
நாட்காட்டியில் நாட்களை அசைபோடுகிறேன்,
எனக்கு அவள்மேலே விருப்பொன்றும் இல்லை,
அவ்வண்ணமே வெறுப்பும் இருந்ததில்லை,
ஏதோ அவளால் நான் வாழ்ந்துவந்தேன்,
இல்லை இல்லை நானும் வாழ்ந்தேன்.
இன்று அவளால் விரும்பப்படுபவனாய் நானில்லை,
என்னவோ உடம்பு சரிஇல்லையாம் அவளுக்கு.
அவளால் "பெரிதும் வாழ்பவனுக்கு" பாதிப்பாம்,
என்னை தள்ளி வைத்துவிட்டாள் வேண்டாமென.
அவ்வாறே நாட்காட்டிகளை முன்னோக்குகிறேன்,
அவ்வண்ணமே வேறேவளுக்கும் என்னை பிடிக்குமா?
No comments:
Post a Comment