இது என் வாழ்வின் சொந்த அனுபவம்.எனது ஏழு வயதின் போது தாமிரபரணி ஆற்று வெள்ளத்தை சந்தித்த அனுபவம்.ஒரே கட்டுரையில் முடிக்க இயலும் எனினும் இரண்டு கட்டுரையாக தருகிறேன்.
1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மின்சாரமில்லா அந்த இரவில் இருந்து இன்றுவரை என் நினைவில் அழியாத வண்ணம் இருக்கும் நினைவுகளுக்கான பயணம் ஆரம்பமானது.
ஒரு மெழுவர்த்தி வெளிச்சத்தில் அம்மா சுட்டு தந்த தோசை உடன் ...ரேடியோ பொட்டி "தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்" என்ற செய்தியோடு அணைக்க பட்டது.தோசைகள் இறங்கிய பின்னர் ..
வழக்கம் போல ஒரு இரவாகவே இருக்கும் என்ற எண்ணத்தோடு ..புதிதாய் வாங்கிய "மீன் படம்" இட்ட புதிய நோட்டை அலமாரியில் பத்திரப்படுத்தி விட்டு படுக்கைக்கு சென்றேன்.
நள்ளிரவு நேரம் ..சிறுநீர் கழிக்கும் அவசரம் "அப்பா ஒன்னுக்கு வருது" ..இருளின் பயத்தை போக்க அப்பா துணைக்கு வருவதாய் சொன்னவுடன் ..சலசலக்கும் நீரில் என் சிறு பாதம் பதிந்தது.
"அப்பா தண்ணியா இருக்கு" ..
சமையலறையில் தரையில் படுத்து இருக்கும் ஆச்சிக்கு எப்படி தெரியவில்லை என்ற படபடப்புடன் பரபரக்க ஆரம்பித்தது எங்கள் வீடு ..
ஏனோ தெரியவில்லை முட்டிக்கொண்டு இருந்த சிறுநீர் எங்கே போனதென்று ..
தலையணைக்கு அடியில் வைத்து இருந்த வீட்டு சாவியோ காணவில்லை.உயிரின் பயம் என்னை ஆட்கொண்ட தருணம் அது ..கண்டிப்பாய் இருந்த அனைவரையும் ...இரண்டு வயது குழந்தையாம் என் தங்கையை தவிர..
ஒரு சப்தத்தில் அனைவரும் முளித்துகொண்ட தருணம்... வயதான என் தாத்தா,ஆச்சி,அப்பா,அம்மா, மற்றும் நான் என வார்த்தைகளால் விளக்க முடியாத எண்ணத்தில் உழன்ற நிமிடங்கள் அவை.."சொல்லி தெரிவது இல்லை மன்மதக்கலை" ..ஆம் அது போலவே "சொல்லி தெரிவது இல்லை மரண பயமும்"
மாதம் முழுவதும் பெய்த மழையில்,நிறைத்து வழியதுடித்த அணைகட்டாம் "காரையாறு" அணைக்கட்டில் திறப்பானை திறவ இயலாமல் ..மிதந்து வந்த மரம் அடைத்ததால் வந்த துடிப்புகள் இவை..
இருக்கும் எதன் மதிப்பும் தெரிவதில்லை அதை நாம் இழக்கும் வரை ....அன்றைய மாலையில் பள்ளியில் "பேய்கதை சொன்ன" நண்பன் ஐயப்பனை "பேயாக்கி விட்டு" சென்ற இரவு வெள்ளம் அது ....
(தொடரும்..)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்ல பதிவு ...தொடருங்கள்
நன்றி மூர்த்தி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..
//ஏனோ தெரியவில்லை முட்டிக்கொண்டு இருந்த சிறுநீர் எங்கே போனதென்று ..//
அனுபவிது எழுதியுள்ளீர்கள்
தொடருங்கள்.
@ஆ.முத்துராமலிங்கம்
அனுபவிது எழுதியுள்ளீர்கள்
தொடருங்கள்.//
நன்றி அண்ணா ..உங்களை போன்றவர்களின் ஊக்குவிப்பு மிகவும் அவசியம் ஆகிறது...
Post a Comment