2 Jan 2009
ஒதுக்கப்படும் மனித இனம்..
திருநங்கைகள் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது கூடவே எழுதவேண்டுமா என்ற சந்தேகமும் ஒட்டிகொண்டது.ஆனாலும் எழுதிவிடுவது என்று முடிவு செய்து விட்டேன்.திருநங்கைகளுடன் ஒருபோதும் பேசியது இல்லை.அவர்கள் குறித்த ஒரு தெளிவும் என்னிடம் இல்லை.ஏதோ ஒருவகையான எண்ணம் எப்பொழும் அவர்களிடம் இருந்து என்னை விலக்கியே வைத்து இருக்கிறது.
இந்த எண்ணம் எங்கு இருந்து வந்தது?ஏழாம் வகுப்புவரை அப்படி ஒரு பாலிடம் குறித்த எந்த ஒரு விடயமும் தெரிந்தது இல்லை எனக்கு.சரியாக எட்டாம் வகுப்புதான் என்று நினைகிறேன்.அறிவியல் ஆசிரியர் முதன் முதலில் "அலி","ஒம்போது" என்ற பெயரில் எனக்கு அந்த பாலினத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பிறகு அலியும்,ஒம்பதுவும் எங்களுள் ஒரு சகஜமான கெட்ட வார்த்தை ஆகி போகின.அதிகமாக எங்கள் ஊரில் நான் அவர்களை பார்த்தது இல்லை(பார்த்ததே இல்லை).பத்தாம் வகுப்பின் போது மேலும் திருநங்கைகள் குறித்த பேச்சு சகஜமாகி போனது.அவர்களின் உடலமைப்பு குறித்து பலரும் பேசிக்கொண்டு இருப்பர்.
கல்லூரி நாட்களில் தான் திருநங்கைகளின் பிழைப்பு குறித்து கொஞ்சம் நண்பர்கள் கூற கேட்டு இருகிறேன்.ஒருவித போக பொருளாக அவர்கள் பயன் படுவதாகவும்,தானும் பயன்படுத்தி இருப்பதாகவும் ஒரு நண்பன் கூறினான்.திருநங்கைகள் குறித்த வெறுப்பு சற்றே அதிகமானது.
சென்னைக்கு வந்த பிறகுதான் அதிகமாக திருநங்கைகளை பார்க்க நேர்ந்தது.முதல் முறையாக 47A பேருந்தில் அருகில்(எனக்கு முன் இருக்கையில்) திருநங்கையை பார்த்தேன்.இடை பட்ட காலங்களில்..சில வாசிப்புகளால் திருநங்கைகள் மீதான பார்வை சற்றே மாறி இருந்தது.
கடைகளில் காசுகேட்க வரும் போதும்,ரயிலில் காசு கேட்கும் போதும் பெரும்பாலும் கோவங்கள் எனக்கு வருவது உண்டு.கூடவே எந்த ஒரு அங்கீகாரமும் கொடுக்காத நாமும் தானே காரணம் என்ற எண்ணமும்.
இப்பொழுது அவர்கள் நிலைமை முன்னர் இருந்ததை காட்டிலும் பிறவாஇல்லை என்னும் நிலை.இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியின் எண்ணிலடங்கா ரசிகருள் நானும் ஒருவன்.காரைக்குடி(சரியாக நினைவில் இல்லை) பல்கலைகழகத்தில் அவர்களின் பாலினமும் சேர்க்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் "அதை" போய் எவன் பார்ப்பான் என இப்படிக்கு ரோஸ் நிகச்சியை புறக்கணிப்பவர்களையும் பார்த்து இருகிறேன் .இப்பொழுதும் கடைகளில் திருநங்கைகளை பார்க்கையில் என் கால்கள் விலகியே உள்ளன.இப்பொழுதெல்லாம் திருநங்கைகள் மனிதருள் ஒருவராய் தான் தெரிகிறார்கள்.திருநங்கைகளின் மனநிலையில் நான் எப்படி தெரிவேனோ..
எட்டாம் வகுப்பில் விதைக்க பட்ட விதை இன்று "விருட்சமாய் பாதி பட்டுப்போய்".அதே எட்டாம் வகுப்பில் இன்றும் ,அலிகளும்,ஒம்பதுவும் காற்றில் கலந்து கொண்டுதான் இருக்கின்றன .அவர்கள் மனதிலும்...
