6 Jan 2009
49 - O வை பயன் படுத்துங்கள்.
நமது இந்திய அரசியல் நிர்ணயசட்டத்தின் 1969 ஆம் ஆண்டு சட்டத்தின் 49 -O பிரிவின் படி,ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்திய பின்னர் "தான் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை" என்பதை அங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்து விட்டு விரல் அடையாள மை பெற்றுக்கொண்டு வரலாம்.
ஆம் இந்த விடயத்தை பற்றி கூடுதல் விவரம் அறிந்தவர்கள் மக்களுக்கு எடுத்து செ/சொல்லுங்கள்.இந்த வாய்ப்பை அரசியல் வா(வியா)திகள் மூடி மறைப்பதாக தெரிகிறது.
"யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லை" என்று தெரிவிப்பதால் என்ன பயன்? ஒரு தொகுதியில் ஒருவர் 500 வாக்குகளில் வெற்றிபெறுகிறார் என கொள்வோம்.அதே தொகுதியில் இந்த 49 -O 500 விழுந்து இருந்தால் அத்தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கபட்டு மறு தேர்தல் நடத்த படவேண்டுமாம்.அது மட்டும் அல்லாது அப்போது தேர்தலில் நின்றவர்கள் மறுபடியும் தேர்தலில் நிற்க முடியாது.ஏனெனில் மக்கள் அவர்களுக்கு எதிராக தங்கள் விருப்பமின்மையை அறிவித்து விட்டனர்.
இதன் மூலம் அழுகிய அரசியல் கட்சிகளை அப்புறபடுத்த முடியும்.ஓட்டளிக்காமல் இருப்பதுவும் ஓட்டளிப்பதை விட நல்ல நன்மைகளை நாட்டுக்கு செய்திடும்.எனவே உங்கள் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.49 -O வை பயன்படுத்துங்கள்.
49-O வை பற்றி கூடுதலாக அறிந்தவர்கள் சொல்லுங்கள்.இதன் சாதக பாதகங்களை மேலும் அலசுவோம்.
பின் குறிப்பு :
இது மினஞ்சல் மூலமாக வந்த தகவல்.தகவல் அனுப்பிய அருண் பாண்டியன்,ஷ்யாம் அவர்களுக்கு எனது நன்றி.
தகவலின் மூலம் கீழே
http://yankandpaste.blogspot.com/2007/10/article-49-0-of-indian-constitution.html
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நானும் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
மக்கள் கை நீட்டி காசு வாங்கிட்டு இப்படி பண்ணிட்டா?? என்று சிலர் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
உங்கள் வருகைக்கும்,கருத்தினை இட்டமைக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார் அவர்களே.
Post a Comment