19-Mar-2009டாக்டர் ஷாலினி,பிரபல பதிவர்களுக்கு வேண்டுகோள்

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்தாகிவிட்டன.இன்று மதியம் தேர்வு முடிந்து மகிழ்ச்சியாக செல்லும் மாணவ,மாணவிகளை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது ..நானும் கடந்து வந்த நிமிடங்கள் தானே இவை.பத்தாம் வகுப்பு தேர்வும் முடிவுறும் விரைவில்..

இந்த மகிழ்ச்சியில் செல்லும் இவர்களில் சிலர்தான் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.

இத்தகைய நிகழ்வுக்கு அடிப்படை காரணம் என்ன?தேர்வு முடிவுகளில் போது இவர்கள் எப்படி கையாள படவேண்டும்?தங்களை தேர்வு முடிவுகளுக்கு தயார் படுத்தி கொள்வது எவ்வாறு என்கிற ரீதியில் ஒரு பதிவை இடுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

டாக்டர் ஷாலினி அவர்களே உங்களிடம் இருந்து இது குறித்து ஒரு உளவியல் ரீதியான பதிவை எதிர்நோக்குகிறேன்.நீங்கள் பதிவு செய்து இருப்பின் "மீள் பதிவு" செய்ய கேட்டு கொள்கிறேன்.

என்னாலும் எழுத இயலும் ஆகினும் முழுவதுமாக பயனுள்ள பதிவாய் சென்றடைய வேண்டும் என்பதால் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

தாமிரா,மாதவராஜ் மற்றும் கார்க்கி அவர்களே உங்களை குறிப்பிட்டு அழைக்கிறேன்.

****(பிற்சேர்க்கை)****

இதில் ச்சின்னப்பையன்,வால்பையன்,அப்பாவி,வெட்டிப்பயல்,செந்தழல் ரவி,பழமைபேசி,பரிசல்காரன்,ஆளவந்தான்,ஆதவா என பலரும் அடக்கம் ....உங்களில் ஒருவரேனும் ஏற்பீர்கள் என்ற நம்பிகயிலயே இந்த பதிவு இடப்பட்டு உள்ளது(இந்த பினூட்டத்தை பதிவிலும் சேர்த்து விடுகிறேன் விரைவில்)

17 comments:

ஆண்ட்ரு சுபாசு said...

இதில் ச்சின்னப்பையன்,வால்பையன்,அப்பாவி,வெட்டிப்பயல்,செந்தழல் ரவி,பழமைபேசி,பரிசல்காரன்,ஆளவந்தான்,ஆதவா என பலரும் அடக்கம் ....உங்களில் ஒருவரேனும் ஏற்பீர்கள் என்ற நம்பிகயிலயே இந்த பதிவு இடப்பட்டு உள்ளது(இந்த பினூட்டத்தை பதிவிலும் சேர்த்து விடுகிறேன் விரைவில்)

ஆ.முத்துராமலிங்கம் said...

அக்கரையான பதிவு
பதிவர்கள் நிச்சயம்
இதை ஏற்று மன ஊக்க பதிவுகள்
இடவேண்டும் நானும் கேட்டுக்கொள்கின்றேன்

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி ஆ.முத்துராமலிங்கம் அவர்களே ..இதுகுறித்து உங்களால் நல்லதொரு பதிவு இட இயலும் எனில் இடவும் அண்ணா...

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு பதிவுக்கான வேண்டுகோள். இது தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில் வருவது மிகவும் சரியாக இருக்கும்.

ஆண்ட்ரு சுபாசு said...

அவளவு காலம் தாழ்த்தி சில நடந்த பிறகு பதிவிட்டு உபயோகம் இல்லையே ..பதிவுலக வாசகர்களின் வீட்டிலும் 12,10 தேர்வு எழுதியவர்கள் இருக்க கூடும்..உங்கள் கருத்துக்கு நன்றி மஞ்சூர் ராசா ..அடிக்கடி வரவும்.

ஆண்ட்ரு சுபாசு said...

