அறிவை எதை கொண்டு அளப்பது?உங்கள் சிந்தனைகள்,சிந்தித்ததன் விளைவாக வரும் வார்த்தைகள் ஆகியவை கொண்டு அளக்கலாம்.ஒருவேளை அது தவறு என நினைத்தீர்கள் எனில் நீங்கள் தயவு செய்து "அறிவாளி","முட்டாள்" என்ற சொற்களின் பயன்பாடு குறித்து ஒரு பதிவு இடலாம்.
முந்தய தலைமுறையில் மக்களுக்கும் சமூக பார்வை இருந்தே இருக்கிறது.நடிகர்களுக்கு பெரும்பாலும் சமூக பார்வை இல்லை .அவர்களின் தாக்கமே இன்றைய மக்களின் மனநிலை.
"சமூகபார்வைக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு?" என நீங்கள் கேட்டு இருப்பது உங்கள் பின்னூட்டத்தில் வந்து இருப்பது போல நகைப்புக்கு உரியதாய் இருக்கறது.
அறிவு முதிர்ச்சி பெறாத குழந்தையின் சமூக பார்வையும்,வளர்ந்தவர்களின் சமூக பார்வையும் வேறுபடும் என்பதை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன்.
சினிமா என்பது கலை,கலை கலையே...நீங்கள் வியாபாரம் என கொள்வதானால் "கலை சேவை வரி" என்ற ஒன்று எதற்கு?சரி அப்படியே வியாபாரம் எனில் சினிமா படங்கள் குறித்து விமர்சனம் எழுதுபவர்களிடம்..இன்று கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரம் குறித்தும் விமர்சனம் எழுத சொல்லலாமே.ஏன் இந்த ஓரவஞ்சனை பதிவர்களுக்கு?(உங்கள் கருத்தின் படி)
அட இவர்கள் பொய் சொல்வதை கண்டு அவர் வருத்த படுவதில் என்ன தவறு இருக்கிறது?இன்று விஜயோ,சிம்புவோ இளைஞர் வட்டத்தில் பிரதிபலிப்பது இல்லை என்று நீங்கள் கூறி விட முடியுமா?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆதங்கம்.ஒரு நல்ல கருத்தை சொல்வதால்(அவர்கள்) பெரும்பான்மையானவர்களை போய் சேருமே.அதை விடுத்து ..வாழ்கை ஒரு வட்டம்,சதுரம் என்று சொல்லிக்கொண்டு இருப்பது அடுக்குமா?
பெரியார் சொன்ன கருத்துக்களால் தான் இன்று சமூகம் கொஞ்சமேனும் மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.குஷ்பு சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் சமூகம் மாறவிடாமல் செய்ததே இந்த நடிகர்களின் வேலை தானே.
சீமான் மட்டும் உள்ளே இல்லை..சரி இன்று அவர் சொன்னதால் ஈழம் பற்றி அநேகர் அறிந்து உள்ளனர் தெரியுமா?ஈழம் பற்றி நான் நோக்க ஆரம்பித்ததே அண்ணன் சீமானின் பேச்சுக்கு பின்னர்தான்.
நடிகர்கள் மோர் பந்தல் அமைக்க சொன்னால்,புத்தகம் விநோகிக்க சொன்னால் செய்ய மக்கள் கூட்டம் இருக்கும் போது அவர்கள் சொன்னால் இதை செய்யவும் கூட்டம் இருக்கும்.
இரண்டு படம் வெற்றி பெற்றுவிட்டால் அரசியலுக்கு வரநினைப்பது தவறு என சொல்வதும் ஆதங்கமே..மக்கள் பிரச்சனை என்ன என்று தெரியாமல் ஒருவன் அரசியலுக்கு வருவது தவறு என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?அதற்குரிய எந்த ஒரு தகுதியும் இல்லாமல் இருப்பது அறிவிலாமல் இருப்பது தானே?
ஒருவர் தான் சார்ந்து உள்ள தொழிலோ,வேறு தொழிலிலோ அடுத்த கட்டத்திற்கு நகர நினைப்பதில் தவறே இல்லை ..ஆனால் ஒரேடியாக தாவ நினைப்பது?
அவர் ஒன்று மக்களை அவமான படுத்தி கூறவில்லை.நீங்களே கொஞ்சம் யோசிக்கவும்..அவர் கூறி இருப்பதன் பொருட்டு நடிகர்கள் மக்களை இழி பிறவிகளாக எண்ணுகிறார்கள் என்பதே.
விஜய்,சிம்பு இன்ன பிற நடிகர்களின் படங்கள் குறித்த படங்கள் தரும் மனநிலை தாக்கம் குறித்து நாம் தெளிவாய் ஆராய்ந்தால் இழிபிறவியாய் யார் யாரை எண்ணுகிறார்கள் என்று தெரிந்துவிடும் தெளிவாய்.
நாங்கள் நாசமாய் போவதற்கு யாரும் காரணமாய் இல்லை.ஒருவேளை அவர்(மாதவராஜ்) நாசம் போய் இருப்பார் எனில் இப்படி ஒரு பதிவை அவர் எழுதி இருக்க மாட்டார்.பலர் நாசமாய் போய் கொண்டு இருப்பதற்கு இவர்கள் காரணமாய் உள்ளனர் என்பதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
கலை துறையை பொறுத்த அளவில் ரசனை என்பதை சமூக நலன் சார்ந்த கண்ணோட்டம் என கொள்ளலாம்.வினவு பதிந்த "பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி" வாசித்தால் கொஞ்சம் உங்களுக்கு புரியும் என நினைகிறேன்.
பனிரண்டு மணிநேரம் மில்லில் வேலை பார்ப்பவன் எத்தகைய படம் பார்பான் என்பது நீங்களோ,நானோ,நடிகனோ முடிவு செய்ய வேண்டிய விஷயம் அல்ல...ரசனைக்குரிய படங்கள் வந்தாலே போதும்.
குழந்தைகளுக்கென எத்துனை படங்கள் வந்து இருக்கும் தமிழில் இதுவரை?
படங்கள் குற்த்து விமர்சனங்கள் எழுதும் போது..இத்தகைய படங்கள் தரவேண்டும் என்று விமர்சிப்பதற்கும் உரிமை உண்டு அல்லவா?சனநாயக நாடு என்று கூறப்படும் நாடுதானே இது?
4 comments:
இப்பத்தான் அதுசரி வீட்டுக்குப் போய் வந்தேன்!துண்டு போட்டுக்கவா?
ungal pathivu nalla irukku
cine tamil
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ நடராஜன் அவர்களே...துண்டு போட்டதை நான் பார்தேனுங்க
ilhamaran (எப்படி உச்சரிக்க?) நன்றி உங்கள் பதிவுக்கும் வருகைக்கும் நண்பரே..
Post a Comment