8 Jan 2009



நக்கிப்பிழைக்கலாம் ஊடகங்களே

தகவல் புரட்சியின் வளர்ச்சி அபரிவிதமானது.இருந்த இடத்தில் இருந்து கொண்டு எல்லா தகவல்களையும் பெரும் அளவுக்கு இன்று ஊடகம் வளர்ந்து விட்டது.ஆனால் அதன் மீதான நம்பிக்கை நேர்மாறாக உள்ளது.

உண்மையான தகவல்களை தேடி நாம் தான் புறப்பட வேண்டி உள்ளது.திரட்டிய உண்மை தகவல்களை கொண்டு சேர்ப்பதும் அதனை உண்மையென மக்களை நம்பவைப்பது அதனினும் கடினமாய் இருக்கிறது.புரட்டு ஊடகங்கள் பெரிதாய் தின்று கொளுத்து வளர்ந்த பன்றியை போல உள்ளன.

என்னதான் செய்கின்றன இந்த ஊடகங்கள் ?

பெரும்பாலான ஊடகங்கள்(தொலைக்காட்சி ஆகட்டும் ,செய்தி தாள் ஆகட்டும் ) கட்சி சார்பு உடையவை ஆகவே இருக்கின்றன.பெரும்பாலும் இவை அந்த கட்சிக்கு ஏற்புடைய செய்திகளையே வெளி இடுகின்றன .இதைகூட நம்மால் மக்களிடம் எடுத்து சொல்லிவிடலாம்.ஒருவகையான சிந்தனைகாவது இவர்கள் உட்படுவார்கள்.

செய்தித்தாள்களில் சில செய்திகளை பார்ப்போம்.கற்பழிப்பு செய்திகள் இல்லாமல் அவர்களால் இருக்கவே முடியாது.இந்த கற்பழிப்பு செய்தியினால் என்ன சொல்கிறார்கள் மக்களுக்கு??? மாறாக பாதிக்க பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் சொல்லனா துயரத்தையும் மன அழுத்தத்தையும் தான் கொடுக்கிறார்கள்.அதிலும் ஊரு,தெரு எல்லா தகவலையும் கொடுத்து பெயரை மட்டும் மாற்றி விடுவார்களாம்.

நேற்று ஒரு செய்தித்தாளில் கடைசி பக்கத்தில் வந்த செய்தி ..புறா திருடிய 14 வயது சிறுவன் கைது.இதன் மூலம் இந்த செய்தித்தாள் சாதித்தது என்ன?மன அழுத்தம் கொடுத்தது.புறா மீது ஆசை கொண்டு தவறு செய்த சிறுவனை திருடன் என நிரந்தர பட்ட தாரியாக ஆக்கியது.

செய்தித்தாள்களில் கூட உண்மையை சொல்லும் அடையாளம் தெரியா செய்தித்தாள்கள் இருக்கவே செய்கின்றன.

தொலைக்காட்சி ஊடகம் ...கேவலம்.எல்லா தொலைக்காட்சியின் குடுமியும் ஏதோ ஒரு குடுமி இடம் தான் இருக்கும் போல.

சென்ற புத்தாண்டு ஆண்டு அன்று இவர்கள் காட்டிய செய்தியில் எனக்கு ஒரு சந்தேகம்..இவர்கள் அந்த பெண்ணிற்கும் ஆதரவாக செய்தார்களா இல்லை ..அந்த பெண்ணை படம் பிடித்து காட்டினார்களா?? எங்கெல்லாம் அந்த பெண் மீது கைபடுகிறதோ அங்கெல்லாம் ஒரு வட்டம் போட்டு ,அம்புக்குறி இட்டு....