பதிவர்கள் யாரும் ஏற்றுகொண்டீர்களா?!!!!!!

Anonymous said...

நல்ல வேண்டுகோள் பதிவு..

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி தூயா..உங்கள் வருகைக்கும்,கருத்துக்கு வலு சேர்த்தமைக்கும்...மீண்டும் மீண்டும் வருக

narsim said...

ஆண்ட்ரு “ச”பாசு..

நல்லெண்ணம்..

வெட்டிப்பயல் said...

நிச்சயம் எழுதறேன் ஆண்ட்ரு சுபாசு...
அழைப்புக்கு நன்றி :)

ஆண்ட்ரு சுபாசு said...

@வெட்டிப்பயல் & narsim

நன்றி அண்ணன்களே ..

தண்டோரா said...

நிச்சயம் சமூக அக்கறை கொண்ட பதிவு..முதலில் மாற வேண்டியது நமது கல்வி முறை..பின் நாம்(பெற்றொர்)..பந்தய குதிரைகளாக பிள்ளைகளை நிணைக்கிறோம்..அதன் பின் ஒப்பிடுதல்..இதுவே பிள்ளைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை தூண்டி எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகிறது..ஆண்டு தேர்வுக்கு ஒரு வருடம் முன்பிருந்து பெற்றொருக்கும் கவுன்சிலிங்க் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

தண்டோரா said...

நிச்சயம் சமூக அக்கறை கொண்ட பதிவு..முதலில் மாற வேண்டியது நமது கல்வி முறை..பின் நாம்(பெற்றொர்)..பந்தய குதிரைகளாக பிள்ளைகளை நிணைக்கிறோம்..அதன் பின் ஒப்பிடுதல்..இதுவே பிள்ளைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை தூண்டி எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகிறது..ஆண்டு தேர்வுக்கு ஒரு வருடம் முன்பிருந்து பெற்றொருக்கும் கவுன்சிலிங்க் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

ஆண்ட்ரு சுபாசு said...

நிங்கள் சொல்ல்வது சரி தண்டோரா அண்ணன் அவர்களே..உளவியல் சார்ந்தவர்கள் யாரேனும் இது குறித்து பதிவிட்டால் நன்று என்பது எண் எண்ணம்.

Thekkikattan|தெகா said...

ஆண்ட்ரு,

இதனை மனத்தினுள் கொண்டே சில வாரங்களுக்கு முன்பு ஒரு பதிவினை இட்டு வைத்தேன் அங்கு கூறப்பட்டிருக்கும் உதாரணம் வேண்டுமானால் வேறாக இருக்கலாம் ஆனால், தோல்வி பொருட்டு அறிந்து கொள்ளும் பாடம் என் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது...

அந்தப் பதிவு இங்கே நேற்றையவைகளின் கூட்டுத் தொகையே இன்றைய நான்!

கார்க்கி said...

சென்ற வாரம் முழுவது விடுப்பில் இருந்ததால் இதை கவனிக்கவில்லை சகா. என்னால் முடிந்ததை நிச்சயம் எழுதுகிறேன். அழைப்பிற்கு நன்றி. என்னால் நம்ப முடியவில்லை. :))

உங்கள் சமூக அக்கறைக்கு வாழ்த்துகள். சந்தோஷமாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது தற்கொலைகள் குறித்து பல மாதம் முன்பு நன எஉழ்தியதை படிக்கவும். இது என்னுடைய ஏழாவது பதிவு என்று நினைக்கிறேன்

http://www.karkibava.com/2008/10/blog-post_12.html

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி கார்கி அண்ணா ...உங்கள் பதிவை வாசித்தேன் ...பள்ளி மாணவர்கள் ,தேர்வு முடிவு மனநிலை ..தரப்படும் அழுத்தம் ..எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை ..ஒரு பதிவு ..அது தேர்வு முடிவின் போது மாணவ,மாணவியரை கையாளும் விதமாக இருக்க வேண்டும்.