24 Mar 2009



வெள்ளத்தில் கரையாதது நினைவுகள் -4(இறுதி)

வாசிக்க

நினைவுகள் -1

நினைவுகள் -2

நினைவுகள் -3

அதன் பிறகு வீடு முழுவதும் சேறுகளும் சகதிகளும் நிறைந்து இருந்த காரணத்தால் என்னை அருகில் உள்ள ஊரான சிவந்திபுரம் அனுப்பிவிட்டு ..(அங்கு என் அத்தான் வீட்டில் தங்கி இருந்தேன்) வீட்டை சீரமைக்கும் பணியில் என் ஈடுபட்டனர்.

என் தங்கை,தாய்,தந்தை எங்கு இருந்தார்கள் என நினைவில் இல்லை ..
அதன் பின்னர் மீண்டும் பள்ளிவந்த பிறகு பல்வேறு வெள்ளம் குறித்த கதைகள் அரங்கேறின ..

கட்டிகொண்டே இறந்து போன ஜோடி ,பிள்ளைகளை பரண் மீது ஏற்றிவைத்து இருந்த பெற்றோர் என அது நீண்டு கொண்டே சென்றது.

அன்று இவைகள் ஒன்றும் பெரிதாய் தெரியவில்லை .இன்று நினைவுகளில் கொண்டு வரும் போது ஒரு சொல்லனா துயரத்தையும் கூடவே கொணர்கிறது.

இறக்கும் போது ஒரு மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை காட்டிலும் ..இயற்கை அணுவணுவாய் உங்கள் மரணத்தை கூறிகொண்டே கொலை செய்யும் போது எப்படித்தான் இருந்து இருக்கும் ?

ஐயப்பனுக்கும் அவன் அப்பாவுக்கும் இடையில் என்ன பேச்சு இருந்து இருக்கும்?

இல்லை கண்ணீர்களும் கதறல்களும் தான் இருந்து இருக்குமோ?

அவைகளுக்கு என்ன அர்த்தங்கள் இருக்கும்?


இது போல ஆயிரம் ஆயிரம் கேள்விகள் வெள்ளத்தின் நினைவுகளோடு எனில் கரையாமல் இருக்கின்றன.


வேறேதும் சொல்வதற்கு இல்லாமல் சிறு கண்ணீர் துளிகளுடன் என் அனுபவ பகிர்தலை முடிக்கிறேன்.

No comments: