத்துடனும்,வலக்கையில் செருப்புடனும் அவள் ...

பளீர் என ஒரு அரை வாங்கினேன் காதலை சொல்லி....

அதன் பிறகு ஆத்தங்கரை ஓரம்,பெரு வரப்பு, சிறு வரப்பு என மாறாத பருவகாலம் போல மாறாமல் விழுந்தது செருப்படி.கடைசியாக செருப்பும் பிய்ந்தது,காதலும் கனிந்தது....செருப்படி பட்ட இடம் எல்லாம் செவ்விதழ் பதிந்தது பின்பொரு காலம் ...

அப்படி ஒரு காலத்தில் தான் ..காதல் கனிய சொன்னேன்."கழிவுகளில் பட்ட உன் செருப்பு படும் இடம் அவ்வளவு சுவையோ,இதழ்கள் இதமாய்
மேய்கின்றனவே"
..........

"பளார்...."என் கடவாய் பல்லு....."
..........
அன்றும் அப்படித்தான்...

நானும் அவளும் காலாட நடந்து ஆத்தங்கரை செல்லலாம் என உரைத்தேன்..

சரி என்றாள் அவளும்,என்றும் நான் கொண்ட காதலோடு ...அவளின் விரல் பற்றி ஒருவர் நடக்கும் வரப்பில் இருவர் நடந்தோம்..

வந்தது அவள் முதல் முறை இடறிய இடம்..காதல் கனிய நான் உரைத்தேன் "இங்கு தான் இறக்கை இல்லா ஒருதேவதை சேற்றில் குளித்தால் என்று"

பளார் ....சொத்...இனி நான் குளிக்கவேண்டும்.
...............

பிறிதொருநாள் நடந்தது இது ..நேற்று இரவு வாங்கிய பளாரில் பிய்ந்தே போய்விட்டது செருப்பு ..

கொண்டகாதலில் கொஞ்சமும் இடறாமல் வாங்கி வந்து இருந்தேன் அவளுக்கென அழகாய் ஒரு உயரமான குதிங்கால் செருப்பு .

செருப்பை நன்றாய் பார்த்துவிட்டு கேட்டாள் என்னவள் "எனக்கு ஏன் இவளவு உயரமான செருப்பு"

முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு நான் சொன்னேன் "நீ உயரம் பத்தாமல் என்னை அடிக்க கஷ்ட படுகையில்..மனது கஷ்டமாய் இருக்குறது" என்று ..

முன்னால் நகர்ந்து வந்து வந்து கட்டி அனைத்து ...

"அய்யய்யோ கடிக்கிறா ..."

"புது செருப்பு பிஞ்சா மனசு கஷ்டமா இருக்கும்" பிற்சேர்க்கையாக சேர்த்துக்கொண்டாள்.

9 Mar 2009

காதல் செடி



வேர்கள் வியாபித்து,
இலைகள் பரப்பி,
மொட்டெல்லாம் பூத்துக்குலுங்கும்,
கிளையெல்லாம் முள்ளாய் குத்தும்.

5 Mar 2009

சமூகம் செய்யவிருக்கும் கொலைகள்....

விரைவில் சமூகம் சில ,பல கொலைகளை செய்ய இருக்கிறது ..சமூகத்தின் அங்கத்தினரான நாம் அந்த கொலைபலி விழாமல் எப்படி நம்மை பாதுகாக்க போகிறோம்?

கண்முன் விரிந்து படர்ந்து விருட்சம் போல நிற்கும் கேள்வி இது ..


ஆம் பரீட்சை வேறு நெருங்கி விட்டது ....சில மாத காலங்களுக்கு பின்னர் முடிவுகளும் வந்து விடும் ..அப்படியே வரிசையாய் சில நாட்களில் சமூகமும் சில பல கொலைகளை செய்துவிடும்.

எப்படி தடுக்க போகிறோம்?இந்த முறையாவது செய்தித்தாள்களில் இப்படி ஒரு செய்திகளை வராமல் செய்ய இயலுமா?

இது சென்ற வருட செய்தி

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த 5 மாணவ, மாணவிகள் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. 84.4 ‌விழு‌க்காடு மாணவ‌ர்க‌ள் தேர்ச்சி அடை‌ந்தன‌ர். எஞ்சிய 15.6 ‌விழு‌க்காடு மாணவ‌ர்க‌ள் தோல்வி அடை‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள காடாநல்லூரை சேர்ந்த கவுதமன் என்ற மாணவ‌ர் ‌‌தீ‌க்கு‌ளி‌த்து த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்ட‌ா‌ர்.

இதேபோ‌ல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவனு‌ம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யா என்ற மாணவியு‌ம், ‌திருப்பூரைச் சேர்ந்த ரூபினி என்ற மாணவியு‌ம், ‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் ஊ‌ட்டியை சேர்ந்த கீதா என்ற மாணவியு‌ம் த‌ற்கொலை செ‌ய்து‌ள்ளன‌ர்

செய்தி-வெபதுனியா

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 14 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றப் பதிவுகள் கழகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனக்கும் கற்பிதம் செய்ய பட்டு இருந்தது பத்தாம் வகுப்பு வாழ்வில் மிக முக்கியமான தருணம் ..இது இல்லை எனில் வாழ்கையே இல்லை.அடுத்து பனிரெண்டு ....அங்கயும் அப்படியே ..

இதில் எந்த அளவு உண்மை உள்ளது?இப்படி சொல்வதனால் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை தவிர்த்து,மன அழுத்தத்தையே கொடுக்கிறோம்.

இதற்க்கு என்ன மாற்று என்பது எனக்கு தெரியவில்லை.வருடாவருடம் வரும் பருவகாலம் போல ..செய்தி தாள்களுக்கு இது ஒரு பருவகால செய்தி ஆகி விட்டது .நமக்கும் கூட ....

ஒவ்வொரு வருடமும் கொலை பலி எனில் விழுகிறது .நானும் தப்பித்து கொண்டே இருக்கிறேன் .

என்று தணியுமோ இந்த சமூகத்தின் கொலைத்தாகம் ...

முடிந்த அளவு நம்மால் இயன்ற வரை ..பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவோம் .இது மட்டுமே வாழ்க்கை இல்லை என புரியவைப்போம் .

தற்கொலைக்கு எதிரான அமைப்புகள் குறித்து யாருக்கும் பெரிதாய் தெரிவதில்லை .அமைப்புகள் தங்களை விளம்பர படுத்திக்கொள்ள ஏன் தயங்குகின்றன என தெரியவில்லை ..

சென்னை வந்த பிறகுதான் எனக்கு இந்த அமைப்புகள் குறித்து தெரியும்.
அதிலும் "சிநேகா" மட்டுமே நான் விளம்பரம் வழி பார்த்தது ...

உயிர்களை காப்பாற்ற ஏதேனும் முயற்சி செய்யலாம் நாம்..