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
இப்பொழுதெல்லாம் திருநங்கைகள் மனிதருள் ஒருவராய் தான் தெரிகிறார்கள்.திருநங்கைகளின் மனநிலையில் நான் எப்படி தெரிவேனோ.///
அவர்களை நாம் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை
அவர்களை நாம் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை//
கண்டிப்பாய்.ஆனால் இன்றைய பள்ளி குழந்தைகளிடம் திருநங்கைகள் குறித்த தெளிவான பார்வை விதைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.உங்கள் கருத்துக்கு நன்றி ..கருத்துகள் என்னை மேலும் எழுத தூண்டும்.
என் சிறுவயது முதல் எங்களுடனேயே வளர்ந்த திருநங்கை ஒருவரை நான் அறிந்திருக்கிறேன்..அவர் குறித்து எந்த வேறுபாடும் நான் மற்றும் என்னை சார்ந்தவர் கொண்டதில்லை..அது ஒரு இயற்கையான செயல்..அவர்களை ஒரு தனியான பிரிவாக அடையாளம் காணுவதையும் காட்டுதலையும் தவிர்த்தாலே அவர்கள் இயல்பாக சமூகத்தில் பொருந்திவிடுவார்கள் அவர்களை அவர்களாக விட்டு விடுங்கள்..அவர்கள் வாழ்வார்கள்...
என் சிறுவயது முதல் எங்களுடனேயே வளர்ந்த திருநங்கை ஒருவரை நான் அறிந்திருக்கிறேன்..அவர் குறித்து எந்த வேறுபாடும் நான் மற்றும் என்னை சார்ந்தவர் கொண்டதில்லை..அது ஒரு இயற்கையான செயல்..அவர்களை ஒரு தனியான பிரிவாக அடையாளம் காணுவதையும் காட்டுதலையும் தவிர்த்தாலே அவர்கள் இயல்பாக சமூகத்தில் பொருந்திவிடுவார்கள் அவர்களை அவர்களாக விட்டு விடுங்கள்..அவர்கள் வாழ்வார்கள்...//
எனக்கு அவர்கள் ஒரு தனி சமூகமாகவே அடையாள படுத்தி காட்டபட்டு இருகிறார்கள்.மேலும் அவர்கள் வேறு பாலினம் என்பது பதிந்தே விட்டது என்பது தான் சிக்கலே.இதை எப்படி அடுத்த தலை முறையினரிடம் மாற்ற போகிறோம்?
//எனக்கு அவர்கள் ஒரு தனி சமூகமாகவே அடையாள படுத்தி காட்டபட்டு இருகிறார்கள்//
எனக்கும்தான்.ஆனால் என் கல்லூரி காலத்தில் நான் அவர்களை ஓரளவு புரிந்திருக்கிறேன்.இப்போது எனக்கு 'அவர்களும் மனிதர்கள்தானே' என்ற எண்ணம் மட்டுமே உள்ளது.
எனக்குள் இருக்கும் எண்ணம் என்னவென்றால் ,நான் ஏதேனும் தொழில் செய்தால் அவர்களுக்கு முன்னுரிமை தரத்தான் எண்ணி இருக்கிறேன்.
நன்றி சசி ரேகா அவர்களே...
அன்பு நண்பரே நல்ல பதிவு, நீங்கள் விஜய் டிவி பார்த்தால் உங்களுக்கு தெரியும், இப்படிக்கு ரோஸ் எனும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு திருநங்கை வெகு அழகாக கேள்விகளை கேட்கிறார், அவர் நன்றாக படித்து இருப்பார் என நினைக்கிறேன். உங்களை போன்றவர்களின் முயற்சியால், இன்னும் அதிக திருநங்கைகள் படித்து அரசாங்க வேலை கிடைத்தால், சமுதாயத்தில் அவர்களும், நன்றாக வாழ வழி கிடைக்கும், உங்கள் சமுதாய சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள்
அன்புடன்
ஜீவா
நன்றி ஜீவா ..அவரை குறித்து நன்றாக தெரியும் .அவர் கனடாவில் பட்ட படிப்பு முடித்தவர் ..தியாகராய நகரில் வசிப்பதாக என் நண்பன் கூறினான் .சிறுவயதில் என் நண்பன் அவரிடம் டியூஷன் பயின்று உள்ளான்.
Post a Comment