5 Mar 2009



சமூகம் செய்யவிருக்கும் கொலைகள்....

விரைவில் சமூகம் சில ,பல கொலைகளை செய்ய இருக்கிறது ..சமூகத்தின் அங்கத்தினரான நாம் அந்த கொலைபலி விழாமல் எப்படி நம்மை பாதுகாக்க போகிறோம்?

கண்முன் விரிந்து படர்ந்து விருட்சம் போல நிற்கும் கேள்வி இது ..


ஆம் பரீட்சை வேறு நெருங்கி விட்டது ....சில மாத காலங்களுக்கு பின்னர் முடிவுகளும் வந்து விடும் ..அப்படியே வரிசையாய் சில நாட்களில் சமூகமும் சில பல கொலைகளை செய்துவிடும்.

எப்படி தடுக்க போகிறோம்?இந்த முறையாவது செய்தித்தாள்களில் இப்படி ஒரு செய்திகளை வராமல் செய்ய இயலுமா?

இது சென்ற வருட செய்தி

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த 5 மாணவ, மாணவிகள் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. 84.4 ‌விழு‌க்காடு மாணவ‌ர்க‌ள் தேர்ச்சி அடை‌ந்தன‌ர். எஞ்சிய 15.6 ‌விழு‌க்காடு மாணவ‌ர்க‌ள் தோல்வி அடை‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள காடாநல்லூரை சேர்ந்த கவுதமன் என்ற மாணவ‌ர் ‌‌தீ‌க்கு‌ளி‌த்து த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்ட‌ா‌ர்.

இதேபோ‌ல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவனு‌ம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யா என்ற மாணவியு‌ம், ‌திருப்பூரைச் சேர்ந்த ரூபினி என்ற மாணவியு‌ம், ‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் ஊ‌ட்டியை சேர்ந்த கீதா என்ற மாணவியு‌ம் த‌ற்கொலை செ‌ய்து‌ள்ளன‌ர்

செய்தி-வெபதுனியா

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 14 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றப் பதிவுகள் கழகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனக்கும் கற்பிதம் செய்ய பட்டு இருந்தது பத்தாம் வகுப்பு வாழ்வில் மிக முக்கியமான தருணம் ..இது இல்லை எனில் வாழ்கையே இல்லை.அடுத்து பனிரெண்டு ....அங்கயும் அப்படியே ..

இதில் எந்த அளவு உண்மை உள்ளது?இப்படி சொல்வதனால் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை தவிர்த்து,மன அழுத்தத்தையே கொடுக்கிறோம்.

இதற்க்கு என்ன மாற்று என்பது எனக்கு தெரியவில்லை.வருடாவருடம் வரும் பருவகாலம் போல ..செய்தி தாள்களுக்கு இது ஒரு பருவகால செய்தி ஆகி விட்டது .நமக்கும் கூட ....

ஒவ்வொரு வருடமும் கொலை பலி எனில் விழுகிறது .நானும் தப்பித்து கொண்டே இருக்கிறேன் .

என்று தணியுமோ இந்த சமூகத்தின் கொலைத்தாகம் ...

முடிந்த அளவு நம்மால் இயன்ற வரை ..பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவோம் .இது மட்டுமே வாழ்க்கை இல்லை என புரியவைப்போம் .

தற்கொலைக்கு எதிரான அமைப்புகள் குறித்து யாருக்கும் பெரிதாய் தெரிவதில்லை .அமைப்புகள் தங்களை விளம்பர படுத்திக்கொள்ள ஏன் தயங்குகின்றன என தெரியவில்லை ..

சென்னை வந்த பிறகுதான் எனக்கு இந்த அமைப்புகள் குறித்து தெரியும்.
அதிலும் "சிநேகா" மட்டுமே நான் விளம்பரம் வழி பார்த்தது ...

உயிர்களை காப்பாற்ற ஏதேனும் முயற்சி செய்யலாம் நாம்..

No comments: