19 Mar 2009



என்னுடன் பேசியது பேயா?-நேர்ந்த நிகழ்வும் சந்தேகமும்.

சரியாக திங்கள் கிழமை(16/03/2009) காலை 4.30 மணி அளவில் அறைக்கு வந்து சேர்ந்தேன்.(ஒரு சிறு வேலையாக வெளியில் போய் இருந்தேனுங்க)

வந்தது அதிகபடியான அலுப்பு இருக்கவும் படுத்துகொண்டேன்.ஒரு பத்து நிமிடங்கள் தான் இருக்கும்..

தெளிவாக எனது இரண்டு புறமும் ..காலில் கொலுசுகள் அணிந்த படி யாரோ ஓடுவதுபோல உணர்ந்தேன்.ஆனால் என்னால் சற்றும் அசையமுடியவில்லை .மிகுந்த கஷ்டத்திற்கு பிறகு அசைய இயன்றது.

முழித்து பார்த்தல் யாரும் இல்லை.எனக்கோ பயம் தொற்றிகொண்டது.இப்பொழு நான் தங்கி இருக்கும் வீடானது 7 வருடங்கள் புழக்கத்தில் இல்லாமல் இருந்தது.

காரணம் ,ஏழுவருடங்களுக்கு முன்னர் இந்த வீட்டில் வரதட்சணை கொடுமை காரணமாக ஒரு பெண் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தாளாம்.

அந்த நினைவு வரவே பயம் இன்னும் தொற்றிகொண்டது..ஆக என் அருகில் இருந்த "பாலாவின்" பக்கம் திரும்பி படுத்து கொண்டு அவனது கையின் மிக அருகில் என் கையை வைத்துக்கொண்டு தூங்கலானான்.

மீண்டும் அதே சப்தம் ..அதே போல யாரோ ஓடுகின்ற சப்தம்...சரி பாலாவை எழுப்பலாம் என என் கையை அசைத்துபார்த்தால் இயலவில்லை.இத்தனைக்கும் அவனது கை மிக அருகில்...சில நேர போராட்டத்திற்கு பின்னர் சற்று அசைக்க முடிந்தது ..ஆனால் இப்போது சப்தங்கள் இல்லை.

பயம் மேலும் அதிகரிக்கவே பாலாவை எழுப்பவா என யோசித்து பின்னர் வேண்டாம் என முடிவு செய்தேன்.சரி இம்முறை சிறிது நேரம் கண்ணை திறந்து கொண்டு இருப்போம் என முடிவு செய்து படுத்தேன்.

இந்தமுறை கண்ணை திறந்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண் என் காதில் வந்து ஏதோ பேசுவது போல உணர்ந்தேன் ...நிச்சயமாக நான் உணர்ந்தேன்.ஆனால் என்ன பேசினாள் எனபது எனக்கு தெளிவாய் இல்லை.

அதற்க்கு பின்னர் தூங்க வேண்டாம் என்று முடிவு செய்து சிறிது நேரம் எழுந்து அமர்ந்து விட்டு ..காலை ராஜேஷ் முழித்த பிறகு நான் தூங்கலாநேன்.

யாரேனும் இப்படி அனுபவ பட்டது உண்டா?

இது நடந்ததுங்கோ..மேற்படி உங்கள் தகவலுக்கு ..எனக்கு பேய்,கடவுள் இரண்டு நம்பிக்கையும் கிடையாது ..ஆனால் இப்படி நிகழ்ந்ததுக்கு என்ன காரணம்??????

8 comments:

DHANS said...

ஆழ்ந்த தூக்கத்திலோ இல்லை மிகுந்த உடல் அயர்ச்சியிலோ இருந்தால் சில சமயம் கை கால்களை அசைக்க முடியாமல் போகலாம்.

எனக்கு சில சமயம் இப்படி சப்தம் கேட்டது உண்டு ஆனால் தீர ஆராய்ந்து பார்த்தால் மின் விசிறி சத்தம், இல்லை என்றால் அருகில் வெளியில் இருக்கும் மாற இலைகள் எதிலாவது உறைவது போன்று இருக்கும்.

பே என்றால் எதுக்கு உங்களை மட்டும் வந்து பார்க்க வேண்டும்??

ஆண்ட்ரு சுபாசு said...

அதுபோலவே இருக்கும் என நான் நம்புகிறேன்..ஆனால் கண்ணை முழித்து இருக்கும் போது எப்படி?ஏதும் அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்குமா?

ஏனெனில் ஒருமுறை டிஸ்கவரி தொலைகாட்சியில் மின்காந்த அலைகள் மூலமாக வெள்ளை நிற காட்சிகள் குறுப்பிட்ட கோணத்தில் தெரியகூடும் என சொன்னார்கள்.

மற்றபடிக்கு சிறுவயது முதல் பேய் என்ற ஒன்று இருப்பதாக நம்பிவன்ததன் விளைவே இந்த பயங்கள் எல்லாம்..

உங்கள் வருகைக்கும் ,பகிர்வுக்கும் நன்றி DHANS

சயந்தன் said...

.ஆனால் என்னால் சற்றும் அசையமுடியவில்லை//

இது பரவலாக பலருக்கும் நடப்பதுதான். ஆழ்ந்த உறக்கத்தின் பிறகான விழிப்பு நிலையில் மூளையின் ஆணையை நமது அங்கங்கள் பெறுவதில் ஏற்படும் தாமதம் இதற்கு காரணம் என்கிறார்கள்..

மற்றும்படி பேய் வந்து கதைத்தது பற்றி தெரியவில்லை :(

ரா ரா.. என்றேதாவது பாடியதா :)

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி சயந்தன் ..நீங்கள் கூறியது போலவே அசதிதான் அது ..எனக்கும் மறுபடியும் வந்து பேசியதுதான் கொஞ்சம் பயமுறுத்தியது ..கண்டிப்பாய் ஏதேனும் அறிவியல் காரங்கள் இருக்கும்...

I said...

Hi,

It is called sleep paralysis and is commonly observed. You can go here to read more about it:
http://www.stanford.edu/~dement/paralysis.html

-Indra

I said...

Hi,

It is called sleep paralysis and is very common. Go here to read moe about this:
http://www.stanford.edu/~dement/paralysis.html

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி இந்திரா அவர்களே..

ஆண்ட்ரு சுபாசு said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழியே.