என்னவளோ பட்டணத்தில் படித்தவள்.
வைகை ஆற்றின் பாசனம் பெரும் ஒருவயலின் வரப்பில் அவள் தவறி விழுந்ததால் தவறாமல் நிகழ்ந்தது எங்கள் சந்திப்பு.
"செருப்பிட்டு வரவேணாம் வயலில்" என உதிர்த்தேன் அறிவுரையை.அதுவே வினை ஆகுமா?ஆனதே ...
அதே வரப்பில் தேவதை போல பட்டுடுத்தி..இல்லாத இடுப்பில் குடத்துடனும்,வலக்கையில் செருப்புடனும் அவள் ...
பளீர் என ஒரு அரை வாங்கினேன் காதலை சொல்லி....
அதன் பிறகு ஆத்தங்கரை ஓரம்,பெரு வரப்பு, சிறு வரப்பு என மாறாத பருவகாலம் போல மாறாமல் விழுந்தது செருப்படி.கடைசியாக செருப்பும் பிய்ந்தது,காதலும் கனிந்தது....செருப்படி பட்ட இடம் எல்லாம் செவ்விதழ் பதிந்தது பின்பொரு காலம் ...
அப்படி ஒரு காலத்தில் தான் ..காதல் கனிய சொன்னேன்."கழிவுகளில் பட்ட உன் செருப்பு படும் இடம் அவ்வளவு சுவையோ,இதழ்கள் இதமாய்
மேய்கின்றனவே"
..........
"பளார்...."என் கடவாய் பல்லு....."
..........
அன்றும் அப்படித்தான்...
நானும் அவளும் காலாட நடந்து ஆத்தங்கரை செல்லலாம் என உரைத்தேன்..
சரி என்றாள் அவளும்,என்றும் நான் கொண்ட காதலோடு ...அவளின் விரல் பற்றி ஒருவர் நடக்கும் வரப்பில் இருவர் நடந்தோம்..
வந்தது அவள் முதல் முறை இடறிய இடம்..காதல் கனிய நான் உரைத்தேன் "இங்கு தான் இறக்கை இல்லா ஒருதேவதை சேற்றில் குளித்தால் என்று"
பளார் ....சொத்...இனி நான் குளிக்கவேண்டும்.
...............
பிறிதொருநாள் நடந்தது இது ..நேற்று இரவு வாங்கிய பளாரில் பிய்ந்தே போய்விட்டது செருப்பு ..
கொண்டகாதலில் கொஞ்சமும் இடறாமல் வாங்கி வந்து இருந்தேன் அவளுக்கென அழகாய் ஒரு உயரமான குதிங்கால் செருப்பு .
செருப்பை நன்றாய் பார்த்துவிட்டு கேட்டாள் என்னவள் "எனக்கு ஏன் இவளவு உயரமான செருப்பு"
முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு நான் சொன்னேன் "நீ உயரம் பத்தாமல் என்னை அடிக்க கஷ்ட படுகையில்..மனது கஷ்டமாய் இருக்குறது" என்று ..
முன்னால் நகர்ந்து வந்து வந்து கட்டி அனைத்து ...
"அய்யய்யோ கடிக்கிறா ..."
"புது செருப்பு பிஞ்சா மனசு கஷ்டமா இருக்கும்" பிற்சேர்க்கையாக சேர்த்துக்கொண்டாள்.
9 comments:
// "நீ உயரம் பத்தாமல் என்னை அடிக்க கஷ்ட படுகையில்..மனது கஷ்டமாய் இருக்குறது" என்று ..
//
இதுபோன்ற பெண்ணடிமைக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
(இனிமேல் பெண்ணுரிமைவாதிகளின் ஆதரவு எனக்குத்தான்)
இதுபோன்ற பெண்ணடிமைக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
(இனிமேல் பெண்ணுரிமைவாதிகளின் ஆதரவு எனக்குத்தான்)//
அப்ப என்னோட ஆதரவும் உங்களுக்கு தான்.நன்றி வருகைக்கு..
நல்லாக் கீது நைனா..!! லைட்டா எடிட் பண்ணி, ஷேப் பண்ணா, சூப்பரா ஒரு டமில் சிறுகதை வரும் கண்ணு...!!
நல்லாக் கீது நைனா..!! லைட்டா எடிட் பண்ணி, ஷேப் பண்ணா, சூப்பரா ஒரு டமில் சிறுகதை வரும் கண்ணு...!!//
மிக்க நன்றி அண்ணா ...அதையும் செய்து பார்த்து விடலாம் ..எல்லாவகையான பதிவுகளையும் இடுவது என முடிவாயிற்று ஆகவே ..கண்டிப்பாய் முயற்சிப்பேன் .கருத்துக்கு நன்றி.
ஹலோ நண்பா
" செருப்பு பிஞ்சிடும் " என்கிற வார்த்தையில் இவ்வளவு பெரிய ஸ்டோரி இருக்கா ?? சூப்பர் மா ?? இருவருக்கும் இடையில் இருந்த காதலை சொன்ன விதம் அருமை .... தேங்க்ஸ் கீப் இட் அப் ..........
அரட்டை அகிலன்
ஹலோ நண்பா
" செருப்பு பிஞ்சிடும் " என்கிற வார்த்தையில் இவ்வளவு பெரிய ஸ்டோரி இருக்கா ?? சூப்பர் மா ?? இருவருக்கும் இடையில் இருந்த காதலை சொன்ன விதம் அருமை ....
தேங்க்ஸ் கீப் இட் அப் ..........
அரட்டை அகிலன்
ஹலோ நண்பா
" செருப்பு பிஞ்சிடும் " என்கிற வார்த்தையில் இவ்வளவு பெரிய ஸ்டோரி இருக்கா ?? சூப்பர் மா ?? இருவருக்கும் இடையில் இருந்த காதலை சொன்ன விதம் அருமை ....
தேங்க்ஸ் கீப் இட் அப் ..........
அரட்டை அகிலன்
@அரட்டை அகிலன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...
ஹலோ நண்பா
" செருப்பு பிஞ்சிடும் " என்கிற வார்த்தையில் இவ்வளவு பெரிய ஸ்டோரி இருக்கா ?? சூப்பர் மா ?? இருவருக்கும் இடையில் இருந்த காதலை சொன்ன விதம் அருமை ....
தேங்க்ஸ் கீப் இட் அப் ..........
அரட்டை அகிலன்
Post a Comment