குடுமிக்கு ஒன்று என்றால் குதித்து ஓடிவரும் வடநாட்டை மையமாக கொண்ட ஊடகங்கள் எங்கே போயின "கயர்லாஞ்சி" சம்பவத்தில்?இங்கே எத்துனை பேருக்கு கயர்லாஞ்சி குறித்து தெரியும் என்றால் ..ஒரு பெரும் கேள்விக்குறியை முன்னிறுத்தி அதனுள் அடைந்து கொள்ளலாம்.

சில நாட்களுக்கு முன்னாள் எந்த தொலைக்காட்சி ஊடகத்தை பார்த்தாலும் சட்டக்கலூரி சம்பவத்தை தான் காட்டினார்கள்.இதே ஊடகங்கள் திண்ணியம் மலம் திணிப்பு சம்பவத்தை பற்றி ஒரு துரும்பாவது கில்லிபோட்டார்களா? இல்லை மேலளவு கொலை வழக்கு குறித்து தான் பேசினார்களா?

இதற்க்கு இவர்கள் நக்கிப்பிழைக்கலாம்..

உண்மையை சொன்னால் அதை தான் செய்கிறார்கள்.உண்மை நிலவரத்தை தேடி நாம் தான் அலையை வேண்டும்..

ஊடகங்கள் எங்கே,யாருக்கு ஆதரவாய் இருகிறார்கள்.அவர்கள் யாரென நாம் தெரிந்து கொள்வதும்,அதை எடுத்து செல்வதும் அவசியமாய் இருக்கிறது .....

7 comments:

Anonymous said...

yes,, media is ready for sensational news only...
not to help socitiy.

தோழன் said...

நண்பர்க்கு,
ஊடகங்களுக்கு என பொது நோக்கு உள்ளன?!.
பணம். பணம். பணம்.

மனிதத்தன்மைக்கு எதிராக லாபத்திற்காக என்ன வேண்டு மெல்லம் செய்யும்.

யார் செய்தியை முந்துவது.

இதில் மனிதமாவது மண்ணாங்கட்டியாவது ?

உங்களின் கருத்தில் ஒத்துப் போகிறேன்.

நன்றி.

மணிவர்மா

தோழன் said...

நண்பர்க்கு,
ஊடகங்களுக்கு என பொது நோக்கு உள்ளன?!.
பணம். பணம். பணம்.

மனிதத்தன்மைக்கு எதிராக லாபத்திற்காக என்ன வேண்டு மெல்லம் செய்யும்.

யார் செய்தியை முந்துவது.

இதில் மனிதமாவது மண்ணாங்கட்டியாவது ?

உங்களின் கருத்தில் ஒத்துப் போகிறேன்.

நன்றி.

மணிவர்மா

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி ராஜசேகர் அவர்களே...

நன்றி மணிவர்மா அவர்களே..

Robin said...

கிரிக்கெட் மற்றும் சினிமா சம்பந்தமான சமுதாயத்துக்கும் கொஞ்சமும் பயனில்லாத செய்திகளை திரும்ப திரும்ப வெளியிட்டு கிரிக்கெட் வீரர்களையும் சிநிமாகாரர்களையும் மனித குலத்திற்கு பெரும் அரும்பணி செய்பவர்களை போல சித்தரிக்கும் புனிதமான பணியையும் ஊடகங்கள் செய்து வருகின்றன.

ஆண்ட்ரு சுபாசு said...

கிரிக்கெட் மற்றும் சினிமா சம்பந்தமான சமுதாயத்துக்கும் கொஞ்சமும் பயனில்லாத செய்திகளை திரும்ப திரும்ப வெளியிட்டு கிரிக்கெட் வீரர்களையும் சிநிமாகாரர்களையும் மனித குலத்திற்கு பெரும் அரும்பணி செய்பவர்களை போல சித்தரிக்கும் புனிதமான பணியையும் ஊடகங்கள் செய்து வருகின்றன.//

அடடே மற்றும் ஒரு உண்மை..நன்றி ராபின் அவர்களே..

Anonymous said...

Migavum arumayaana pathivu andrew... [:D]
janu