16 Mar 2009



திரைப்படமும் நிறப்பிரிகையும்

வெகு சில நாட்களுக்கு முன்னர் எனது அக்கா குழந்தையை,வீட்டில் உள்ள குட்டி நாயுடன் நடத்தி கூட்டி சென்ற போது ..L.K.G படிக்கும் எனது அக்காள் மகள் எதிர் வீட்டில் இருக்கும் அவள் வயதை ஒத்த குழந்தையை பார்த்து சொன்னது "கருப்பு பாப்பா" ....

சட்டென ஒரு உணர்ச்சி தோன்றி மறைந்தது.எனது அக்காள் மகளை நான் கடிந்து கொண்டேன் அவ்வாறு கூற கூடாது என.

இது எங்கிருந்து வந்தது?யோசித்தபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது திரைப்படம்.சராரியாக திரைப்படம் பார்க்கும் கூட்டத்தை சார்ந்தவன் தான் நான் எனினும் எனக்கு பெரிதாய் ஒன்றும் விருப்பு இருந்ததில்லை ..அதிகமாக வெறுப்புதான் தமிழ் திரைப்படங்கள் மீது.ஒருவேளை நான் இப்படி எழுத அதுகூட காரணமாய் இருக்கலாம்.

அனைத்து கதாநாயகிகளும் வெள்ளையாய் தான் இருக்கிறார்கள்,மாநிறத்தில் கூட கதாநாயகிகளை கண்டு பிடிக்க முடிவது இல்லை.ரோஜா கூட கருப்பாய் இருந்து கலராய் மாறி விட்டார்.இப்போது பழைய கருப்பு நாயகர்கள் தவிர கதாநாயகர்கள் கூட கருப்பாய் வருவது இல்லை.

படிப்படியாக இதை யோசிக்கையில் அடுத்தபடியாக மூளைக்குள் தோன்றிய பெயர் "கவுண்டமணி".அவர் தெரிந்து செய்தாரோ, இல்லை தெரியாமல் செய்தாரோ ..கருப்பு நிறத்தின் மீதான வெறுப்பை உமிழ்ந்ததில் அவரின் பங்கு கணிசம்.

அப்படியே அப்பரிக்கா மீதும் கூட அவருக்கு என்ன வெறுப்போ?இதை கவுண்டமணி அவர்கள் மீதான தனிப்பட்ட விமர்சனமாக கொள்ளவேண்டாம் ..வெகு ஜன ஊடகமான திரைப்படத்தில் என்னோட மூளைக்கு எட்டியவர் அவர் அவ்வளவே ...

பெரும்பாலான படங்களில் அவர் கூறும் வசனங்களில் "கரிச்சட்டி தலையா","கருவாயா","ஆப்ரிக்கா மண்டையா" மற்றும் "அப்ப்ரிகா காட்டுக்குள்ள புறக்க வேண்டியவன் எல்லாம் இங்க பொறந்து ஏண்டா என் உயிரை வாங்குறீங்க"...எப்படியாவது வந்து விடும்.

உண்மையில் சிறந்த நகைச்சுவை நடிகரான அவர் சில முறைகளே இதை சொல்லி இருக்க கூடும் ..ஆனால் இன்றளவும் அது சென்றடைந்து இதுக்கும் பரப்பளவு விசாலமானது.

வெகு முன்னர் "சங்கர்" அவர்களும் சிவாஜி படத்தில் அங்கவை,சங்கவை கதாபத்திரங்களில் இதையே செய்து இருந்தார்."ஐஸ்வர்யா ராயை" பிடிக்கும் பலருக்கும் "நந்திதாதாஸ்" ஐ பிடிப்பது இல்லை ...

இந்த கருப்பின் மீதான திரைப்படம் பூசும் இந்த வெறுப்பு என்றேனும் அடங்குமா?

குறிப்பு : திரை ஊடகத்தில் பலரும் இந்த கருப்பின் மீதான வெறுப்பை உமிழ்ந்து இருக்கலாம் ..எழுதவேணும் என தோன்றிய உடன் என் சிறிய மூளைக்கு எட்டியது இவ்வளவே.

8 comments:

முரளிகண்ணன் said...

நல்ல கேள்வி.

இதில் பல அரசியல்கள் உள்ளன. இதை மேலோட்டமாக அணுக முடியாது.


தொடருங்கள்.

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி முரளிகண்ணன் அவர்களே ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல பதிவு ஆண்ட்ரு... தேவையான சிந்தனை.. தொடருங்கள்..

ஆண்ட்ரு சுபாசு said...

கண்டிப்பாய் கார்த்திகை பாண்டியன் அவர்களே ..உங்களை போன்றோர்களின் ஆதரவு சிந்தனைக்கு மேலும் வலு சேர்க்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

ஜானு... said...

Migavum Arumayana Pathivu Andrew

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி ஜானு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

அப்பாவி தமிழன் said...

சரியான சவுக்கடி , கருப்பாக வந்து இன்று வெள்ளை நிற பெயிண்ட் அடித்தவர்கள் ஏராளம் , அதில் வடிவேல் மற்றும் சினேகாவை முக்கியமாகக் குறிப்பிடலாம்

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி அப்பாவி தமிழன் அவர்களே...